ஹூலியன் தொடருந்து தடம்புரண்டு விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹூலியன் தொடருந்து தடம்புரண்டு விபத்து
Hualien train derailment
2021年太魯閣列車出軌事故 01.jpg
தடம்புரண்ட டாரோகோ விரைவு தொடருந்து
சுரங்கவழி நுழைவுப்பகுதியில் வெளியிருந்து தோற்றம்
நேரம்09:28 தேசிய சீர் நேரம் (01:28 (UTC)
நாள்2 ஏப்ரல் 2021
அமைவிடம்குயிங்சூயி சுரங்கத் தடம், சியூலின்
ஹீலியன் நாடு
ஹெரன் மற்றும் சோங்டீ தொடருந்து நிலையங்களுக்கிடையில்(51.45 km (31.97 mi) சூயாக்சின் தொடருந்து நிலையத்திலிருந்து)[1]
புவியியல் ஆள்கூற்று24°13′02″N 121°41′18″E / 24.2171°N 121.6883°E / 24.2171; 121.6883ஆள்கூறுகள்: 24°13′02″N 121°41′18″E / 24.2171°N 121.6883°E / 24.2171; 121.6883
வகைதடம் புரண்டு, மோதல்
இறப்புகள்49[2]
காயமுற்றோர்202[3]

ஹூலியன் தொடருந்து தடம்புரண்டு விபத்து என்பது ஏப்ரல் 2, 2021, 09:28 NST மணிக்கு 09:28 NST (01:28 UTC) தைவான் இரயில்வே நிர்வாகத்தின் டாரோகோ விரைவு தொடருந்து தடம் புரண்டது விபத்திற்குள்ளது. இந்த விபத்தானது ஹெரென் மார்க்கத்தில் உள்ள குயிங்சூயி சுரங்க வடக்கு நுழைவாயில் பகுதியில் சியூலின் நகரத்தில் ஹுலியன் கவுண்டி பகுதியில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 51 இறந்தனர், மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[4][5][6][3][2] விபத்து நடந்த நேரத்தில், இந்த தொடருந்தில் 488 பயணிகள் பயணம் செய்தனர்.[4][7] ஹூலியன் நகரத்தின் வடக்கே சுரங்கப்பாதையில் எட்டு பெட்டிகளுடன் பயணம் செய்த இந்த விரைவு வண்டி கட்டுமான வண்டி ஒன்றின் மீது மோதியதில் விபத்திற்கு உள்ளானது. கட்டுமான வண்டியானது சாய்வு பாதையில் சரிந்து விபத்திற்குள்ளானது.[8]

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின் (1948க்குப் பிறகு) தைவானில் ஏற்பட்ட மிக மோசமான தொடருந்து விபத்து இதுவாகும். 1948ல் நிகழ்ந்த ஒரு தொடருந்து தீ விபத்தில் 64 பேர் கொல்லப்பட்டனர்.[9] இது தைவான் இரயில்வே நிர்வாகத்தினரால் மிக மோசமான இரயில் விபத்து என்று அழைக்கப்பட்டது.[10]

பின்னணி[தொகு]

2021: டாரோகோ விரைவு வண்டியின் உட்தோற்றம்

தைவானில் கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவான கிங்மிங் திருவிழாவின் முதல் நாளில் இந்த விபத்து நிகழ்ந்தது. இறந்த குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளுக்குச் சென்று இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் பயணம் செய்தவர்கள் விபத்திற்குள்ளானார்கள். இத்திருவிழாவின் போது மக்கள் அதிக பயணம் செய்வதால் போக்குவரத்து அதிகமாக உள்ள காலமாகும்.[11][12] விபத்து நடந்த நேரத்தில் பல பயணிகள் இரயிலில் நின்று கொண்டிருந்தனர்.[13]

