உள்ளடக்கத்துக்குச் செல்

ஹென்ரி ஒலோங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்ரி ஒலோங்கா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹென்ரி ஒலோங்கா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்கு-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 30 50 66 82
ஓட்டங்கள் 184 95 659 255
மட்டையாட்ட சராசரி 5.41 7.30 9.98 10.62
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 24 31 45 32*
வீசிய பந்துகள் 4,502 2,059 10,048 3,311
வீழ்த்தல்கள் 68 58 156 92
பந்துவீச்சு சராசரி 38.52 34.08 37.89 33.67
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 2 3 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/70 6/19 5/70 6/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 13/– 29/– 24/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 14 2011

ஹென்ரி காபா ஒலோங்கா (Henry Olonga , பிறப்பு: சூலை 3 1976),[1] சிம்பாப்வே அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 8 ஆண்டுகாலம் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவர் மஷோனலந்து மற்றும் மணிகலந்து அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 50 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 66 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995 - 2002 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1995 - 2003 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். மிக இளம்வயதில் சிம்பாப்வே அணிக்காக விளையாடியவர் மற்றும் முதல் கருப்பர் எனும் சாதனையைப் படைத்தார்.[2]

சர்வதேச அளவில் சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் அதிக அகலப்பந்து மற்றும் நோபால் வீசிய பந்துவீச்சாளரும் ஆவார்.[2] 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தொடரில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடியதால் இவரின் துடுப்பாட்ட வாழ்க்கை முடிவுக்கு வந்தது.[2] 2003 ஆம் ஆண்டின் சிம்பாப்வே அணியின் கடைசிப் போட்டியோடு தனது ஓய்வினை அறிவித்தார்.

சர்வதேச போட்டி[தொகு]

ஜனவரி 1995 ஆம் ஆண்டில் அராரே துடுப்பாட்ட மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3] இதற்கு முன்பாக 1995 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் டேவிட் பிறயன் மற்றும் எட்டோ பிராண்டஸ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதனால் இவர் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால் அப்போதுவரை அவர் கென்யாவின் குடியுரிமையில் இருந்ததனால் அவரால் அந்தத் தொடரில் விளையாட இயலாமல் போனது.[2] பின் கென்ய குடியுரிமையை விட்டுக் கொடுத்தனால் இவர் சிம்பாப்வே துடுப்பாட்ட அணியில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் எனும் சாதனையைப் படைத்தார். அப்போது அவரின் வயது 18 ஆண்டுகள் 212 நாள்கள் ஆகும்.

வலதுகை விரைவு வீச்சாளரான இவர் கருப்பர் இனத்தைச் சேர்ந்த முதல் வீரர் ஆவார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்தப்போட்டியில் கிரான்ட் பிளவர் இருநூறு மற்றும் ஆண்டி பிளவர், கை விட்டால் ஆகியோரின் நூறு ஓட்டங்களும் இதற்கு உதவின. ஒலங்கா தனது முதல் ஓவரில் சாயிட் அன்வர் இலக்கினை வீழ்த்தினார். ஆனால் அது நோபால் ஆனது. இவரின் பந்துவீச்சு முறை கேள்ள்விக்குள்ளானது. பின் டென்னிசு லில்லீயின் உதவியுடன் மீண்டும் இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார்.

அக்டோபர் 1995 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்[4]. பின் அக்டோபர் 2008 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 70 ஓட்டங்கள் கொடுத்து 5 இலக்குகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது[5]. இந்த அணி பெற்ற இரண்டாவது வெற்றி ஆகும். நவம்பர் 1998 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை சிம்பாப்வே அணி வெல்வதற்கு இவர் உதவிகரமாக இருந்தார்.[6] பின் நவம்பர் 2002 இல் இதே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 93 ஓட்டங்கள் கொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தினார்.

வ எ இலக்குகள் போட்டிகள் எதிரணி இடம் நகரம் நாடு ஆண்டு
1 5/70 8  இந்தியா அராரே துடுப்பாட்ட சங்க மைதானம் ஹராரே சிம்பாப்வே 1998
2 5/93 29  பாக்கித்தான் அராரே துடுப்பாட்ட சங்க மைதானம் ஹராரே
சிம்பாப்வே
2002

வெளி இணைப்பு[தொகு]

ஹென்ரி ஒலோங்கா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 14 2011.

சான்றுகள்[தொகு]

  1. "Henry Olonga", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-12
  2. 2.0 2.1 2.2 2.3 "Henry Olonga", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-12
  3. "1st Test, Pakistan tour of Zimbabwe at Harare, Jan 31-Feb 4 1995". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 1995. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "1st ODI, South Africa tour of Zimbabwe at Harare, Oct 21 1995". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 1995. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Archived copy". Archived from the original on 5 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. http://www.espncricinfo.com/ci/engine/match/63672.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_ஒலோங்கா&oldid=3588334" இலிருந்து மீள்விக்கப்பட்டது