உள்ளடக்கத்துக்குச் செல்

ஹியூ ஹெஃப்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹியூ ஹெஃப்னர்
Hugh Hefner
பிறப்பு(1926-04-09)ஏப்ரல் 9, 1926
சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 27, 2017(2017-09-27) (அகவை 91)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
படித்த கல்வி நிறுவனங்கள்இலினொய் பல்கலைக்கழகம் (பி.ஏ)
பணிஇதழாசிரியர்
அறியப்படுவதுபிளேபோய் ஆசிரியர், நிறுவனர்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
பிளே போய் தொழிலகம்
வாழ்க்கைத்
துணை
மில்டிரெட் வில்லியம்சு
(தி. 1949; மணமுறிப்பு 1959)

கிம்பர்லி கொன்ராட்
(தி. 1989; மணமுறிப்பு 2010)

கிறிஸ்டல் எஃப்னர் (தி. 2012⁠–⁠2017)
பிள்ளைகள்4
வலைத்தளம்
Playboy.com

ஹியூ மார்ஸ்டன் ஹெஃப்னர் (ஏப்ரல் 9, 1926 – செப்டம்பர் 27, 2017), ஒரு அமெரிக்க இதழியல் வெளியீட்டாளர், ப்ளேபாய் எண்டெர்பிரைசெஸ் நிறுவனர் மற்றும் தலைமைப் படைப்பதிகாரியாவார்.[1] 2003 ஆம் ஆண்டில், அவரை அரெனா இதழ் "பாலுணர்வு படைப்புக்களில் 50 மிக செல்வாக்கான மனிதர்களில்" இரண்டாவாதாகப் பட்டியலிட்டது.[2]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஹெஃப்னர் இல்லினாய்ஸ்சின் சிகாகோவில் கிரேஸ் கரோலின் ஸ்வன்சென் (1895-1997) மற்றும் கிலென் லூசியல் ஹெஃப்னர் (1896-1976) ஆகியோருக்கு இரு மகன்களில் மூத்தவராகப் பிறந்தார். அவர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர்.[3] ஹெஃப்னர் சய்ரே ஆரம்பப் பள்ளியிலும் ஸ்டீன்மெட்ஸ் உயர் நிலைப் பள்ளியிலும் படித்தார், பின்னர் அமெரிக்க இராணுவ தினசரியில் 1944 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை எழுத்தாளராகப் பணிபுரிந்தார். அவர் பின்னர் 1949 ஆம் ஆண்டில் அர்பானா-சாம்ப்பெயினிலுள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடத்தில் படைப்பாக்க எழுத்து மற்றும் கலை ஆகிய இரு மைனர்களுடன் இளங்கலைப் பட்டத்தை இரண்டரை வருடங்களில் பெற்றார். பட்டம் பெற்றப் பின்னர், இளங்கலைப் பட்டத்திற்கு பிந்தைய பருவக்கல்வியில் சமூகவியல், மகளீர் மற்றும் பாலின ஆய்வுகள் ஆகியவற்றை நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். ஆனால் விரைவில் வெளியேறினார்.[4]

