ஹுசைன் பள்ளிவாசல், கெய்ரோ
ஹுசைன் பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எகிப்து கெய்ரோ, எகிப்து |
சமயம் | இசுலாம் |
ஹுசைன் பள்ளிவாசல் (Al-Hussain Mosque) (அரபு மொழி: مسجد الإمام الحسين) எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி. 1154 இல் கட்டப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இப்பள்ளிவாசல் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோ நகரில் கான் எல் கலிலி கடைவீதியில் அமைந்துள்ளது. இது எகிப்து நாட்டின் மிகப் புனிதமான இஸ்லாமிய தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1]
வரலாறு
[தொகு]இப்பள்ளிவாசல் இசுலாமிய இறைத்தூதர் முகமதுவின் பேரரும் கலிபா அலீயின் மகனுமான இமாம் ஹூசைனின் நினைவாக பாத்திம கலீபகம் ஆட்சியில் கி.பி. 1154 இல் கட்டப்பட்டது.
அடக்கத்தலம்
[தொகு]சியா இசுலாம் தாவூதி போரா பிரிவினரும் சில சுணி இசுலாம் பிரிவினரும் இப்பள்ளிவாசல் வளாகத்தில் இமாம் ஹுசைனின் தலை புதைக்கப் பட்டுள்ளதாக நம்புகின்றனர்.
முதலில் இங்குள்ள வளாகத்தில் அடக்கத்தலம் இருந்தது.பின்பு 1154 இல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.[2]
பள்ளிவாசல் சுவர்களில் பழமையான குர்ஆன் கையெழுத்து வேலைபாடுகள் உள்ளன.[3]
தாவூதி போரா இசுலாமிய பிரிவினர் மூலம் அடக்கம் செய்த இடத்தில் வெள்ளியிலான தடுப்பு உருவாக்கப்பட்டது.உருவாக்கப்பட்டது அடக்கத்தலம் பல சியா இசுலாம் முஸ்லிம்கள் வழக்கமாக பார்வையிடும் இடமாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Review of Mosque
- ↑ Williams, Caroline. 2002. Islamic Monuments in Cairo: The Practical Guide. Cairo: American University in Cairo Press, 193-194.
- ↑ Restoration of the First Quran