டாரோகோ விரைவு வண்டி எட்டு பெட்டிகளுடன், 376 இருக்கைகள் கொண்ட தொடருந்தாக இயக்கப்படுகிறது.[14][15] இது TRA- சியாங் வரையறுக்கப்பட்ட தொடருந்து சேவையின் ஒரு பகுதியாகும் இயக்கப்பட்டது. இது தைவான் இரயில்வே அமைப்பின் மிக உயர்ந்த சேவை வகுப்பினைக் கொண்ட தொடருந்தாகும். டாரோகோ விரைவுவண்டி ஒரு சாய்வு இரயில் என்பதால்[a] அதிகபட்ச இயக்க வேகம் 130 கிமீ / மணி (81 mph) ஆகும். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்ட இருக்கைகளை விடக் கூடுதலாகப் பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக நின்றுகொண்டு செல்ல அனுமதியில்லை. எனினும், தேவை அதிகமாக உள்ள காலங்களில் பயணச்சீட்டு அதிகமாக வழங்கப்பட்டன. மே 2, 2019 முதல் ஒவ்வொரு பயணத்தின் போதும் சுமார் நின்றுகொண்டு பயணிப்பதற்கான 120 பயணச் சீட்டுகள் வரை விற்பனை. இதுவும் விரிவாகப் பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டது.[17]

கிங்ஷுய் சுரங்கம் என்பது கிங்ஷுய் மலைமுகடு வழியாக வெட்டப்பட்ட ஒற்றை-தடச் சுரங்கம் ஆகும். ஏப்ரல் 2019இல், மேற்கு பாதையில் ஒரு பாறைக் கொட்டகை அமைப்பதன் மூலம் சுரங்கத்தின் வடக்கு முனைக்கு அருகில் சாய்வு நிலைத்தன்மையை மேம்படுத்தத் தைவான் இரயில்வே நிர்வாகம் கட்டுமானத்தைத் தொடங்கியது.[18] [19] விபத்து நடந்த நேரத்தில், கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளது.

விபத்து[தொகு]

2009 இல் வடக்கிலிருந்து கிங்ஷுய் மலைமுகடு. கீழே வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது சுரங்கப்பாதை போர்டல் விபத்து நடந்த இடம்.

விபத்து நடந்த ஏப்ரல் 2ஆம் நாளன்று, 09:28 NST மணிக்கு 09:28 NST (01:28 UTC) தெற்கு நோக்கிப் பயணித்த டாரோகோ விரைவுவண்டி (இரயில் 408) தாத்துங் நோக்கி பயணித்தது.[20] இந்த இரயில் கிங்ஷுய் சுரங்கப்பாதையில் நுழைந்தபோது தடம் புரண்டது. இந்த விபத்தானது ஹெரென் மற்றும் சோண்டீ நிலையங்களுக்கிடையே நிகழ்ந்தது.[21][2] எட்டு பெட்டிகளுடன் இயங்கிய இந்த விரைவுவண்டியில் 488 பயணிகளுடன் மூன்று ஊழியர்களும் ஒரு துப்புரவு பணியாளரும் ஆக மொத்தம் 492 பேர் பயணம் செய்தனர்.[4][12] தொடருந்தானது கிழக்கு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது.[22] ஊடக அறிக்கையின்படி, சாய்வு உறுதிப்படுத்தும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சமப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட சரக்குந்து 20 மீ (66 அடி) மலையின் ஓரத்திலிருந்து தொடருந்து தடத்தில் விழுந்ததால், அதன் மீது விரைவுவண்டி மோதி விபத்துக்குள்ளானது.[13][23][8][10] இப்பகுதியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு எந்த கட்டுமானமும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை.[18][22] விபத்து நிகழ்ந்தபோது விபத்திற்குள்ளான சரக்குந்து ஓட்டுநர் வாகனத்தில் இல்லை. அருகிலுள்ள கட்டுமான தள அலுவலகத்திலிருந்தார்.[23][24]

