உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோல்பரி பிரபு
ஓய்வூதியங்களுக்கான அமைச்சர்
பதவியில்
30 சூலை 1936 – 7 சூன் 1939
ஆட்சியாளர்கள்எட்டாம் எட்வர்டு,
ஆறாம் ஜோர்ஜ்
பிரதமர்ஸ்டான்லி பால்ட்வின்
நெவில் சேம்பர்லான்
முன்னையவர்ரொபர்ட் அட்சன், அட்சன் பிரபு
பின்னவர்சேர் வால்ட்டர் வொமர்ஸ்லி
பணிகளுக்கான ஆணையர்
பதவியில்
7 சூன் 1939 – 3 ஆப்ரல் 1940
ஆட்சியாளர்ஆறாம் ஜோர்ஜ்
பிரதமர்நெவில் சேம்பர்லான்
முன்னையவர்சேர் பிலிப் சேசன்
பின்னவர்எர்பிராண்ட் சாக்வில்
கல்விக் குழுமத்தின் தலைவர்
பதவியில்
3 ஏப்ரல் 1940 – 20 சூலை 1941
ஆட்சியாளர்ஆறாம் ஜோர்ஜ்
பிரதமர்நெவில் சேம்பர்லான்
வின்ஸ்டன் சர்ச்சில்
முன்னையவர்எர்பிராண்ட் சாக்வில்
பின்னவர்ஆர். ஏ. பட்லர்
இலங்கையின் மகாதேசாதிபதி
பதவியில்
6 சூலை 1949 – 17 சூலை 1954
ஆட்சியாளர்கள்ஆறாம் ஜோர்ஜ்
இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர்
பின்னவர்சேர் ஒலிவர் குணதிலக்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச் 6, 1887
இறப்புசனவரி 30, 1971(1971-01-30) (அகவை 83)
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிபழமைவாதக் கட்சி

ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு (Herwald Ramsbotham, 1st Viscount Soulbury, 6 மார்ச் 1887 – 30 சனவரி 1971) என்பவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பழமைவாதக் கட்சி அரசியல்வாதி. இவர் 1931 முதல் 1941 வரை ஐக்கிய இராச்சியத்தில் அமைச்சராகவும் 1949 முதல் 1954 வரை இலங்கையின் மகாதேசாதிபதியாகவும் பணியாற்றினார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1915 ஆம் ஆண்டில் இராணுவத்தில் தற்காலிக லெப்டினன்ட் ஆகப் பதவி வகித்தவர் பின்னர் கப்டனாகவும், மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். 1929 ஆம் ஆண்டில் லான்காஸ்டர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்[1]. 1931 முதல் பல்வேறு அரசுப் பணிகளில் உயர்பதவிகளை வகித்தார். 1941 ஏப்ரலில் அமைச்சரவையில் இணைந்தார். 1941 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் பக்கிங்ஹாம் கவுண்டியில் "சோல்பரி" ஆக நியமனம் பெற்றார். 1944-1945 வரை சோல்பரி ஆணைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். 1949 முதல் 1954 வரை விடுதலை பெற்ற இலங்கையின் மகாதேசாதிபதியாக ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் நியமிக்கப்பட்டார். 1954 சூன் மாதத்தில் இவருக்கு பக்கிங்ஹாம் கவுண்டியின் சோல்பரி பிரபு (Viscount Soulbury) என்ற பட்டம் கொடுக்கப்பட்டது[2].

குடும்பம்[தொகு]

சோல்பரி பிரபு சனவரி 1971 இல் 83வது அகவையில் காலமானார். இவரது மூத்த மகன் ஜேம்ஸ் ராம்ஸ்போதம் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர்களில் ஒருவராவார். கடைசி மகன் பீட்டர் ராம்ஸ்போத்தம் 1974 முதல் 1977 வரை ஐக்கிய அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவராக இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "No. 33508". இலண்டன் கசெட். 21 சூன் 1929.
  2. "No. 40232". இலண்டன் கசெட். 16 சூலை 1954.