ஹென்றி கிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்றி கிரே
பிறப்பு1827
பெல்கிரேவியா, இலண்டன்
இறப்பு13 சூன் 1861(1861-06-13) (அகவை 34)
பெல்கிரேவியா, இலண்டன்
வாழிடம்ஐக்கிய இராச்சியம்
துறைஉடற்கூறு இயல்
அறியப்படுவதுகிரேஸ் அனாட்டமி

ஹென்றி கிரே (Henry Gray) ஓர் ஆங்கில உடல்கூறு இயல் அறிஞர் மற்றும் அறுவை மருத்துவர் ஆவார். கிரேஸ் அனாட்டமி நூலைப் பதிப்பித்ததன் பொருட்டு இவர் உலகெங்கும் அறியப்படுகிறார். இந்த நூலே உலகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களால் வாழ்நாள் முழுதும் படிக்க வேண்டிய நூலாக உள்ளது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

கிரே 1827 ஆம் ஆண்டு இலண்டனில் பெல்கிரேவியாவில் பிறந்தார்.[1][2] 1845 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் மருத்துவமனையில் மாணவராய்ச் சேர்ந்தார். அங்கே இவர் மிகவும் கடின முயற்சியுடன் நிதானமாய் உடற்கூறு இயலைக் கற்றார். மாணவராய் இருக்கும் போதே ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றார்.

1852 ஆம் ஆண்டு தனது 25ஆவது அகவைத் துவக்கத்திலேயே ராயல் சொசைட்டியின் உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரேஸ் அனாட்டமி[தொகு]

1858 ஆம் ஆண்டு கிரே தனது உடற்கூறு இயல் புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார். இதில் 750 பக்கங்கள் கொண்ட இந்நூலுள் 363 படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த படங்கள் ஹென்றி கார்ட்டர் எனும் கிரேயின் நண்பரால் வரையப்பட்டு இருந்தன. இந்த நூல் புகழடைய கார்டடரின் ஓவியங்களும் உறுதுணையாய் இருந்தன. 1960 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பையும் கிரே தானே தயாரித்து வெளியிட்டார்.

மரணம்[தொகு]

1861 ஆம் ஆண்டு சின்னம்மை பாதித்த தன் உறவினரைக் கவனித்து வந்த கிரே தானும் சின்னம்மையால் பாதிக்கப்பட்டார். 13.06.1861 அன்று தனது முப்பத்து நான்காம் வயதில் ஹென்றி கிரே இயற்கை எய்தினார். (உறவினர் பிழைத்து விட்டார்)[3][4]

அனாட்டமி நூலின் முதல் இரண்டு பதிப்புகள் மட்டுமே கிரேயால் வெளியிடப்பட்ட போதும் இன்றளவும் இந்த நூல் கிரேஸ் அனாட்டமி என்ற பெயரில் அவரது பெயரிலேயே வெளியிடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1841 census for 8 Wilton Street, St Geo Han Sq: Henry Gray, age rounded to 15yrs (implies born 1826), medical student, whether born in this county = Yes (implies born Middlesex) - HO107/732 Bk.2 f.28 p.19
  2. 1851 census: Henry Gray, house surgeon aged 24 (implies born 1827), of St Geo Han Sq, born St George's Hanover Square, London - HO107/1478 f.649 p.1
  3. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2760169/
  4. GRO Register of Deaths: JUN qtr 1861 1a 174 St Geo Han Sq - Henry Gray
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_கிரே&oldid=3643155" இலிருந்து மீள்விக்கப்பட்டது