சுரங்கப்பாதையில் நுழைவதற்கு முன்பு கட்டுமான சரக்குந்து மீது தொடருந்து மோதியதில் முன்புறத்திலிருந்த பெட்டி எண் 7 மற்றும் 8 கடுமையாகச் சிதைக்கப்பட்டன. பின்னர் மீதமுள்ள பெட்டிகள் சுரங்கப்பாதையின் சுவர்களில் மோதி பெரும் சேதமடைந்தது. தொடருந்து நிறுத்தப்பட்டபோது பெட்டி 8 முதல் 3 வரை சுரங்கப்பாதையில் சிக்கியதாக நம்பப்படுகிறது.[25]

உயிரிழப்புகள்[தொகு]

இந்த சம்பவத்தின்போது குறைந்தது 51 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் நாற்பத்தெட்டு பயணிகள், இரயில் ஓட்டுநர் மற்றும் ஒரு ரயில் உதவியாளர் ஒருவர் அடங்குவர்.[26][5][6] மேலும் 156 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் பெட்டி எண் 7 மற்றும் 8ல் பயணம் செய்தவர்கள். தொடருந்தின் இடிபாடுகளில் எழுபத்திரண்டு பேர் சிக்கிக்கொண்டனர்.[6] புகலிடம், தொடக்கப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் வகுப்பு மாணவர்களும் பயணம் செய்தனர். அவர்களில் நான்கு மாணவர்கள் இறந்தனர், மேலும் 31 பேர் காயமடைந்தனர்.[27]இறந்தவர்களில் பிரான்சின் நாட்டைச் சார்ந்த ஒருவரும்,[28] காயமடைந்தவர்களில் ஜப்பானைச் சேர்ந்த இருவரும் மக்காவுனைச் சார்ந்த ஒருவரும் அடங்குவர்.[29][28]

மீட்பு நடவடிக்கை[தொகு]

விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர்

தேடுதல் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்கள் தொடருந்து தடம் புரண்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டனர்.[12]பராமரிப்பு சரக்கு வாகன ஓட்டுநரை விசாரணைக்காக காவல்துறையினர் காவலில் எடுத்துள்ளனர்.[13] தொடருந்தின் பின்புற நான்கு பெட்டிகளிலிருந்து 80க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள நான்கு பெட்டிகள் "சிதைவடைந்தவை" எனவே அணுகக் கடினமாக உள்ளன.[13]

விபத்து நடந்த இடத்தை பிரீமியர் சு செங்-சாங், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர், லின் சியா-லங் மற்றும் உள்துறை அமைச்சர் ஹ்சு குவோ-யுங் முதலில் பார்வையிட்டனர்.[30] இவர்களுடன் பிற உள்ளூர் அரசாங்க அதிகாரிகளும் சென்றனர்.

ஏப்ரல் 3ஆம் நாளன்று சீனக் குடியரசின் தலைவர் விபத்து நடந்த இடத்திற்கும் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சைபெற்று வருபவர்களையும் சென்று பார்த்தார். [31]

தைவான் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[32] இந்த விபத்திற்குக் காரணமான கட்டுமான சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், 45 வயதான லீ, போலிசாரால் கைது செய்யப்பட்டு பேரழிவுக்கான காரணம் குறித்த விசாரணையில் உள்ளார்.[33] நிறுத்த தடையினை சரியாகப் பயன்படுத்தாமல் வாகனத்தை நிறுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சரக்குந்து சரிவிலிருந்து நகன்று கீழே விழுந்து தொடருந்து மீது மோதியது.[34]

இரங்கல்[தொகு]

