ஹியூ கிளேகோர்ன் (குடியேற்ற ஆட்சியாளர்)
ஹியூ கிளேகோர்ன் | |
---|---|
பிறப்பு | 1752 |
இறப்பு | 1837 |
சர் ஹியூ கிளேகோர்ன் (Hugh Cleghorn, 1752-1837) என்பவர் பிரித்தானிய இலங்கையின் முதலாவது குடியேற்றச் செயலாளர் (colonial secretary) ஆவார்.
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கிளேகோர்ன் தனது 22வது அகவையில் சென் அண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் வரலாற்றியலில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.[1] இவரே ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர்.[2] 1795 ஆம் ஆண்டில் கிளேகோர்ன் இலங்கையில் ஒல்லாந்தருக்கு ஆதரவாக இருந்து பணியாற்றிய டி மோறன் படையணியின் தளபதியாக இருந்த சார்ல்சு-டானியல் டி மோறன் உடன் இருந்த தமது நட்பைப் பயன்படுத்தி அப்படையணியை பிரித்தானியருக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தவர்.[3] இவரது மகன் ஹியூ பிரான்சிசு கிளேகோர்ன் இந்தியாவில் வனத் திணைக்களம், மற்றும் வனப் பாதுகாப்பை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் ஆவார்.
மேற்கோள்கள்:
[தொகு]- ↑ A secret service Agent who became the first Colonial Secretary of Ceylon, HUGH CLEGHORN பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், தி ஐலண்டு, மார்ச்சு 3, 2005
- ↑ Clark, Aylwin (1992). An enlightened Scot: Hugh Cleghorn, 1752-1837. Black Ace Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-872988-01-6.
- ↑ Newton, Arthur Percival. The Cambridge history of the British Empire, Volume 2. Campridge University Press. pp. 26–27.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஹியூ கிளேகோர்னின் குறிப்புகள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்