ஹீனா சித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Heena Sidhu, promo for 2014 CWG.jpg

ஹீனா சித்து (பிறப்பு 29 ஆகத்து 1989) என்பவர் ஒரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆவார். இவர் 2014 ஏப்ரல் 7 அன்று உலக துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரைப் பெற்றவராவார்.[1] இதற்கு முன் இவர் 2013-ம் ஆண்டு நடந்த ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (Air Pistol) பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.[2]. இவர் அஞ்சலி பகவத் (2003) மற்றும் ககன் நரங் (2008) ஆகியோருக்கு அடுத்து உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் ரைபிள்/பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் ஆவார். இவர் அன்னு ராஜ் சிங் உடன் இணைந்து 2010 காமன்வெல்த் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் இரட்டையர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.[3]. மேலும் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

தனிப்பட்ட வாழ்கை[தொகு]

2013இல், ஹீனா பல்மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.[4] ஹீனாவின்வின் தந்தை தேசிய துப்பாக்கிச் சுடும் வீரர் ஆவார். இவரது சகோதரரும் கூட 10 மீட்டர் காற்று துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். ஹீனாவினுடைய உறவினர் துப்பாக்கியை வடிவமைக்கும் கடையின் உரிமையாளர் ஆவார். 2013 பிப்ரவரி 7, அன்று, ஹீனா துப்பாக்கி சுடும் வீரரும், அவரது பயிற்சியாளராக இருந்த ராணக் பண்டிட்டை மணந்தார்.[4] ஹீனா, மும்பை, கோரேகாவில் வசித்துவருகிறார்.[5]

விருதுகள்[தொகு]

2014 ஆகத்து 28 அன்று, ஹீனாவுக்குஅர்ஜுனா விருது வழங்கப்பட்டது.[6]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீனா_சித்து&oldid=2721518" இருந்து மீள்விக்கப்பட்டது