ஹுமாயூன் கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹமாயூன் கபீர் ஒரு பெங்காலி எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.கபீர் வங்காளத்தில் பரிதாபூர் மாட்டத்தில் உள்ள மாவட்டத்தில் கொமர்பூர் என்ற கிராமத்தில் பிப்ரவரி 22,1906-ல் பிறந்தார். இவருடைய தந்தை கான் பகதூர் கபீருதீன் அகமது ஆவார். இவர் வங்காளத்தில் துணை நீதிபதியாக இருந்தார்.

கல்வி[தொகு][தொகு]

கபீர் 1922-ல் நடத்தப்பட்ட மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.இவர் கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் கலைப்பிரிவில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.எ., மற்றும் எம்.எ., ஆங்கிலம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.இவர் இங்கிலாந்தில் உள்ள ஆக்‌ஸ்ஃபோர்டு-ல் உள்ள எக்ஸ்டர் கல்லூரியில் கல்வி உதவித் தொகை பெற்றார்.ஆக்‌ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நவீன இலக்கியங்களான தத்துவம்,அரசியல் அறிவியல்,பொருளாதாரம் ஆகியவறை 1931-ல் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்.

வாழ்க்கைப்போக்கு[தொகு]

ஹுமாயூன் கபீர்,1932-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திரா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்ற சர்வபள்ளி ராதாகிருஷ்ணனால் அழைக்கப்பட்டார்.பிறகு,டெல்லியில்லுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவில் இணைக் கல்வி ஆலோசகராகவும்,கல்விச் செயலராகவும் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.இவர் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சராகவும்,கல்வி அமைச்சராக இருமுறையும், ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்த்ரி பிரதம மந்திரியாக இருந்தபோது பணியாற்றினார்.மேலும் இவர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.1965-ல் இந்திரா காந்தி அவர்களால் மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.ஆனால் கபூர் அதனை மறுத்துவிட்டார்.1956-லிருந்து 1962 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும்,1962-லிருந்து 1969 வரை மக்களவை உறுப்பினராகவும்,வங்காளத்தில் உள்ள பசிர்கட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலக்கியப் படைப்புகள்[தொகு]

ஹமாயூன் கபீர், மெளலானா அப்துல்கலாம் ஆசாத்தின் வாழ்க்கை வரலாறான "இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்"( India wins freedom" என்ற புத்தகத்தின் பதிப்பாசிாியர் ஆவார். மெளலானா ஆசாத் தனது வாழ்க்கை வரலாற்றை கபீாிடம் உருது மொழியில் எடுத்துரைத்தார். கபீர் அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பன்னாட்டு கல்வி, அறிவியல் , கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு நிறுவனம் 1950-ல் வெளிவந்த "தி ரேஸ் கெஸ்டின்" (The Race Question) என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை வரைவுச் சட்டமாகாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவருடைய மகள் லைலா கபீர் இந்திய அரசியல்வாதி ஜார்ஜ் பெர்னான்டஸ் -ஐ திருமணம் செய்து கொண்டார். இவருடைய உறவினர் அல்டாமஸ் கபீர் இந்தியாவின் 39-வது தலைமை நீதிபதியாவார். அவருடைய தங்கை மகள் சுக்லா கபீர் சின்கா கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். இவருடைய இளைய சகோதரர் ஜஹாங்கீர் கபீர் இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் அரசியல்வாதியாக உள்ளார். 1930-ல் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து திரும்பியவுடன் இந்துப் பெண்ணான சாந்திலதா தாஸ் குப்தாவை திருமணம் செய்தார். இந்நிகழ்வு சமுதாயத்தில் பொிய கலவரத்தை ஏற்படுத்தியது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுமாயூன்_கபீர்&oldid=2784577" இருந்து மீள்விக்கப்பட்டது