ஹுருலு காட்டு ஒதுக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹுருலு காட்டு ஒதுக்கீடு
{{{float_caption}}}
{{{base_caption}}}
ஹுருலு காட்டு ஒதுக்கீடு
அமைவிடம் வட மத்திய மாகாணம், இலங்கை
கிட்டிய நகரம் Anuradhapura
ஆள்கூறுகள் 8°12′36″N 80°50′59″E / 8.21000°N 80.84972°E / 8.21000; 80.84972ஆள்கூற்று: 8°12′36″N 80°50′59″E / 8.21000°N 80.84972°E / 8.21000; 80.84972
பரப்பளவு 25.50 கிமீ²
நிறுவப்பட்டது 1977[1]
நிருவாக அமைப்பு வனவள பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை

இலங்கையின் உயிர்வள ஒதுக்கீட்டுப் பகுதியொன்றாக ஹுருலு காட்டு ஒதுக்கீடு 1977 ஆம் ஆண்டு யனவரி மாதம் பிரகடனப்படுத்தப்பட்டது. இக்காட்டு ஒதுக்கீடானது இலங்கை யானைகளுக்கு முக்கிய வாழிடமாகும்.[2] ஹுருலு காட்டு ஒதுக்கீடானது இலங்கையின் உலர் வலய என்றும் பசுமையான காடுகளைச் சேர்ந்ததாகும்.[3] ஹுருலு காட்டு ஒதுக்கீட்டுப் பகுதியைச் சுற்றி வேறு பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் காணப்படுகின்றன. அவற்றுள் ரிட்டிகல கட்டாய இயற்கை ஒதுக்கீடு, மின்னேரிய-கிரிதலே மற்றும் மகாவலி வடிநில இயற்கை ஒதுக்கீடுகள், வஸ்கமுவ தேசிய வனம், கஹல்ல-பல்லேகெலே சரணாலயம் என்பன அடங்கும்.

புவியியற் தன்மைகள்[தொகு]

இக்காட்டுப் பகுதியின் வருடாந்த சராசரி வெப்பநிலை 27.3 °C ஆகும் அதே வேளை வருடாந்தம் இப்பகுதி பெறும் சராசரி மழைவீழ்ச்சி 1600 மிமீ ஆகும். இங்கு ஏப்ரல்/மே முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் ஆண்டு தோறும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையான கோடை காலம் நிலவுகிறது.[4] இக்காட்டின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 90 மீற்றர் முதல் 150 மீற்றர் வரை வேறுபடுகிறது.[5]

தாவரங்களும் விலங்குகளும்[தொகு]

முதிரை, பாலை, கருங்காலி ஆகியன இங்கு மிகப் பரவலாகக் காணப்படும் மரங்களாகும்.[5] இந்திய உடு ஆமை, இலங்கைக் காட்டுக்கோழி, இலங்கை யானை, இலங்கைச் சிறுத்தை மற்றும் மங்கிய புள்ளிப் பூனை என்பன இக்காட்டில் வாழும் விலங்குகளில் அழிவுக்குள்ளாகி வருவனவாகும்.

மனித தாக்கம்[தொகு]

இக்காட்டு ஒதுக்கீட்டுப் பகுதியில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான பதிவுகள் காணப்படவில்லை.[5] இக்காட்டுப் பகுதியில் நடைபெறும் முக்கிய வருமான வழி சேனைப் பயிர்ச்செய்கையாகும். இங்கு வாழும் இலங்கை யானை எனும் இனம் ஆங்காங்கே சுற்றித் திரிவது சாதாரணமானதாகும். அவை பொதுவாக கோடை காலங்களில் இங்குள்ள காடுகளுக்கிடையில் அலைகின்றன.[2] மனிதக் குடியிருப்புக்களின் விரிவாக்கமும் காடழிப்பும் மனித-யானை மோதலை இப்பகுதியில் அடிக்கடி தோற்றுவிக்கின்றன. இதனால் மனிதர்கள் கொல்லப்படுவதும், பொருட்கள், வீடுகள், பயிர்ச்செய்கைகள் என்பன சேதமாக்கப்படுவதும், சிலவேளைகளில் யானைகள் கொல்லப்படுவதும் நிகழ்கின்றன. இம்மோதலைச் சமாளிப்பதற்காக அவற்றை இடமாற்றம் செய்வது பொருத்தமான தீர்வாகக் கருதப்படுகிறது.[6]

இடமாற்றம் செய்வது சிறந்த திட்டமாகக் காணப்படுவதில்லை. ஏனெனில், இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளிற் பலவும் தங்களது சொந்த இடங்களுக்கே மீண்டும் வருவது நிகழ்கிறது. அண்மையில், அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட ஒற்றைத் தந்தமுள்ள யானையொன்று அதன் சொந்த இடத்தை நோக்கி ஒரு மாத காலத்தில் 243 கிலோமீற்றர் தொலைவைக் கடந்து வந்தது தெரிய வந்துள்ளது.[6] அந்த யானை அங்கிருந்து நேர்ப் பாதையில் 93 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சோமாவதி தேசிய வனத்தில் விடப்பட்டிருந்தது. வானொலிச் சமிக்ஞைகள் மூலம் அதன் நடமாட்டம் அவதானிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு யானைகள் திரும்பி வருவதற்குக் காரணம் அவை தம் சொந்த வாழிடங்கள் மீது தீராத பற்றுக் கொண்டிருப்பதாகும்.

ஹுருலு காட்டு ஒதுக்கீட்டில் உள்ள அழிவுக்குள்ளாகும் விலங்குகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "யுனெசுகோவின் மனிதனும் உயிர்வளமும் திட்டம் (MAB)". unesco.org. யுனெசுகோ. பார்த்த நாள் 2009-05-26.
  2. 2.0 2.1 "மின்னேரிய - தற்போது பெருந்தோலிகள் அலையும் இடம்". lakdiva.com. The Island. பார்த்த நாள் 2009-05-26.
  3. விக்கிரமநாயக்க, எரிக் டி.; சாவித்திரி குணதிலக்க. "இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகள் (IM0212)". worldwildlife.org. இயற்கைக்கான உலகளாவிய நிதியம். பார்த்த நாள் 2009-05-26.
  4. "பருவப்பெயர்ச்சிக் காடுகள்". The Sunday Times (Sri Lanka) (Wijeya Newspapers Ltd.). 2003 யூலை 20. http://sundaytimes.lk/030720/funday/4.htm. பார்த்த நாள்: 2009-05-26. 
  5. 5.0 5.1 5.2 "ஹுருலு". unesco.org. யுனெசுகோ (2002-02-08). பார்த்த நாள் 2009-05-26.
  6. 6.0 6.1 ஹெட்டியாரச்சி, குமுதினி (2009 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை). "யானைகள் ஏன் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றன?". The Sunday Times (Sri Lanka) (Wijeya Newspapers Ltd.). http://sundaytimes.lk/090405/News/sundaytimesnews_28.html. பார்த்த நாள்: 2009-05-26.