எஸ்கொயரி ல் பிரதி எழுத்தராக பணியாற்றி வந்த அவர் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் $5 சம்பள உயர்வு மறுக்கப்பட்டதால் வெளியேறினார். 1953 ஆம் ஆண்டில், அவரது இருக்கை சாமான்களை $ 600 க்கு விற்றார். அத்தோடு 45 முதலீட்டாளர்களிடமிருந்து $8,000 ஐத் திரட்டினார்- அதில் தாயாரின் $1,000 மும் அடங்கும். ( 2006 ஆம் ஆண்டு அவர் E! இதழில் கூறினார்: "அவருக்கு அம்முயற்சியில் நம்பிக்கையில்லை "ஆனால் அவர் மகன் மீது நம்பிக்கையிருக்கிறது" என்பதால் கொடுத்தார்.) அதைக் கொண்டு ப்ளேபாய் யை துவங்கச் செய்தார்; அது துவக்கத்தில் ஸ்டாக் பார்ட்டி என்று அழைக்கப்படவிருந்தது. தேதியிடப்படாத முதல் பிரதி 1953 ஆம் ஆண்டு டிசம்பரில் பதிப்பிக்கப்பட்டது. அது மார்லின் மான்றோவின் 1949 ஆம் ஆண்டு நாட்காட்டிக்காக எடுக்கப்பட்ட நிர்வாண படத்தைக் கொண்டிருந்தது. ஹெஃப்னர், மான்றோவை சந்தித்ததில்லை; ஆனால் சர்ச்சின் நிலவறையில் அவருக்கு அடுத்த சவக்குழியைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஹெஃப்னர் நார்த்வெஸ்டர்ன் பல்கலை மாணவியான மில்டெரட் வில்லியம்ஸை 1949 ஆம் ஆண்டில் மணந்தார். அவர்கள் இரு குழந்தைகளைகளான கிறிஸ்டி(பிறந்தது நவம்பர் 8, 1952) மற்றும் டேவிட் (பிறந்தது ஆகஸ்ட் 30, 1955) ஆகியோரைப் பெற்றனர்.[6] திருமணத்திற்கு முன்னர் மில்டெர்ட் இராணுவத்தில் இருந்தப் போது வேறொரு நபருடன் தொடர்பை வைத்திருந்தார். மில்டெர்ட் அத்தொடர்பை உறுதிபடுத்திய போது ஹெஃப்னர் "எனது வாழ்க்கையின் அழிவை ஏற்படுத்திய தருணமாகும்" என அழைத்தார். 2006 ஆம் ஆண்டின் E! இதழின் ட்ரூ ஹாலிவுட் ஸ்டோரி ஆஃப் ஹெஃப்னர் என்ற கட்டுரை, மில்டெர்ட் பிற பெண்களுடன் அவரை உறங்க அனுமதித்ததையும், அச்செயல் மில்டெர்ட்டின் நம்பிக்கைத் துரோக்கத்தின் குற்ற உணர்வினாலும் அவர்களுடைய திருமணத்தை காப்பாற்றும் என்ற நம்பிக்கையினாலும் என்று வெளிக்காட்டியது. அவர்கள் 1959 ஆம் ஆண்டில் மணமுறிவைக் கொண்டனர்.

ஹெஃப்னர் தன்னை பார்ன் விவாண்ட்டாகவும், நகரச் சார்புடைய மானுடராகவும், அத்துடன் தனது இதழில் ஊக்கமளித்த வாழ்க்கைப் பாணியையும் அவர் தொகுத்தளித்த, பிளேபாய்ஸ் பெண்ட்தவுஸ் (1959-1960) மற்றும் பிளேபாய் ஆஃப்டர் டார்க் (1969-1970) ஆகிய இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளிக்காட்டச் செய்தார். இந்த வருடங்களில் பன்னிரெண்டு மாத பிளேமேட்ஸ்களில் தகுதியுடைய பதினொன்று பேர்களுடன் "ஈடுபட்டிருந்ததாக" ஒப்புக் கொண்டார்.[7] டோனா மிஷெலெ, மர்லின் கோல், லில்லியம் முல்லர், ஷானன் டிவிட், பிராண்டெ ரோட்ரிக், பார்பி பெண்டன், கரேன் கிறிஸ்டி, சோண்ட்ரா தியோடோர், மற்றும் காரி லீக் ஆகிய அவரது பல கூட்டாளிகளில் சிலர் அவருக்கு எதிராக $35 மில்லியன் ஜீவனாம்சத் தொகை கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். 1971 ஆம் ஆண்டில், அவர் இருபால் உறவில்[8] பரிசோதனை செய்திருப்பதாக ஒப்புக்கொண்டார், மேலும் சிகாகோவிலிருந்து லாஸ் ஏஞ்செல்ஸ்சுக்கு வாழிடம் மாறினார்.

ஹெஃப்னர் கலிபோர்னியா, வெஸ்ட் ஹாலிவுட்டின், ஒன் சென்செட்டில் காரிஸ்ஸா ஷானோன், டாஷா அஸ்டாபீய்வா, மற்றும் கிறிஸ்டினா ஷானோன் ஆகியோர் பிளேபாய்யின் 55 வது வருடாந்திர விருந்தில் டிசம்பர் 12, 2008 இல் தோற்றமளிக்கிறார்

