உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெய்டி சாதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெய்டி சாதியா
பிறப்புசாவக்காடு, குருவாயூர், இந்தியா
கல்விபத்திரிகையாளர் மன்றம், திருவனந்தபுரம்,இதழியல் நிறுவனம்
பணிபத்திரிகையாளர்

ஹெய்டி சாதியா (Heidi Saadiya) பத்திரிகையாளர், திருநங்கை உரிமை செயற்பாட்டாளர் மற்றும் வலையொளியாளர் ஆவார்.[1] இவர் கேரளாவின் முதல் திருநங்கை தேசிய தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக கைரளி தொலைக்காட்சியில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். மேலும், கேரளாவில் பத்திரிகையியல் படித்த முதல் திருநங்கை பெண்ணாகவும் அவர் குறிப்பிடப்படுகிறார்.[2][3][4][5]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

ஹெய்டி சாதியா கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள சாவக்காடு பகுதியில் ஒரு மரபுவழி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவர் மலப்புரம் மாவட்டத்தின் பொன்னானியில் வளர்ந்தார். பத்து வயதில் தன்னுடைய பாலின அடையாளத்தை உணர்ந்தார். ஒரு நேர்காணலில், தமக்கு ஆண் முலை வீக்கம் என்ற உடல்நிலை இருந்ததாக இவர் தெரிவித்துள்ளார். 18 வயதில் இவரது பாலின அடையாளத்தை குடும்பம் ஏற்காததால், குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டார். அதன்பின் இவர் வீட்டை விட்டு வெளியேறி, குடும்பத்தாருடன் தொடர்பில்லாமல் வாழ்ந்து வருகிறார்.[6]

தொழில் வாழ்க்கை

[தொகு]

2019 ஆகஸ்ட் மாதத்தில் கைரளி தொலைக்காட்சியில் பயிற்சி பத்திரிகையாளராக தனது பணியை தொடங்கினார். 2019 செப்டம்பர் 2 அன்று இவர் வழங்கிய முதல் நேரலை செய்தி, சந்திரயான் 2 நிலா ஆய்வு திட்டம் தொடர்பானதாக இருந்தது.[7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

2019 ஆம் ஆண்டு சாதியா அதர்வ் என்பவருடன் உறவில் இணைந்தார். பின்னர் அதர்வ் திருமண முன்மொழிவு செய்தார்.[8] 2020 ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தினத்தன்று, எர்ணாகுளத்தில் உள்ள டிடிஎம் மண்டபத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை ஸ்ரீ சத்ய சாய் அனாதை இல்ல அறக்கட்டளையும் என்எஸ்எஸ் கரயோகம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்தன.[9] 2022 ஜூலை மாதத்தில், தன்னுடைய அதிகாரப்பூர்வ வலையொளி ஒளியலை வரிசை மூலம் இருவரும் விவாகரத்து செய்துகொண்டதாக சாதியா அறிவித்தார்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2016ലാണ് ഞാന്‍ സര്‍ജറി ചെയ്തതെന്ന് ഹെയ്ദി സാദിയ! അന്നത്തേക്കാളും അഡ്വാന്‍സായിട്ടുള്ള സൗകര്യങ്ങള്‍ ഇന്നുണ്ട്! എല്ലാം തുറന്നുപറഞ്ഞതിന് നിങ്ങളോട് ബഹുമാനം തോന്നുന്നുവെന്ന കമന്റ്! വീഡിയോ വൈറല്‍" (in ml). Samayam News. Aug 9, 2022. https://malayalam.samayam.com/tv/celebrity-news/heidi-saadiya-shared-a-new-video-about-transition-journey-of-transwomen/articleshow/93456336.cms.
  2. Press Trust of India (3 September 2019). "Kerala gets its first transperson broadcast journalist". Deccan Herald. https://www.deccanherald.com/india/kerala-gets-its-first-transperson-broadcast-journalist-758803.html.
  3. MS Vidyanandan (26 July 2019). "Heidi Saadiya is born to win". New Indian Express (Thiruvananthapuram). https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2018/jul/26/heidi-saadiya-is-born-to-win-1849063.html.
  4. Vishnu Varma (September 3, 2019). "Meet Heidi Saadiya, Kerala's first transwoman TV journalist". New Indian Express (Tiruvananthapuram). https://indianexpress.com/article/india/meet-heidi-saadiya-keralas-first-transwoman-tv-journalist-5963010/.
  5. TNN (Jul 26, 2018). "They welcomed her with open arms". Times of India (Tiruvananthapuram). https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/they-welcomed-her-with-open-arms/articleshow/65155572.cms.
  6. Shiba Kurian (September 2, 2019). "Trans woman journalist Heidi Saadiya makes debut as TV news reporter in Kerala". The News Minute இம் மூலத்தில் இருந்து 23 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200123170218/https://www.thenewsminute.com/node/108257.
  7. "Meet Heidi Saadiya, Kerala's first transwoman journalist". Femina. https://www.femina.in/trending/achievers/meet-heidi-saadiya-keralas-first-transwoman-journalist-133888.html.
  8. Unnikrishnan S (23 August 2019). "Wedding bells ring for Kerala transgender pair". New Indian Express (Tiruvananthapuram). https://www.newindianexpress.com/states/kerala/2019/aug/23/wedding-bells-ring-for-kerala-transgender-pair-2022904.html.
  9. ANI (26 January 2020). "Kerala Transgender Journalist Marries In Ernakulum On Republic Day". New Indian Express (Ernakulum). https://www.ndtv.com/kerala-news/kerala-transgender-journalist-heidi-saadia-marries-in-ernakulum-on-republic-day-2170042.
  10. Aswini P (Jul 27, 2022). "അതെ ഞങ്ങള്‍ കുറച്ച് കാലങ്ങളായി വേര്‍പിരിഞ്ഞാണ് താമസിയ്ക്കുന്നത്, പക്ഷെ വിവാഹ മോചിതരായിട്ടില്ല എന്ന് ഹെയ്ദി സാദിയ, വേര്‍പിരിയാനുണ്ടായ കാരണം എന്താണെന്ന് ചോദിച്ചപ്പോള്‍ ഹെയ്ദിയുടെ മറുപടി?" (in ml). Samayam News (Ernakulum). https://malayalam.samayam.com/tv/celebrity-news/heidi-saadiya-about-her-separation-from-atharv/articleshow/93155330.cms.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெய்டி_சாதியா&oldid=4549472" இலிருந்து மீள்விக்கப்பட்டது