உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெ. வே. நஞ்சுண்டைய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹெ. வே. நஞ்சுண்டைய்யா முதலாம் கன்னட இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய கன்னட மொழிப் புலவர். இவர் தலைமையில் மூன்று கன்னட இலக்கிய மாநாடுகள் நடைபெற்றன. இவர் கன்னடம், தெலுங்கு, சமசுகிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றவர்.

மொழி ஆர்வம்

[தொகு]

இவரின் தாய்மொழி தெலுங்கு என்றாலும், தன் வாழிடத்து மொழியான கன்னடத்தின் மீது பற்று கொண்டார். கன்னட மொழியின் வளர்ச்சிக்காக கன்னட இலக்கிய மாநாடுகளைத் தலைமை தாங்கி நடத்தினார். கன்னட இலக்கிய மன்றத்தை நிறுவி கன்னட நூல்களை பதிப்பித்தும், இலக்கிய மாநாடுகளை நிகழ்த்தியும், ஆராய்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தும் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டார். இவர் விக்டர் ஹியூகோவின் பாடல்களை ஆங்கிலத்தில் டியர்ஸ் இன் த நைட் என்று வெளியிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெ._வே._நஞ்சுண்டைய்யா&oldid=2633887" இலிருந்து மீள்விக்கப்பட்டது