தைவானில் உள்ள அமெரிக்க நிறுவனம், ஐரோப்பியப் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம், பிரிட்டிஷ் அலுவலகம் தைபியின் ஜான் டென்னிஸ்,[35], ஐப்பான் தைவான் பரிமாற்று சங்கம்[36] மற்றும் சீனாவின் தைவான் விவகார அலுவலகம் மற்றும் தைவான் நீரிணை முழுவதும் உள்ள உறவுகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.[37][38]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://archive.is/20210403052054/https://www.cna.com.tw/news/firstnews/202104025003.aspx
 2. 2.0 2.1 2.2 Everington, Keoni (2 April 2021). "36 lose vital signs after train derails in eastern Taiwan". https://www.taiwannews.com.tw/en/news/4166946. 
 3. 3.0 3.1 Amy Qin; Amy Chang Chien (1 April 2021). "Taiwan Train Derails in Tunnel, Killing at Least 1 Person". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2021/04/01/world/asia/taiwan-train-derails.html. 
 4. 4.0 4.1 4.2 Wang, Cindy (2021-04-02). "High-Speed Train Derails in Taiwan's East Coast, Killing 41". Bloomberg News. https://www.bloomberg.com/news/articles/2021-04-02/train-in-taiwan-derails-with-potentially-hundreds-aboard. 
 5. 5.0 5.1 "Passenger train carrying 490 derails in Taiwan, killing at least 50 and injuring dozens". 2021-04-02. https://edition.cnn.com/2021/04/01/asia/taiwan-train-derail-intl-hnk/index.html. 
 6. 6.0 6.1 6.2 Zhang Qi; Guo Zhixuan; Yu Xiaohan (2 April 2021) (in zh-hant). Central News Agency. https://www.cna.com.tw/news/firstnews/202104025002.aspx. 
 7. Chang Chi; Lu Tai-cheng; Frances Huang (2 April 2021). "Multiple passengers reported with 'no vital signs' in train derailment". Focus Taiwan. Taipei. https://focustaiwan.tw/society/202104020003. 
 8. 8.0 8.1 Hille, Kathrin (2 April 2021). "Taiwan train derailment kills 51 and injures scores more". Financial Times. https://www.ft.com/content/308d919b-0ced-4295-b6c0-073e257b46d8. 
 9. Staff, Reuters (2021-04-02). "Factbox: Taiwan's worst train accidents" (in en). Reuters. https://www.reuters.com/article/us-taiwan-train-crashes-factbox-idUSKBN2BP0OQ. 
 10. 10.0 10.1 JENNINGS, RALPH; LAI, JOHNSON (2 April 2021). "Train hits truck that slid onto track in Taiwan, killing 51". archive.is. Archived from the original on 2 ஏப்ரல் 2021. 3 ஏப்ரல் 2021 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
 11. "Taiwan: At least 34 killed after train derails inside tunnel" (in en-GB). BBC News. 2 April 2021. https://www.bbc.com/news/world-asia-56612248. 
 12. 12.0 12.1 12.2 Davidson, Helen (2 April 2021). "Taiwan train crash: dozens dead after express service derails in tunnel". தி கார்டியன். https://www.theguardian.com/world/2021/apr/02/taiwan-train-crash-many-injured-at-start-of-holiday-weekend. 
 13. 13.0 13.1 13.2 13.3 Blanchard, Ben (1 April 2021). "Taiwan train crash kills 36 in deadliest rail tragedy in decades". Reuters. https://www.reuters.com/article/us-taiwan-train/taiwan-train-crash-kills-36-in-deadliest-rail-tragedy-in-decades-idUSKBN2BP07P. 
 14. "Driver killed as train plows into truck". Taipei Times. 18 January 2012. https://www.taipeitimes.com/News/front/archives/2012/01/18/2003523487. 
 15. 15.0 15.1 "News Releases: January 9, 2015". Hitachi Global. 2021-04-02 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2021-04-03 அன்று பார்க்கப்பட்டது.