ஹெஃப்னருக்கு 1985 ஆம் ஆண்டில் அவரது 59 ஆம் வயதில் சிறிய மாரைடைப்பு ஏற்பட்டது. அவரது வாழ்க்கைப் பாணியை மறு ஆய்வு செய்த பிறகு, பல மாற்றங்களைச் செய்தார். காட்டுத்தனமான-இரவு முழுதுமான விருந்துகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில் மகள் கிறிஸ்டி பிளேபாய் பேரரசை நிர்வகிக்கத் துவங்கினார். பின் வந்த ஆண்டில், அவர் 'பிளேமேட் ஆஃப் தி இயர்' கிம்பர்லே கோன்ராடை மணந்தார். தம்பதியருக்கு, மார்ஸ்டன் கிளென் (பிறந்தது 1990 ஏப்ரல் 9 ஆம் தேதி) மற்றும் கூப்பர் பிராட்ஃபோர்ட் (பிறந்தது 1991 செப்டம்பர் 4 ஆம் தேதி) என இரு மகன்கள் உள்ளனர்.[9] E! ட்ரூ ஹாலிவுட் ஸ்டோரி கட்டுரை குறிப்பிட்டத் தகவல்; வெறுக்கத்தக்க பிளேபாய் விடுதி குடும்ப-நட்பு பண்ணை வீடாக மாற்றப்பட்டது. 1998 ஆம் ஆண்டு அவரும் கோன்ராடும் பிரிந்த பிறகு கோன்ராட் விடுதியின் அடுத்த வீட்டிற்கு இடம் பெயர்ந்தார்.

ஹெஃப்னர், பிறகு எப்போதைக்கும் மாறாத இளம் பெண்கள் குழாம் ஒன்றை விடுதிக்குள் நுழைத்தார். ஒரு சமயத்தில் ஏழு பெண்களுடன் கூட காதல் செய்தார். அவர்களில் பிராண்டே ரோடெரிக், இஸபெல்லா செண்ட்.ஜேம்ஸ், டினா மேரி ஜோர்டன், ஹோலி மாடிசன், பிரிகெட் மார்கர்த் மற்றும் கேந்திரா வில்கின்சன் ஆகியோர் அடங்குவர். நிகழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடரான தி கேர்ள்ஸ் நெக்ஸ்ட் டோர் மாடிசன், வில்கின்சன் மற்றும் மார்கார்த் ஆகியோரின் பிளேபாய் விடுதி வாழ்க்கையை விவரித்தது.[10] 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்று பெண்களுமே விடுதியை விட்டுச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது. ஹெஃப்னர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி 2010 வரை, அவரது புதிய "எண் ஒன்று" பெண் நண்பி, கிறிஸ்டல் ஹாரிஸ்,[11] சுடனும் அத்தோடு ஒரே சாயல் உடைய 20 வயது இரட்டையர் மாடல்கலான கிறிஸ்டினா மற்றும் காரிஸ்ஸா ஷனோன் ஆகியோருடனும் காதல் செய்து வந்தார்.[12] அம் மூவரும் ஹோலி மாடிசன், பிரிகெட் மார்கார்த் மற்றும் கேந்தரா வில்கின்சன் ஆகியோரால் ஹெஃப்னரின் பெண் நண்பிகளின் விடுதி வாழ்க்கையைப் பற்றிய "தி கேர்ள்ஸ் நெக்ஸ்ட் டோர்" இன் ஆறாம் பருவத்தில் இட மாற்றம் செய்யப்பட்டனர். 11 வருட பிரிவிற்குப் பின் ஹெஃப்னர் மறுபடியும் இணைய வாய்ப்பில்லாத வேறுபாடு எனக் காரணம் காட்டி கோன்ரட்டிடமிருந்து மணவிலக்குக் கோரி வழக்கு தாக்கல் செய்தார்.[13] ஹெஃப்னர் அவருடன் மண வாழ்வை தொடர்ந்த காரணம் அவரது குழந்தைகளுக்காக[14] மட்டுமே என்றும் அவரது இளம் குழந்தை தற்போதுதான் 18 வயது பூர்த்தியுற்றதாகவும் கூறினார்.[9]

ஹெஃப்னர் தனது வாழ்வைப் பற்றிய திரைப்படமொன்றை எடுக்க பேசி வருகிறார்.[15]

அரசியலும் அறக்கொடையும்

[தொகு]

