ஹியூ கிளாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹியூ கிளாஸ்
1823இல் ஹியூ கிளாசை கொடுங்கரடி ஒன்று தாக்குவதை காட்டும் படம்; 1922ஆம் ஆண்டு மில்வாக்கி ஜர்னல் கட்டுரையில் வெளியானது.
பிறப்புஅண். 1783
பென்சில்வேனியா மாகாணம்
இறப்பு1833 (அகவை 49–50)
ஐக்கிய அமெரிக்கா ஒழுங்கமைக்கப்படாத ஆட்புலம், தற்கால வில்லிசுட்டன், வட டகோட்டா அருகே
இறப்பிற்கான
காரணம்
சண்டையில் பழங்குடி அமெரிக்கர்களால் கொல்லப்பட்டார்
தேசியம்அமெரிக்கர்
மற்ற பெயர்கள்முதிய ஹியூ
பணிஎல்லைப்புற வாணர், வலைவாணர், விலங்கின் மென்மயிர் வணிகர், வேடுவர், தேடலியலாளர்
அறியப்படுவதுகொடுங்கரடியின் கொடும் தாக்குதலிலிருந்து தப்பியவர்.

ஹியூ கிளாஸ் அல்லது இயூ கிளாசு (Hugh Glass, ஏறத்தாழ. 1783 – 1833)[1][2][3] அமெரிக்க எல்லைப்புற வாணர், வலைவாணர், விலங்கின் மென்மயிர் வணிகர், வேடுவர், தேடலியலாளர் ஆவார். இசுக்காட்-ஐரிய இணையருக்கு பென்சில்வேனியாவில் பிறந்த கிளாசு மொன்ட்டானா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா மாநிலங்களில் மிசௌரி ஆற்று வடிநிலங்களிலும் நெப்ராஸ்காவின் பிளாட் ஆற்று வடிநிலத்திலும் புவியாய்வு மேற்கொண்டார். கொடுங்கரடியினால் கொடூரமாகத் தாக்கப்பட்டு துணைவர்களால் மரணமடைந்தார் என கைவிடப்பட்ட நிலையில் மீண்டெழுந்து வந்தார் என்ற நாட்டுக்கதையால் பெரிதும் அறியப்படுகின்றார். சக மலைத்தேடவியலாளர்கள் ஜெடெடியா இசுமித் அல்லது கிரிசுலி ஆடம்சு போலன்றி இவர் தாம் கரடியுடன் நிகழ்த்திய சண்டையை விரிவாக சொல்ல பிழைத்திருந்தார். இவரது வாழ்க்கை இரு முழுநீள திரைப்படங்களின் கதைக்களனாக அமைந்துள்ளது: மேன் இன் தி வில்டர்னெசு (1971) மற்றும் தி ரெவெனன்ட் (2015). இவற்றில் 1823இல் ஜெனரல் ஆஷ்லேயின் தேடல் குழுவில் தென் டகோடாவில் சென்றிருந்தபோது கூட வந்தவர்களால் எவ்வித உணவும் ஆயுதங்களும் இன்றி கைவிடப்பட்டு வந்தபோதும் 200 மைல்கள் (320 km) தொலைவை தவழ்ந்தும் தடுமாறியும் கியோவா கோட்டையை அடைந்ததை விவரிக்கின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

மேற் படிப்புக்கு[தொகு]

  • Jon T. Coleman. Here Lies Hugh Glass: A Mountain Man, a Bear, and the Rise of the American Nation (2013)
  • Dale L. Morgan. Jedediah Smith and the Opening of the American West (1952)
  • "Hugh Glass", Bruce Bradley (1999) ISBN 0-9669005-0-2
  • "Lord Grizzly", Fredrick Manfred (1954) ISBN 0-8032-8118-8
  • "Saga of Hugh Glass: Pirate, Pawnee and Mountain Man", John Myers Myers (1976) ISBN 0-8032-5834-8
  • "Hugh Glass, Mountain Man", Robert M. McClung (1990) ISBN 0-688-08092-8
  • "The Song of Hugh Glass" (part of "A Cycle of the West"), John G. Neihardt (1915)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூ_கிளாஸ்&oldid=2698764" இருந்து மீள்விக்கப்பட்டது