 16. https://archive.is/20210402115323/https://stat.ncl.edu.tw/glossaryDetail_en.jsp?p=00005256
 17. Chuang, C. (1 May 2019). https://news.pts.org.tw/article/430483. 
 18. 18.0 18.1 汪淑芬 (April 2, 2021). (in zh-tw)Central News Agency. https://www.cna.com.tw/news/firstnews/202104020164.aspx. 
 19. 田德財 (April 2, 2021). (in zh-tw)KS News. http://www.ksnews.com.tw/index.php/news/realtimenewsContent/0000012201. 
 20. "Train schedule/code inquiry". Taiwan Railway. 3 April 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
 21. "36 reported with no vital signs, 44 injured in train derailment". Focus Taiwan (Central News Agency). 2 April 2021. https://focustaiwan.tw/society/202104020008. 
 22. 22.0 22.1 鄭瑋奇 (April 2, 2021). "台鐵出軌》清明連假台鐵工程全暫停 太魯閣號卻撞上工程車出軌" (in zh-tw). Liberty Times. https://news.ltn.com.tw/news/society/breakingnews/3487303. 
 23. 23.0 23.1 "【台鐵出軌】關鍵28分鐘!工程車亂停無聲滑落埋殺機 真相在這台機器" (in zh-tw). Apple Daily. April 2, 2021. https://tw.appledaily.com/life/20210402/SPZ5OTQQY5ERPG5AZFH6JWJY5E/. 
 24. 王思慧 (April 2, 2021). "疑忘拉手煞車釀大禍 工程車司機檢警偵訊中" (in zh-tw). United Daily News. https://udn.com/news/story/122094/5361784. 
 25. Everington, Keoni (2 April 2021). "Home Society 36 lose vital signs after train derails in eastern Taiwan". Taiwan News. https://www.taiwannews.com.tw/en/news/4166946. 
 26. Wang Junqi; Wang Jinyi; Hua Mengjing; Yuta Lang (2 April 2021) (in zh). Taipei, Taiwan. https://news.ltn.com.tw/news/society/breakingnews/3487285. 
 27. 台鐵出軌》已知學生3死31傷 幼兒園學童不幸罹難. ltn.com.tw (சீனம்). 2 April 2021. 2 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
 28. 28.0 28.1 Davidson, Helen (2021-04-03). "Taiwan train crash: prosecutors question truck driver over disaster". தி கார்டியன். https://www.theguardian.com/world/2021/apr/03/taiwan-train-crash-prosecutors-seek-arrest-warrant-over-disaster. 
 29. "Taiwan train crash: 50 killed, 146 hurt in collision with runaway truck". South China Morning Post (ஆங்கிலம்). 2 April 2021. 2 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
 30. "Taiwan: Dozens killed as train crashes and derails in tunnel". BBC.com. April 2, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 31. "Taiwan President Tsai Ing-wen Visits Train Crash Injured". Republicworld.com. April 3, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 32. Xie, Stella Yifan; Wang, Joyu (2021-04-02). "Taiwan Train Derails, Killing at Least 50 People". Wall Street Journal. பன்னாட்டுத் தர தொடர் எண்:0099-9660. https://www.wsj.com/articles/taiwan-train-derails-killing-at-least-41-people-11617350067. 
 33. Chang Chi; Tyson Lu (2 April 2021). "Crane truck driver questioned by police over fatal train accident". https://focustaiwan.tw/society/202104020013. 
 34. Chen, Shanshan (3 April 2021). "快訊/太魯閣號22名確認罹難者名單曝 28人身分待辨識". https://news.ebc.net.tw/news/society/255441. 
 35. "太魯閣號事故 美英法澳歐盟駐台機構發文哀悼慰問". Taiwan Central News Agency (சீனம்). 2 April 2021.
 36. "太魯閣號事故 日本前首相安倍與參議員蓮舫送暖". Taiwan Central News Agency (சீனம்). 2 April 2020.
 37. "国台办、海协会对台铁列车出轨事故伤亡台胞及家属表示哀悼和慰问". Taiwan Affairs Office (சீனம்). 2 April 2021.
 38. "國臺辦:對臺鐵列車出軌事故表達高度關切". Taiwan Affairs Office (சீனம்). 2 April 2021.

 
பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found