1963 ஆம் ஆண்டில் ஜூன் 4 ஆம் தேதி, அவர் பிளேபாய் இதழில் மர்லின் மன்றோவின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டப்போது ஆபாச சஞ்சிகையை விற்றதற்காக கைது செய்யப்பட்டார். ஜூரியினால் தீர்ப்பினை எழுத முடியவில்லை. அவரது முன்னாள் செயலர் பாபி ஆர்ன்ஸ்டீன் 1975 ஆம் ஆண்டு ஜனவரியில் சிகாகோ நகர விடுதியறையில் போதைப் பொருளை அளவுக்கு மீறி உட்கொண்டதால் இறந்து காணப்பட்டார். ஹெஃப்னர் செய்தியாளர்களை அழைத்து ஆர்ன்ஸ்ட்டின் போதைப் பொருள் முகவர்களாலும் மைய உளவு அதிகாரிகளாலும் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் எனக் குற்றம் சாட்டினார். ஹெஃப்னர் மேலும் அரசு தன்னை கைது செய்ய முயற்சிக்கிறது, அதற்குக் காரணம் பிளேபாய் யின் தத்துவமும் அதன் தாராளவாத போதைப் பொருள் சட்ட ஆதரிப்புமே என்று கூறினார்.[16][17]

ஹூக் ஹெஃப்னர் பர்ஸ்ட் அமெண்ட்மெண்ட் விருது கிறிஸ்டி ஹெஃப்னரால் உருவாக்கப்பட்டது. அது "அமெரிக்கர்களின் பர்ஸ்ட் அமெண்ட்மெண்ட் உரிமைகளை காக்கவும் மேம்படுத்தவுமான முக்கிய முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்த தனி நபர்களை கௌரவிக்கவே" உருவாக்கப்பட்டது.

அவர் ஜனநாயக் கட்சிக்கு நன்கொடை அளித்தார், அத்தோடு நிதி வசூலிலும் ஈடுபட்டார்.[18]

எஸ்கொயர் இதழால் நிராகரிக்கப்பட்டப் பிறகு, 1955 ஆம் ஆண்டில் ஹெஃப்னர் பிளேபாய் இதழில் சார்ல்ஸ் பீமோண்ட்டின் , "தி க்ரூக்ட் மேன்" , நேர்பால் உறவு மனிதர்கள் ஓரினபுணர்ச்சியாளர் உலகில் கொடுமைக்குள்ளாகுவது பற்றிய அறிவியல் புதின சிறுகதையை பதிப்பிக்க ஒப்புக் கொண்டார். இதழுக்கு கோபமான கடிதங்கள் வரப் பெற்ற போது ஹெஃப்னர் விமர்சனங்களுக்கு பதில் எழுதினார், அதில் அவர் கூறினார், "ஓர்பால்புணர்ச்சியாளர் சமூகத்தில் நேர்பால்புணர்ச்சியாளர்களை கொடுமைப்படுத்துவது தவறென்றால் பின்னர் அதன் நேர்மாறும் தவறானதே." ஹெஃப்னர் ஓர்பால்புணர்ச்சி உரிமை முன்னோடியாக விவரணத் திரைப்படமான "ஹூக் ஹெஃப்னர்: ப்ளேபாய், ஆக்டிவிஸ்ட் அண்ட் ரெபல்"(Hugh Hefner: Playboy, Activist and Rebel) இல் காட்டப்பட்டார்.[19]

ஹெஃப்னர் $100,000 நன்கொடையை தென் கலிஃபோர்னியா பல்கலையின் ஸ்கூல் ஆஃப் சினிமாட்டிக் ஆர்ட்ஸ்சிற்கு "திரைப்படத்தில் தணிக்கை" எனும் படிப்பை உருவாக்கக் கொடுத்தார், மேலும் $2 மில்லியனை அமெரிக்க திரைப்படத்தை ஆய்வு செய்ய ஓர் அமர்வை உருவாக்க அறக்கொடையாக அளித்தார்.[20]

