உள்ளடக்கத்துக்குச் செல்

ஹென்றி மொங்க்-மேசன் மூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர்
Sir Henry Monck-Mason Moore
இலங்கையின் 1வது மாகாதேசாதிபதி
பதவியில்
பெப்ரவரி 4, 1948 – சூலை 6, 1949
ஆட்சியாளர்ஆறாம் ஜோர்ஜ் அரசர்
பின்னவர்ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், சோல்பரி பிரபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1887
இறப்பு1964
தொழில்குடிமுறை அரசுப் பணியாளர்

சேர் ஹென்றி மொங்க்-மேசன் மூர் (Sir Henry Monck-Mason Moore, 18871964) என்பவர் சியேரா லியோனி, கென்யா, இலங்கை ஆகிய நாடுகளின் பிரித்தானிய ஆளுநராகப் பணியாற்றியவர்.

ஹென்றி மூரின் தந்தை வண. எட்வார்ட் வில்லியம் மூர் என்பவர். விம்பிள்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் ஜீசசு கல்லூரியிலும் கல்வி கற்று 1909 ஆம் ஆண்டில் வெளியேறினார். இரண்டாம் உலகப் போரின் போது கிரேக்கத்தின் சலோனிக்கா என்ற இடத்தில் லெப்டினண்ட் ஆகப் பணியாற்றினார்.

1934 முதல் 1937 வரை சியேரா லியோனியில் பிரித்தானிய ஆளுநராகப் பணியாற்றிய பின்னர், 1940 ஆண்டு வரை லண்டனில் அரசுப் பணிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் 1940 முதல் 1944 வரை கென்யாவின் ஆளுநராகவும், 1948 வரை இலங்கையின் ஆளுநராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • Hankinson, C. F. J. (ed.) Debrett's Baronetage, Knightage and Companionage, 1954, Odhams Press, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_மொங்க்-மேசன்_மூர்&oldid=2712663" இலிருந்து மீள்விக்கப்பட்டது