ஹேங்மேன் (விளையாட்டு)
ஹேங்மேன் என்பது கணித்து விளையாடக்கூடிய சொல் விளையாட்டு. இதை இருவர் மட்டுமே விளையாட முடியும். இந்த விளையாட்டுக்கு காகிதத்தாளும் எழுதுகோலும் போதுமானவை. ஒருவர் ஒரு சொல்லை மனதில் நினைத்துக் கொண்டு, சில எழுத்துக்களை மட்டும் காகிதத்தில் எழுதி, மற்றவற்றுக்கு அடிக்கோடிட்டுக் காட்டுவர். மற்றொருவர், அந்த எழுத்துக்கள் என்ன என்று கண்டுபிடித்து, முழுச் சொல்லையும் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட வாய்ப்புகளுக்குள் (எ.கா: ஆறு) கண்டுபிடிக்காவிட்டால் தோற்றவர் ஆவார். இந்த விளையாட்டு பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை முன்னிறுத்தி இருந்திருக்கிறது என்ற போதிலும், எந்த மொழிச் சொல்லையும் வைத்து விளையாட முடியும். ஒவ்வொரு தவறான கணிப்புக்கும் ஒவ்வொரு கோடாக வரைந்து, இறுதி வாய்ப்பில் ஒருவரை தூக்கில் போடுவது போல் படம் வரையப்படுவதால் இப்பெயர் பெற்றுள்ளது.
விளையாடும் முறை
[தொகு]ஒரு சொல்லை மனதில் நினைத்துக் கொண்டு, சில எழுத்துக்களை மட்டும் எழுதி, மற்றவற்றிற்கு அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். சொல்லானது இலக்கணப் பொருள் உடையதாக இருக்க வேண்டும். ஆட்பெயர்களையோ, இடப்பெயர்களையோ, சொற்சுருக்கங்களையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. எதிராளி ஒவ்வொரு எழுத்தாக கணித்து கொண்டே வருவார். கணித்த எழுத்து சரியாக இருந்தால், அது எந்தெந்த இடங்களில் வந்துள்ளதோ, அந்த இடங்களில் எழுதுவார் சொல்லை மனதில் நினைத்தவர். அருகருகே எழுத்துக்கள் வர வர, சொல்லை கணிப்பது எளிமையாகிவிடும். தவறான ஒவ்வொரு கணிப்பிற்கும் கோடுகள் இணைத்து தூக்கு மேடையையும்[1], மனிதரின் உருவத்தையும் வரைந்து கொண்டே வருவார் சொல்லை மனதில் நினைத்தவர். குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கணித்து வெற்றி வாகை சூடலாம். தவறினால், கோடுகள் வரையப்பட்டு, ஒரு பொம்மை தூக்கி போடுவதைப் போல படம் வரையப்படும். ஆட்டம் முடிவுக்கு வரும்.

தூக்கு மேடைக்கு பதிலாக வேறு படங்களை வரைந்தும் விளையாடுவது உண்டு. ஒரு ஆப்பிள் மரத்தை பல ஆப்பிள் பழங்களுடன் வரைந்து, ஒவ்வொரு தவறான கணிப்பிற்கும் ஆப்பிளை அழித்துக் கொண்டே வருவர்.
எடுத்துக்காட்டு
[தொகு]விளையாட்டின் எடுத்துக்காட்டை பார்க்கவும்.
0 | ||
1 | ||
2 | ||
3 | ||
4 | ||
5 | ||
6 | ||
7 | ||
8 | ||
9 | ||
கணித்தவர் தோற்கிறார். சரியான விடை: HANGMAN. |
சான்றுகள்
[தொகு]- ↑ Foreign English Teacher Under Attack For Playing Hangman Game பரணிடப்பட்டது 2010-12-25 at the வந்தவழி இயந்திரம், Japan Probe, July 23, 2010