அவரது அறக்கட்டளை மூலமும் தனிப்பட்ட முறையிலும் ஹெஃப்னர் அரசியல் மற்றும் பதிப்பக தொழிலுக்கு வெளியேயுள்ள அறக்கொடைகளுக்கும் பங்களித்திருக்கிறார். நிதித்திரட்டு நிகழ்ச்சிகளை "மச் லவ் அனிமல் ரெஸ்க்யூ"விற்கும், அதே போல ஜென்னி மெக்கார்த்தியினால் ஆதரிக்கப்பட்ட சர்ச்சைக்கிடமான, ஒரு அசாதாரணமான மனபிறழ்வு நோய்க்காகச் செயல்படும் நிறுவனமான "ஜெனரேஷன் ரெஸ்க்யூ"விற்காகவும் [21] நடத்தினார்.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "பிளேபய் எண்டெர்பிரைசெஸ் இன்க். நிறுவன அதிகாரிகள்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
  2. ""தி பார்ன் பவர் 50," அரெனா இதழ் , அக்டோபர் 2003". Archived from the original on 2005-10-25. பார்க்கப்பட்ட நாள் 2005-10-25.
  3. [1], மிஸ்டர் பிளேபாய் ஹூக் ஹெஃப்னர் அண்ட் தி அமெரிக்கன் ட்ரீம், ஸ்டீவன் வாட்ஸ். அக்டோபர் 10, 2009 இல் அணுகப்பட்டது.
  4. ஹூக் எம். ஹெஃப்னர் பரணிடப்பட்டது 2014-09-02 at the வந்தவழி இயந்திரம், பிளேபாய் என்டெர்பிரைசெஸ். ஜனவரி 02, 2009 அன்று அணுகப்பட்டது.
  5. வெஸ்ட்வூட் வில்லேஜ் மெமோரியல் செமிட்ரி
  6. பிளேபாய் டைம் லைன் பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம்.
  7. அகொசெல்லா. ஜுவோன்.தி கேர்ள்ஸ் நெக்ஸ்ட் டோர்நியூ யார்க்கர் , மார்ச் 20, 2006
  8. "ஃபேசஸ் ஆஃப் தி வீக்." பிபிசி செய்திகள். மே 26, 2006.
  9. 9.0 9.1 [2] பரணிடப்பட்டது 2010-07-02 at the வந்தவழி இயந்திரம் TV.com, கூப்பர் ஹெஃப்னர்
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-18. பார்க்கப்பட்ட நாள் 2010-02-25.
  11. "பிளேபாய் நிறுவுனர் ஹூக் ஹெஃப்னரின் மற்றொரு பெண் நண்பி கிறிஸ்டல் ஹாரிஸ்சையும் சந்திக்கவும்"
  12. பார்ட்டி இஸ் ஓவர் ஃபார் பிளேபாய் கிங் ஹூக் ஹெஃப்னர் தி ஏஜ் அக்டோபர் 18, 2008. அக்டோபர் 30, 2008 இல் அணுகப்பட்டது.
  13. "People.com Hugh Hefner Finally Files for Divorce". பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  14. "Reuters: Hugh Hefner files for divorce". பார்க்கப்பட்ட நாள் 2009-09-09.
  15. "Hef Ready for the big screen?". BuddyTV. January 16, 2009. Archived from the original on 2009-01-23. பார்க்கப்பட்ட நாள் 2009-01-17.
  16. David Cotner (2008-10-02). "The life and times of an alpha male". Book Review. LA Times. பார்க்கப்பட்ட நாள் 2009-01-17.
  17. Roger Ebert (October 23, 1992). "Hugh Hefner: Once upon a time". LA Times. Archived from the original on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2009-01-17.
  18. "ஹூக் ஹெஃப்னர் பெடரல் காம்பெயின் காண்டிரிபியூஷன் ரிப்போர்ட் newsmeat.com". Archived from the original on 2009-12-31. பார்க்கப்பட்ட நாள் 2010-02-25.
  19. கார்சியா, மிஷேல். "ஹூக் ஹெஃப்னர், கே ரைட்ஸ் பயனீர்" advocate.com, ஆகஸ்ட் 28, 2009
  20. ஹெஃப்னர் $2M டூ USC பிலிம் ஸ்கூல் பரணிடப்பட்டது 2007-11-17 at the வந்தவழி இயந்திரம், அசோஸியேடட் பிரஸ், நவம்பர் 16, 2007.
  21. "Hugh Hefner & Jenny McCarthy Fund Autism Research". Celebrity Halo. 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-29. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இயு எஃப்னர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூ_ஹெஃப்னர்&oldid=3792222" இலிருந்து மீள்விக்கப்பட்டது