ஹியூகோ வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹியூகோ வுட் (Hugo Woods) (-1933) ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட் என்று அறியப்படும் இவர் ஆங்கிலேய அரசால் 1855 ஆம் ஆண்டு காடுகளைப்பாதுகாக்கும் சட்டம் இயற்றி அதன் வழிவகையின் மூலம் 1915 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட வனக் காவலர் ஆவார்.[1] இவர் இந்தியாவில் தமிழ் நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடைப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் ஆனைமலைப் பகுதியில் இருக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாக்க அனுப்பப்பட்டார்.[2]

அப்போதே இந்திய வனப் பணி படித்த இவர் டாப்சிலிப் பகுதியில் அமைந்துள்ள உலாந்தி பள்ளத்தாக்கில் மவுன்ட் ஸ்டுவர்ட் என்ற காடுகளின் நடுவே அமைக்கப்பட்ட தனி வீட்டில் குடியேறி வாழ்ந்தார். இவரின் மரணத்திற்குப் பின்னர் இவரின் உடல் இக்காடுகளுக்கிடையே நல்லடக்கம் [3] செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூகோ_வுட்&oldid=2760190" இருந்து மீள்விக்கப்பட்டது