உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெட்லி வெரிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெட்லி வெரிட்டி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹெட்லி வெரிட்டி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 262)சூலை 29 1931 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுசூன் 27 1939 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 40 378
ஓட்டங்கள் 669 5,603
மட்டையாட்ட சராசரி 20.90 18.07
100கள்/50கள் 0/3 1/13
அதியுயர் ஓட்டம் 66 not out 101
வீசிய பந்துகள் 11,173 84,219
வீழ்த்தல்கள் 144 1,956
பந்துவீச்சு சராசரி 24.37 14.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 164
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 54
சிறந்த பந்துவீச்சு 8/43 10/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
30/– 269/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 1 2009

ஹெட்லி வெரிட்டி (Hedley Verity 18 மே 1905   - 31 ஜூலை 1943) 1930 மற்றும் 1939 க்கு இடையில் யார்க்ஷயர் மற்றும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஒரு தொழில்முறை முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இடது-கை வழமைச் சுழல் பந்து வீச்சாளரான இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1,956 இழப்புகளைக் கைப்பற்றினார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 40 போட்டிகளில் விளையாடி 144 இழப்புகளைக் கைப்பற்றியுள்ளார். 1932 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்ட நாட்குறிப்பில் இவர் இடம்பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

1905 மே 18 அன்று லீட்சு பகுதியில் உள்ள ஹெடிங்லேயில் இவர் பிறந்தார். இவர் உள்ளூர் நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்த ஹெட்லி வெரிட்டி மற்றும் ஞாயிறு பள்ளி ஆசிரியரான எடித் எல்விக் ஆகியோரின் மூத்த குழந்தையாக பிறந்தார். வெரிட்டிக்கு, கிரேஸ் மற்றும் எடித் என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். [1] இவரது குடும்பம் முதலில் ஆர்ம்லிக்கு சென்றது. பின்னர், ரவ்டன் சென்றனர். [2] சிறு வயதிலிருந்தே, லீட்ஸ், பிராட்போர்டு மற்றும் குடும்ப விடுமுறை நாட்களில், ஸ்கார்பாரோவில் யார்க்ஷயர் கவுண்டி துடுப்பாட்ட போட்டிகளை நேரில் பார்த்தார். [3] பின்னர், யெடன் மற்றும் குய்ஸ்லி மேல்நிலைப் பள்ளியில், வெரிட்டி பள்ளி துடுப்பாட்ட அணியில் விளையாடினார். இடது கை விரைவு வீச்சு பந்துகளை வீசினார். [3] இவர் 1929 வரை இந்த பாணியில் விளையாடினார். மேலும் உள் சுழற் பந்து மற்றும் வெளிச் சுழல் பந்து ஆகிய இரண்டையும் வீசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். [4]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

1931 ஆம் ஆண்டில் இவரைப் பல விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் ரோட்ஸுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். இந்த பருவத்தின் முதல் போட்டியில் யார்க்ஷயர் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். முதல் போட்டியில் மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்திற்கு (எம்.சி.சி) க்கு எதிராக வெரிட்டி 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இழப்புகளைக் கைப்பற்றினார். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக 42 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இழப்புகளையும் கைப்பற்றினார். [5] [6] பின்னர், தனது ஐந்தாவது ஆட்டத்தில், அலோன்சோ டிரேக்கிற்குப் பிறகு, யார்க்ஷயருக்காக ஒரே ஆட்டப் பகுதியில் 10 இழக்குகளையும் கைப்பற்றினார். [7] வார்விக்ஷயருக்கு எதிராக, தனது 26 வது பிறந்தநாளில், வெரிட்டி இரண்டாவது ஆட்டப்பகுதியில் 10 இழப்புகளைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் யார்க்சயர் துடுப்பாட்ட அணி ஓர் ஆட்டப் பகுதி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[8]

மேலும் லங்காசயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இழப்புகளைக் கைப்பற்றினார். ஆனால் பிராங்க்லீ எனும் மட்டையாளர் இவரின் ஒரே நிறைவில் நான்கு ஆறு ஓட்டங்களை எடுத்தார். பின்னர் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் ஜெண்டில் மேன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் ஐந்து இழப்புகளைக் கைப்பற்றினார். [9] யார்க்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டயில் இவர் சிறப்பாக செயல்பட்டதனைத் தொடர்ந்து இவர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான துடுப்பாட்டத் தொடரில் தேர்வானார்.தனது முதல் போட்டியில் 75 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இழப்புகளைக் கைப்பற்றியது.

சான்றுகள்[தொகு]

  1. Hill, pp. 13, 15.
  2. Hill, pp. 14, 16.
  3. 3.0 3.1 Hill, p. 18.
  4. Hill, p. 23.
  5. "Player Oracle H Verity". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 14 March 2011.
  6. Hill, p. 47.
  7. The Yorkshire County Cricket Club: 2011 Yearbook. Great Northern Books.
  8. Hill, pp. 48–50.
  9. "Gentlemen v Players in 1931". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெட்லி_வெரிட்டி&oldid=3007167" இலிருந்து மீள்விக்கப்பட்டது