உள்ளடக்கத்துக்குச் செல்

ஹூண்ட் விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதிகளை முன்மொழிந்த பிரெட்ரிக் ஹூண்ட்

அணு இயற்பியல் மற்றும் குவாண்டம் வேதியியலில், ஹூண்ட் விதிகள் (Hund's rules) என்பவை 1925 ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்பியலாளர் பிரெட்ரிக் ஹூண்ட் உருவாக்கிய விதிகளின் தொகுப்பைக் குறிக்கின்றன, அவை பல எலக்ட்ரான்களைக் கொண்ட அணு தாழ் ஆற்றல் நிலை அல்லது சாதாரண நிலைக்குத் தொடர்புடைய மொத்த சுழல் கோண உந்தக் குவாண்டம் எண்களின் ஆற்றல் நிலைக் குறியீட்டினைக் கண்டறிய உதவும் விதிகளாகும். முதல் விதியானது வேதியியலில் குறிப்பாக முக்கியமானது ஆகும். பெரும்பாலும் இந்த முதல் விதியே ஹூண்ட் விதி என்று குறிப்பிடப்படுகிறது.

மூன்று விதிகளாவன: [1][2][3]

  1. கொடுக்கப்பட்ட எலக்ட்ரான் கட்டமைப்பிற்கு, அதிகபட்ச சுழற்பரிமாண திசைப்பன்மையைக் கொண்ட ஆற்றல் நிலைக் குறியீடே மிகக் குறைந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆற்றல் நிலைக் குறியீடானது 2S + 1 என்பதற்குச் சமமாக உள்ளது. இதில் S என்பது அனைத்து எலக்ட்ரான்களுக்குமான மொத்த சுழல் கோண உந்தம் ஆகும். பெருக்குமை என்பது இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கையுடன் ஒன்றைக் கூட்டக் கிடைக்கும் எண்ணிற்குச் சமம் . எனவே, மிகக் குறைந்த ஆற்றல் கொண்ட பெருக்குமையே, அதிகபட்ச S மதிப்பு மற்றும் சம சுழல் கோண உந்தம் கொண்ட (+ 1/2 அல்லது-1/2). அதிகபட்ச எண்ணிக்கையிலான இணைக்கப்படாத எலக்ட்ரான்களைக் கொண்ட பெருக்குமையாகும்.
  2. கொடுக்கப்பட்ட ஆற்றல் நிலைக் குறியீட்டிற்கு, மொத்த சுற்றுப்பாதை கோண உந்தம் குவாண்டம் எண்ணின் மிகப்பெரிய மதிப்பைக் கொண்ட ஆற்றல் நிலைக் குறியீட்டிற்கு மிகக் குறைந்த ஆற்றலைக் கொண்டுள்ளது.
  3. கொடுக்கப்பட்ட பெருக்குமைக்கு, வெளிப்புறத்தில் பாதியளவு நிரம்பிய அல்லது அதற்கும் குறைவான அளவு நிரம்பிய அணுவில், மொத்த கோண உந்தம் குவாண்டம் எண் மிகக் குறைந்த மதிப்பைக் கொண்ட நிலை ( J = L+S என்ற செயலிக்கு) மிகக் குறைவான ஆற்றல் நிலையில் உள்ளது. வெளிப்புறக் கூட்டில் பாதிக்கு மேல் நிரம்பியிருந்தால், மிக உயர்ந்த மதிப்புள்ள நிலை   மிகக் குறைந்த ஆற்றல் நிலையைக் கொண்டுள்ளது.

இந்த விதிகள் தாழ்நிலை ஆற்றல் மட்டத்தை உள்ளடக்கிய பல்வேறு ஆற்றல் மட்டங்களுக்கிடையேயான ஆற்றல் தொடர்புகள் எவ்வாறு பெருக்குமையால் தீர்மானிக்ப்படுகிறது என்பதை எளிமையான முறையில் குறிப்பிடுகின்றன. வெளிப்புற எலக்ட்ரான்களுக்கு இடையிலான விலக்கலானது சுழல்-சுற்றுப்பாதை இடைவினைகளை விட மிகப் பெரியது என்று இவ்விதிகள் கருதுகின்றன, சுழல் சுற்றுப்பாதை இடைவினை ஆற்றல் மீதமுள்ள மற்ற தொடர்புகளை விட வலுவானது. இது LS இணைப்புக் கவர்ச்சி எல்லை என்று குறிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ G.L. Miessler and D.A. Tarr, Inorganic Chemistry (Prentice-Hall, 2nd edn 1999) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0138418918, pp. 358–360
  2. ↑ T. Engel and P. Reid, Physical Chemistry (Pearson Benjamin-Cummings, 2006) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 080533842X, pp. 477–479
  3. ↑ G. Herzberg, Atomic Spectra and Atomic Structure (Dover Publications, 1944) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0486601153, p. 135 (Although, Herzberg states these as being two rules rather than three.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூண்ட்_விதிகள்&oldid=4332038" இலிருந்து மீள்விக்கப்பட்டது