ஹெல்பாய்
ஹெல்பாய் | |
---|---|
இயக்கம் | நீல் மார்ஷல் |
மூலக்கதை | |
திரைக்கதை | |
இசை | பெஞ்சமின் வால்ஃபிஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | லோரென்சோ செனட்டோர் |
படத்தொகுப்பு | மார்ட்டின் பெர்ன்பீல்ட் |
விநியோகம் | லயன்ஸ்கேட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 9, 2019(நியூயார்க் நகரம்) ஏப்ரல் 12, 2019 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 121 minutes[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $50 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $46.1 மில்லியன்[3][4] |
ஹெல்பாய் அல்லது ஹெல்பாய்: கால் ஆஃப் டார்க்னஸ் (Hellboy) என்பது 2019ல் வெளிவந்த அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். நீல் மார்ஷல் இயக்கியுள்ள இப்படத்தில் டேவிட் கார்பர், மில்லா ஜோவோவிச், இயன் மாக்சேன், சாஷா லேன், டேனியல் டே கிம் மற்றும் தாமஸ் ஹேடன் சர்ச் ஆகியோர் நடித்துள்ளனர். [5] [6]
இது ‘ஹெல்பாய்’ (2004), ‘ஹெல்பாய் 2: தி கோல்டன் ஆர்மி’ (2008) போன்றவற்றின் வரிசையில் மூன்றாவதாகவும். முதலிரு ‘ஹெல்பாய்’ படங்களை இயக்கிய கியர்மோ டெல் டோராவுக்குப் பதிலாக மூன்றாவது ‘ஹெல்பாய்’ படத்தின் இயக்குநராக நெய்ல் மார்ஷல் நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியான ஹெல்பாய் நடிகர் ரொனால்ட் பெர்ல்மன் நடிக்க மறுக்கவே புதிய ஹெல்பாயாக டேவிட் ஹார்பர் என்பவர் நடித்துள்ளார்.
இது வரை கதை காதாபாத்திரமான ‘டார்க் ஹார்ஸ் காமிக்ஸ்’ கதாபாத்திரம் தான் இந்த ஹெல்பாய். சிவத்த நிறமும் ராட்சத உடம்பும், அறுபட்ட கொம்புகள், வலது கை பாறை வடிவிலும் எனப் பயமுறுத்தும் தோற்றத்துடன் முன்கோபியாகவும் எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் வல்லமையும் கொண்டவன் தான் இந்த ஹெல்பாய்.
இந் திரைப்படம் ஏப்ரல் 12, 2019 அன்று திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம் விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இப்படம் 50 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெறும் 46 மில்லியன் டாலர் மட்டுமே ஈட்டியதால், இது வசூல் ரீதியாக ஓரு பாக்ஸ் ஆபிஸ் குண்டு.[7] [8] [9]
கதை சுருக்கம்[தொகு]
இந்த கதையின் தொடக்கம் 517 ஆம் ஆண்டு தொடங்கு கின்றது, நிமோ என்ற மரணமில்லாத பெண்ணும், இரவின் மகாராணியும் மனிதர்களை அழித்து வருகிறார். கிங் ஆர்த்தர் என்பவர் இதை தடுப்பதற்காக நிமோவை தன்னுடைய சக்தி மிகுந்த வாளால் ஆறு பாகங்களாக வெட்டி மந்திரம் செய்த பெட்டியால் அடைத்து, தன்னுடைய தளபதிகள் மூலம் அந்த பெட்டியை யாரும் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அனுப்பி வைக்கிறார்.
தற்காலத்தில் ரகசிய உளவாளியாக பணிபுரிந்து வரும் ஹெல்பாய். இந்நிலையில், பூமியில் வேற்று கிரகவாசிகள் உலாவுவதாக தகவல் கிடைக்கிறது. இதன் பின்னணியில் நிமோவின் பாகங்களை கண்டுபிடிப்பதற்காக அவை செயல்பட்டு வருவதாகவும், மொத்த பாகங்களை ஒன்று சேர்த்தால் நிமோ உயிர் பெற்று உலகில் உள்ள மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி விடுவாள் என்பதையும் ஹெல்பாய் அறிகிறார். நிமோ மூலம் தனது பிறப்பின் ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஹல்போய். இறுதி யுத்தத்தில் தந்தையை பறிகொடுக்கின்றான். இறுதியில் நிமோவை எப்படி ஹல்போய் அழித்தான் என்பது தான் கதை.
நடிகர்கள்[தொகு]
- டேவிட் கார்பர் - ஹெல்பாய்
- சிவத்த நிறமும் ராட்சத உடம்பும், அறுபட்ட கொம்புகள், வலது கை பாறை வடிவிலும் எனப் பயமுறுத்தும் தோற்றத்துடன் முன்கோபியாகவும் எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் வல்லமையும் கொண்டவன் தான் இந்த ஹெல்பாய்.
