ஹியூகோ விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹியூகோ விருது
1991 ஹியூகோ விருது ஏவூர்திக் கோப்பை
வழங்கியவர்முந்தைய ஆண்டின் சிறந்த அறிவியல்புனைவு மற்றும் கனவுருப்புனைவு படைப்புகள்
வழங்கியவர்உலக அறிவியல் புனைவு சமூகம்
முதலில் வழங்கப்பட்டது1953
இணையதளம்thehugoawards.org

ஹியூகோ விருதுகள், ஒவ்வோராண்டும் அறிவியல் புனைவு மற்றும் கனவுருப்புனைவுப் படைப்புகளுக்கு வழங்கப்பெறும் விருதுகளாகும்; இவை விருது வழங்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு தரப்படுகின்றன. இவ்விருதுகள் "ஹியூகோ கெர்ன்ஸ்பாக்" என்பவரைப் பெயர் மூலமாகக் கொண்டு வழங்கப்படுகின்றன; இவர் "அமேசிங் ஸ்டோரிஸ்" எனப்படும் முன்னோடி அறிவியல் புனைவு பத்திரிகையின் தோற்றுவிப்பாளர் ஆவார். இவ்விருதுகள், 1992-ஆம் ஆண்டுவரை "அறிவியல் புனைவு சாதனை விருதுகள்" என்று அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டு வந்தன. இவை உலக அறிவியல் புனைவு சமூகத்தால் அமைக்கப்பட்டு, "உலக அறிவியல் புனைவு கூட்டரங்கத்தில்" ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விருதுகள் முதன்முதலில் 1953-ஆம் ஆண்டு நடைபெற்ற 11-வது உலக அறிவியல் புனைவு கூட்டரங்கில் வழங்கப்பெற்றன. தற்போது இவ்விருதுகள் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழங்கப்படுகின்றன; எழுத்து மற்றும் நாடக வடிவுகள் இதில் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூகோ_விருது&oldid=2121988" இருந்து மீள்விக்கப்பட்டது