ஹெப்சிபா ஜேசுதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹெப்சிபா ஜேசுதாசன் (Hephzibah Jesudasan, 1925 - பெப்ரவரி 9, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த புதின எழுத்தாளர். ஆங்கிலப் பேராசிரியர். தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். எழுத்தாளர் ஜேசுதாசனின் துணைவியார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தமிழ்நாடு குமரி மாவட்டம், தக்கலை, புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பர்மாவில் பிறந்தவர். இவரது தந்தை பர்மாவில் மர வணிகராக இருந்தவர். இரண்டாம் உலகப்போரை அடுத்து இவரது குடும்பம் நாகர்கோயிலில் குடியேறியது. ஹெப்சிபா நாகர்கோயில் டதி பள்ளியில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றினார்.

எழுத்தாளராக[தொகு]

ஹெப்சிபா சாதாரணக் கொத்தனாரின் மகனான தமிழ்ப் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்தார். கணவரின் தூண்டுதலால் ஹெப்சிபா புத்தம் வீடு என்ற தனது முதலாவது புதினத்தை எழுதினார். இப்புதினம் தமிழின் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாக இன்றும் கருதப்படுகிறது. புத்தம் வீடு மலையாளத்திலும் ஆங்கிலத்தில் "லிசீஸ் லெகசி" (Lissy’s Legacy) என்ற பெயரிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. பேராசிரியரின் துணையுடன் ஹெப்சிபா Countdown from Solomon என்ற அவரது பெரிய இலக்கிய வரலாற்று நூலை நான்கு பாகங்களாக எழுதி முடித்தார்.

இறுதி நாட்கள்[தொகு]

கணவர் ஜெசுதாசன் 2002 ஆம் ஆண்டில் காலமானார். தீவிரமான கிறித்தவரான ஹெப்சிபா அவரது இறுதிக்காலத்தை மதச்சேவையில் கழித்தார். 2012 பெப்ரவரி 9 மாலை அவரது புலிப்புனம் ஊரில் தனது 88வது அகவையில் காலமானார்.

எழுதிய நூல்கள்[தொகு]

புதினங்கள்[தொகு]

 • புத்தம் வீடு (1964)
 • டாக்டர் செல்லப்பா (1967)
 • அனாதை (1978)
 • மா-னீ (1982)

ஆங்கில நூல்கள்[தொகு]

 • Count-down from Solomon, or, The Tamils down the ages through their literature.
  • Vol. 1 Caṅkam and the aftermath, 1999
  • Vol. 2 Bhakti, ethics and epics, 1999
  • Vol. 3 Kampan, 2001
  • Vol. 4 13th - 20th century A.D.
 • An early Sheaf (கவிதைகள்)
 • Sky Lights (கவிதைகள்)
 • en- Exercises (கட்டுரைகள்)
 • Tit-bits for Tinytots (சிறுவர் இலக்கியம்)
 • STORY TIMES DARLINGS (சிறுவர் இலக்கியம்)
 • Songs of The Cuckoo and Other Poems (பாரதியாரின் குயில் பாட்டு)

விருதுகள்[தொகு]

 • விளக்கு விருது (2002, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெப்சிபா_ஜேசுதாசன்&oldid=3230071" இலிருந்து மீள்விக்கப்பட்டது