- மில்லா ஜோவோவிச் - நிமோ
- மரணமில்லாத பெண்ணும், இரவின் மகாராணியும்
- இயன் மாக்சேன்
- சாஷா லேன்
- டேனியல் டே கிம்
- தாமஸ் ஹேடன் சர்ச்
இசை[தொகு]
இப்படத்திற்கு இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்ஃபிஷ்ஸால் இசை உருவாக்கப்பட்டுள்ளது . [10]
வரவேற்பு[தொகு]
வசூல்[தொகு]
மே 27, 2019 வரை ஹெல்பாய் அமெரிக்கா மற்றும் கனடாவில் 21.9 மில்லியன் அமெரிக்க டாலர்களும் மற்ற நாடுகளில் $ 24.2 மில்லியன் என மொத்தமாக $ 46.1 மில்லியன் வசூலித்தது. இப்படம் 50 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெறும் 46 மில்லியன் டாலர் மட்டுமே ஈட்டியதால், இது வசூல் ரீதியாக ஓரு பாக்ஸ் ஆபிஸ் குண்டு. [11]
குறிப்புகள்[தொகு]
- ↑ "HELLBOY (15)". April 1, 2019. https://www.bbfc.co.uk/releases/hellboy-film. பார்த்த நாள்: April 9, 2019.
- ↑ Gonzalez, Umberto; Molloy, Tim (April 10, 2019). "Inside ‘Hellboy’ Reboot’s Fiery Shoot: Fights Over David Harbour, Cinematography and a Tree (Exclusive)" இம் மூலத்தில் இருந்து April 11, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190411114339/https://www.thewrap.com/hellboy-david-harbour-neil-marshall/. பார்த்த நாள்: April 11, 2019.
- ↑ "Hellboy (2019)". https://www.boxofficemojo.com/movies/?id=hellboy2019.htm. பார்த்த நாள்: May 27, 2019.
- ↑ "Hellboy (2019) International Box Office Results". Box Office Mojo. https://www.boxofficemojo.com/movies/?page=intl&id=hellboy2019.htm. பார்த்த நாள்: May 29, 2019.
- ↑ Lecoultre, Cécile (May 8, 2019). "Three things to know about ... Hellboy, Call of Darkness". 24heures இம் மூலத்தில் இருந்து May 18, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190519064840/https://www.24heures.ch/culture/cinema/trois-trucs-savoir-hellboy-call-of-darkness/story/25007506. பார்த்த நாள்: May 18, 2019.
- ↑ R. Lukas (April 12, 2019). "HELLBOY - CALL OF DARKNESS: HÖLLEN-ZOFF HINTER DEN KULISSEN?". Movie Jones இம் மூலத்தில் இருந்து May 18, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190519064058/https://www.moviejones.de/news/news-hellboy-call-of-darkness-hoellen-zoff-hinter-den-kulissen_35689.html. பார்த்த நாள்: May 18, 2019.
- ↑ Holmes, Adam (April 10, 2019). "Hellboy Reviews Are In, Here’s What Critics Are Saying". Cinemablend. https://www.cinemablend.com/news/2470135/hellboy-reviews-are-in-heres-what-critics-are-saying. பார்த்த நாள்: April 10, 2019.
- ↑ Makuch, Eddie (April 10, 2019). "Hellboy Review Roundup: Here's What The Critics Are Saying". கேம்ஸ்பொட் இணையத்தளம். https://www.gamespot.com/articles/hellboy-review-roundup-heres-what-the-critics-are-/1100-6466170/. பார்த்த நாள்: April 10, 2019.
- ↑ Russell, Bradley (April 13, 2019). ""The race for the worst movie of the year is heating up" – The first reviews for Hellboy are in and… ooft". GamesRadar. https://www.gamesradar.com/the-race-for-the-worst-movie-of-the-year-is-heating-up-the-first-reviews-for-hellboy-are-in-and-ooft/. பார்த்த நாள்: April 13, 2019.
- ↑ "Benjamin Wallfisch to Score Neil Marshall’s ‘Hellboy’". June 28, 2018. http://filmmusicreporter.com/2018/06/28/benjamin-wallfisch-to-score-neil-marshalls-hellboy/. பார்த்த நாள்: February 24, 2019.
- ↑ https://www.boxofficemojo.com/movies/?id=hellboy2019.htm
வெளி இணைப்புகள்[தொகு]
- 2019 திரைப்படங்கள்
- ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்கத் திரைப்படங்கள்
- ஹெல்பாய் (திரைப்படத் தொடர்)
- தொடர் திரைப்படங்கள்
- 2019 ஆங்கிலத் திரைப்படங்கள்
- அமெரிக்க சூப்பர்ஹீரோ திரைப்படங்கள்
- அமெரிக்க அதிரடித் திரைப்படங்கள்
- அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்
- காலப் பயணம் பற்றிய திரைப்படங்கள்
- பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்
- அமெரிக்க அசுரன் திரைப்படங்கள்
- சும்மிட் என்டேர்டைன்மென்ட் திரைப்படங்கள்
- காட்டேரி திரைப்படங்கள்
- லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் திரைப்படங்கள்
- அமெரிக்க கற்பனை திரைப்படங்கள்