ஹிமா தாசு
இமா தாசு 2018 இல் | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 9 சனவரி 2000 திங், நாகாவோன், அசாம் |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | தடகள விளையாட்டு |
நிகழ்வு(கள்) | 400 மீ |
பயிற்றுவித்தது | நிப்போன் தாசு |
சாதனைகளும் விருதுகளும் | |
தனிப்பட்ட சாதனை(கள்) | 400 மீ: 51.13 (குவகாத்தி 2018) |
ஹிமா தாசு (Hima Das, பிறப்பு: 9 சனவரி 2000) ஒரு இந்திய விரைவோட்ட வீராங்கனை ஆவார். அவர் IAAF உலக தடகள சாம்பியன்சிப் 20 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]ஹிமா தாஸ் இந்திய மாநிலம் அஸ்ஸாமில் நாகான் நகரில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் ரோன்ஜித் மற்றும் ஜோமாலி தாஸ் ஆவர். அவர்களுக்கு ஹிமாவுடன் சேர்த்து மூன்று குழந்தைகள்.[2] ஹிமா சிறுவயதில் மண் தரையில் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடுவார். அவரது கனவு இந்திய கால்பந்து அணியில் இடம் பெற வேண்டுவதாக இருந்தது.
வாழ்க்கை
[தொகு]ஹிமா தாசு, உலகளாவிய போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள விரைவோட்ட வீரர் ஆவார். அவர், பின்லாந்து, தம்பீரேவில் நடந்த 2018 - 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்சிப், 400 மீட்டர் பெண்கள் இறுதி போட்டியில் தங்கம் வென்றார், அவர் எடுத்துக்கொண்ட நேரம் 51.46 விநாடிகள்.[3][4] அவர் கடைசி 80 மீட்டர் தொலைவில் முன்னணியிலிருந்த 3 போட்டியாளர்களை முந்திச் சென்று, தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
தாஸ் 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்சிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களில் ஒருவரானார். இந்தப் பட்டியலில் உள்ள மற்றவர்கள்: சீமா புனியா (வெண்கலம், வட்டெறிதல்), நவஜித் கவுர் தில்லான்(வெண்கலம், வட்டெறிதல்) மற்றும் நீரஜ் சோப்ரா (தங்கம், ஈட்டி எறிதல்).
செப்டம்பர் 2018 இல் அதிதாஸ் ஹிமா தாசுடன் ஒரு ஒப்பந்த உடன்படிக்கை மேற்கொண்டது.[5]
இவர் போலந்தில் நடைபெற்ற பொன்சான் தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சூலை 2, 2019 இல் 200 ஓட்டப்பந்தயத்தில் 23.65 வினாடிகளில் முடித்துள்ளார்.[6]
இதற்குப் பிறகு, இவர் போலந்தில் நடைபெற்ற குன்டோ தடகளப் போட்டியில் 200 மீ ஓட்டப்பந்தயத்தில், சூலை 7, 2019 அன்று 23.97 விநாடிகளில் முடித்தார்.[7]
இதே ஆண்டில் செக் குடியரசில், சூலை 13 அன்று நடைபெற்ற 200 மீ ஓட்டப்பந்தயத்தில் 23.43 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார்.[8]
2019, சூலை 17 இல் செக் குடியரசில் நடைபெற்ற டாபார் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 23.25 வினாடிகளில் ஓடி தங்கப்பதக்கம் வென்றார்.[9]
20 சூலை 2019 இல், செக் குடியரசின், நோவ் மெஸ்டோவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பந்தய தூரத்தை 52.09 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். [10]
ஹிமா தாசு, சூலை 2019, மாதத்தில் மட்டும் சர்வதேச தடகளப் போட்டிகளில் 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
விருதுகள் மற்றும் மரியாதைகள்
[தொகு]- பின்லாந்து, தம்பீரேவில் நடந்த 2018 - 20 வயதுக்குட்பட்டோர் உலக சாம்பியன்ஷிப், 400 மீட்டர் இறுதி போட்டியில் தங்கம் வென்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kohli, Sachin Lead the Way as Cricketers Pay Tribute to Hima Das for Scripting History". 13 July 2018. பார்க்கப்பட்ட நாள் 13 July 2018.
- ↑ http://www.espn.co.uk/athletics/story/_/id/22667482/hima-das-meteoric-rise-assam-village-gold-coast
- ↑ "Hima Das scripts history, wins gold in 400m". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 13 July 2018.
- ↑ "Hima Wins Historic Gold for India". Hotstar. 13 July 2018. Archived from the original on 13 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 13-07-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ "Adidas signs endorsement deal with athlete Hima Das". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 22 September 2018.
- ↑ Hima Das wins 200m gold in Poland [1]. Press Trust of India
- ↑ Hima Das won 200m gold at the Kutno Athletics Meet, Poland [2]. Gulf News Sport
- ↑ Hima Das won 200m gold at Kladno Athletics Meet, Czech Republic[3]." THE TIMES OF INDIA"
- ↑ Hima Das won 200m gold at the Tabor Athletics Meet in the Czech Republic [4]."NDTV Sports"
- ↑ "Hima das won gold in 400m race" https://indianexpress.com/article/sports/sport-others/hima-das-gold-400-metre-5839524/