ஹேமலதா குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமலதா குப்தா
பிறப்பு25 சூன் 1943
தில்லி
இறப்பு(2006-05-13)13 மே 2006
கரோல் பாக்
பணிமருத்துவர்
மருத்துவக் கல்வியாளர்
அறியப்படுவதுமருத்துவக் கல்வியாளர்

ஹேம்லதா குப்தா (Hemlata Gupta) (25 ஜூன் 1943 - 13 மே 2006)[1] ஓர் இந்திய மருத்துவரும், புதுதில்லியின் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறை இயக்குநரும் தலைவரும் ஆவார்.[2] இவர், லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ( தில்லி பல்கலைக்கழகம் ) மருத்துவம் பயின்றார். பின்னர் அதன் இயக்குனரானார்.[3] 1998ஆம் ஆண்டில் இந்திய அரசு இவரது மருத்துவ அறிவியலுக்கான பங்களிப்புக்காக மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.[4] திருமணமாகாத இவர் புதுதில்லியில் வசித்து வந்தார். கரோல் பாக்கில் உள்ள தனது இல்லத்தில் 13 மே 2006 அன்று கொலை செய்யப்பட்டார்.[5] [6] பல வருட விசாரணைக்குப் பிறகும், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது.[7] [8]

மருத்துவப் பங்களிப்புகள்[தொகு]

குப்தாவும் இவரது சகாக்களும் சேர்ந்து இந்திய மருத்துவ இதழில் மிக அரிதான தைராய்டு சுரப்புக் குறையில் காச நோய் பற்றி ஒரு ஆய்வை வெளியிட்டனர்.[9] கட்டுரை நோயாளியின் விளக்கக்காட்சி, நோயறிதலில் பயன்படுத்தப்படும் பல்வேறு சோதனைகள், வழக்கின் வரலாற்று விவாதம், சிகிச்சை முறைகள் பற்றி விவாதிக்கிறது.

பத்ம பூசண்[தொகு]

பத்ம விருதுகள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகின்றன. [10] ஹேமலதா குப்தா 1998ஆம் ஆண்டில் மருத்துவப் பிரிவில் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றார். இந்தியக் குடியரசுத் தலைவரின் கையொப்பம் அடங்கிய சான்றிதழுடன் பதக்கத்தையும் பெற்றார். [11]

கொலை[தொகு]

குப்தா, கைகள் கயிற்றால் கட்டப்பட்டும், வாய், மூக்கு, கண்கள் அறுவைசிகிச்சை நாடாவால் மூடப்பட்டும், தொண்டை வெட்டப்பட்ட நிலையில் தனது பிரசாத் நகர் குடியிருப்பில் இறந்து கிடப்பதை காவலர்கள் கண்டுபிடித்தனர்.[2][5] இவர் கொலை செய்யப்பட்ட அன்ரு காலை 10:30 மணியளவில் தனது குடியிருப்பில் நுழைந்ததையும், அதே நேரத்தில் 2 ஆண் பார்வையாளர்கள் வந்ததையும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். ஒரு மணி நேரம் கழித்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர்.[6] கொலைக்கான தொடர்புகள் ஒரு செய்தித்தாள் திருமண விளம்பரத்திலும், வசந்த் குஞ்சில் உள்ள இவரது குடியிருப்பில் இவரது பெயரையும் சுற்றி வருகிறது. குப்தாவின் குடியிருப்பு போலி ஆவணங்களுடன் தனிநபர்களுக்கு சொந்தமானது என்று காவலர்கள் கண்டறிந்தனர். இந்த வழக்கு கொள்ளையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. ஏனெனில் இவருடைய நகைகளும், இவருடைய பெரும்பாலான உடைமைகளும் தீண்டப்படாமல் இருந்தன. மேலும் இவ்வழக்கு காவலர்களால் தீர்க்கப்படவேயில்லை.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chattopadhyay, Anjana, 1950-. Women scientists in India : lives, struggles & achievements. https://www.worldcat.org/oclc/1045373879. 
  2. "Lady Hardinge Medical College - About the College". ICS Careers. 2016. Archived from the original on 6 April 2017. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. 5.0 5.1 5.2 "Doctor killed in home near police station". Times of India. 14 May 2006. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  5. 6.0 6.1 "Padambhushan lady doctor found murdered". The Tribune. 14 May 2006. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  6. Singh, Karn Pratap (21 August 2012). "Tricksters try to grab dead Padma awardee's property". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  7. Singh, Sumit Kumar (20 August 2012). "Land grabbers claim dead doc's house as their own". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  8. Kumar Talwar, Vipin; Gupta, Hemlata; Kumar, Arvind (2003). "Isolated Tuberculosis Thyroiditis". Journal, Indian Academy of Clinical Medicine 4 (3): 238–239. http://medind.nic.in/jac/t03/i3/jact03i3p238.pdf. பார்த்த நாள்: 2021-09-04. 
  9. "About Padma Awards". padmaawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
  10. "Padma Awards | Interactive Dashboard". www.dashboard-padmaawards.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2021-05-25. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமலதா_குப்தா&oldid=3592188" இலிருந்து மீள்விக்கப்பட்டது