ஹென்றி ஃபில்டிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹென்றி ஃபில்டிங்
Henry Fielding

புனைப்பெயர் "Captain Hercules Vinegar", also some works published anonymously
தொழில் novelist, dramatist and magistrate
நாடு ஆங்கிலேயர்
எழுதிய காலம் 1728–54
இலக்கிய வகை அங்கதம், picaresque
இயக்கம் அறிவொளிக் காலம், Augustan Age
உறவினர்(கள்) Sarah Fielding, John Fielding

ஹென்றி ஃபீல்டிங் (22 ஏப்ரல் 1707 - 8 அக்டோபர் 1754) ஒரு ஆங்கில புதின எழுத்தாளர் மற்றும நாடக ஆசிரியர் ஆவார். இவருடைய வளமான, புவி சார்ந்த, நகைச்சுவையான, வஞ்சப்புகழ்ச்சி மிக்க எழுத்துக்களால் இனங்காணப்படுகிறார். இவர் "டாம் ஜோன்ஸ்" (Tom Jones) என்ற கொள்ளையர் புதினத்தின் ஆசிரியராவார். கூடுதலாக, பீல்டிங் ஒரு சட்டச் செயலாக்க வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். பீல்டிங், நீதிபதியாக தனது அதிகாரத்தைப் பயன்படத்தி லண்டனின் முதல் போலிஸ்படை, "தி பவ் ஸ்ட்ரீட் ரன்னர்ஸ்" (The Bow Street Runners) - ஐ நிறுவினார். இவருடைய இளைய சசோகதாி சாராவும் ஒரு வெற்றிகரமான எழுத்தாளர் ஆனார்.

நாடக மற்றும் புதின எழுத்தாளர் (தொகு)[தொகு]

ஃபீல்டிங் இங்கிலாந்தில் உள்ள சாமர்செட்டில் சார்பாம் என்ற ஊாில் பிறந்தார். ஈடன் கல்லூாியில் இவர் கல்வி பயின்றார். அங்கு இவருக்கு வில்லியம் பிட் என்பவருடன் வாழ்நாள் முழுவதும் தொடரக் கூடிய நட்பு ஏற்பட்டது. இவருடைய அம்மா இவரது 11-வது அகவையில் காலமானார். இவரை வளர்க்கும் பொறுப்பு இவரது தந்தை லியோடினட் ஜெனரல் எட்மண்ட் ஃபீல்டிங் - ஐ விடுத்து இவருடைய பாட்டிக்கு வழங்கப்பட்டது. தன் தந்தையை தொடர்ந்து பார்த்து வந்த போதிலும், இவருடைய பாட்டியின் வீட்டிலேயே தங்கி இருந்தார். இவரது உறவினரான சாரா ஆன்டரூஸ்-ஐ தேவாலயத்திற்குச் செல்லும் வழியில் கடத்த முயன்றார். ஆகையால் குற்ற வழக்கிற்குப் பயந்து, ஓடிவிட்டார். 1928-ல் லெய்டன்-க்குச் சென்று பண்டைய இலக்கியம் மற்றும் சட்டம் ஆகியவற்றை அங்குள்ள பல்கலைகழகத்தில் பயின்றார். பணப்பற்றாக் குறையின் காரணமாக லண்டன் திரும்பினார். பிறகு அங்குள்ள திரையரங்குகளுக்காக எழுத ஆரம்பித்தார். இவருடைய ஒரு சில படைப்புகள் இங்கிலாந்தின் அப்போதைய பிரதம மந்திாியான ராபர்ட் வால்பூலைச் சாடுவதாக அமைந்தது.

திரையரங்கு உாிமச் சட்டம் 1737, ஹென்றிக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இவருடைய நூலான "தி கோல்டன் ரம்ப்" (The Golden Rump) ஆசிாியர் பெயர் இடப்படவும் இல்லை, வெளியிடப்படவும் இல்லை. ஆனால் ஹென்றி அவருடைய நாடகத்தில் தனது வஞ்சப்புகழ்ச்சியை எழுத ஆரம்பித்தார். இச்சட்டம் நிறைவேறிய உடன், அரசியல் வசைபாடுதல் முற்றிலும் இயலாததாகி விட்டது. நாடக ஆசிாியர் தங்களின் நாடகங்களை அரங்கேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஃபீல்டிங் நாடகம் எழுதும் வேலையை விட்டு தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு, உதவுவதற்காக சட்டத்துறையில் மீண்டும் நுழைந்து, பொிய வழக்குறைஞர் ஆனார்.

ஃபீல்டிங்கின் பொருளாதார அறிவுக் கூர்மை குறைவால், அவருடைய குடும்பம் அடிக்கடி வறுமையில் வாடியது. ஆனால் ரால்ஃப் ஆலன் என்ற செல்வந்தர் இவருக்கு உதவினார். ஆலனின் நினைவாக உருவாக்கப்பட்டதே 'டாம் ஜோன்ஸ்' (Tom Jones) என்ற நூலில் உள்ள ஸ்கொயர் ஆல்வொர்தி கதாபாத்திரம். ஃபீல்டிங்கின் மரணத்திற்குப் பிறகும், ஆலன் தொடர்ந்து ஃபீல்டிங்கின் குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்து வந்தார்.

இவரின் படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Henry Fielding

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_ஃபில்டிங்&oldid=2954000" இருந்து மீள்விக்கப்பட்டது