ஹிஃபாஸட்-இ-இஸ்லாம் வங்காளதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹிஃபாஸட்-இ-இஸ்லாம் வங்காளதேசம்
Hefajate islam logo.jpg
ஹிஃபாஸட்-இ-இஸ்லாம் வங்காளதேசம் குழுவின் சின்னம்
உருவாக்கம்சனவரி 2010; 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2010-01)
வகைஇஸ்லாமிய அடிப்படைவாதம் [1]
தலைமையகம்சிட்டகொங், வங்காளதேசம்
சேவைப் பகுதிவங்காளதேசம்
ஆட்சி மொழி
வங்காள மொழி
அமீர்
அகமது ஷாஃபி

ஹிஃபாஸட்-இ-இஸ்லாம் வங்காளதேசம் (Hefazat-e-Islam Bangladesh, வங்காள மொழிi: হেফাজতে ইসলাম বাংলাদেশ) வங்காளதேசத்தின் மதராசா பாணி அடிப்படைவாத இஸ்லாமியக் குழு ஆகும். இது 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது.[2][3] இதன் பின்னணியில் வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளது. இக்குழுவினர் 2010 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின் நவீனக் கல்வியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். பின்னர் வங்காளதேசத்தில் தொடர் பேரணிகள் நடத்தி அரசுக்கு தொடர் கோரிக்கைகள் வைத்தனர். அவற்றில் முக்கியமானது போர்க்குற்றம் இழைத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லும் அமைப்புகளை அரசு கைது செய்து ஒடுக்க வேண்டும் என்பதும் ஆகும்.[2][4][5][6] மேலும் இவர்களின் 2013 ஆம் ஆண்டின் 13 அம்சக் கோரிக்கைகளில் பெண்களுக்கு வேலைக்குச் செல்ல அனுமதி மறுக்க வேண்டும் என்பதுவும் இணையத்தள வலைப்பூ எழுத்துகளை அனுமதிக்கக் கூடாது என்பதுவும் அடங்கும்.[7][8] ஜெர்மன் தூதர் ஆல்ப்ரட் கோன்ஸ் இக்குழுவானது வங்காளதேசத்தை பிற்காலத்திற்கு நகர்த்திச் செல்கிறது எனக் குறிப்பிட்டார்.[1]

அமைப்பின் தொடக்கம்[தொகு]

2009 ஆம் ஆண்டு பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் திட்ட வரைவை (2009 Women Development Policy draft) எதிர்த்து இக்குழு தொடங்கப்பட்டது.[9] மதராசா ஆசிரியர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் இதில் சேர்ந்தனர். வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் தலைமையாகக் கொண்டு இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக அகமது ஷாஃபி உள்ளார்.

கல்விக்கு எதிரான பேரணி, 2010[தொகு]

இக்குழு தொடங்கி ஒரு மாதத்திற்குள் வக்காளதேசத்தின் சிட்டகொங் நகரில் ஆயிரக்கணக்கான மதராசா மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் கல்விக்கு ஆதரவாகவும் வங்காளதேச அரசின் நவீன கல்விக் கொள்கைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[2][3] காவல்துறையினரால் இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.[10]

பெண்களின் சம உரிமைக்கு எதிரான பேரணி, 2011[தொகு]

ஹிஃபாஸட்-இ-இஸ்லாம் வங்காளதேசம் 2011 ஆம் ஆண்டு அரசின் தேசிய மகளிர் மேம்பாட்டு வரைவை (national women development policy) எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த வரைவு வங்காளதேசத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது எனக் கூறினர்.[5][11]

ஹிஃபாஸட் மதராசாவில் குண்டுவெடிப்பு[தொகு]

2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தியதி ஹிஃபாஸட் மதராசாவில் குண்டு வெடித்தது.[12][13][14] அதன் பின்னான காவல்துறையினரின் விசாரணையில் மதராசா மாணவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது குண்டு வெடித்ததாகக் கண்டறியப்பட்டடு அம்மதராசாவில் இருந்து அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.[13][12][14]

தலிபான்களுடன் தொடர்பு[தொகு]

மே மாதம் 5 தியதி ஹிஃபாஸட்-இ-இஸ்லாம் வங்காளதேசம் ஏற்பாடு செய்த பேரணியை நடத்திய இக்குழுவின் மதராசாவின் தலைவரான மெளலானா ஹபிபுர் ரஹ்மான் ஒரு நேர்காணலில் 1998 ஆம் ஆண்டு ஆப்கான் போரின் போது ஆப்கானிஸ்தான் சென்றதாகவும்,[15] ஒசாமா பின் லாடனுன் தொடர்பில் இருந்ததாகவும் அறிவித்தார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Hifazat demands fundamentalism: German Ambassador". bdnews24.com. 8 April 2013. http://bdnews24.com/bangladesh/2013/04/08/hifazat-demands-fundamentalism-german-ambassador. பார்த்த நாள்: 3 May 2013. 
 2. 2.0 2.1 2.2 "Unknown Islamist group flexes its muscles in Ctg". The Daily Star (Bangladesh). 25 February 2010. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=127788. பார்த்த நாள்: 3 May 2013. 
 3. 3.0 3.1 "৩০ জন আহত, গ্রেপ্তার ৩৯, আট ঘণ্টা সড়ক অবরোধ চট্টগ্রামে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (Hefajat-e-Islam clash with police at Chittagong, 30 injured and 39 arrested, road blocked for 8 hours)". Prothom Alo. 25 February 2010. http://www.prothom-alo.com/detail/date/2010-02-25/news/44915. பார்த்த நாள்: 3 May 2013. 
 4. "‘Hifazat chief implementing Jamaat agenda’". bdnews24.com. 4 April 2013. http://bdnews24.com/bangladesh/2013/04/04/hifazat-chief-implementing-jamaat-agenda. பார்த்த நாள்: 3 May 2013. 
 5. 5.0 5.1 "Bangladesh: 1 dead in clash over women's rights". AP. 3 April2013. http://www.highbeam.com/doc/1A1-3e2e40ea723148aaadda7190b771a763.html. பார்த்த நாள்: 3 May 2013.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "women_policy-1" defined multiple times with different content
 6. "‘Hifazat chief implementing Jamaat agenda’". bdnews24.com. 4 April 2013. http://bdnews24.com/bangladesh/2013/04/04/allama-shafi-was-a-collaborator1. பார்த்த நாள்: 6 April 2013. 
 7. "The 13-point demands". தி இந்து. 7 April 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/the-13point-demands/article4590494.ece. பார்த்த நாள்: 4 May 2013. 
 8. "Govt must accede to our demands: Hifazat". bdnews24.com. 6 April 2013. http://bdnews24.com/bangladesh/2013/04/06/govt-must-accede-to-our-demands-hifazat. பார்த்த நாள்: 3 May 2013. 
 9. Khalidi, Toufique Imrose (6 May 2013). "Behind the rise of Bangladesh's Hefazaat". AL Jazeera. http://www.aljazeera.com/indepth/features/2013/05/201356134629980318.html. பார்த்த நாள்: 7 May 2013. 
 10. "All detainees set free in Ctg". The Daily Star (Bangladesh). 26 February 2010. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=127934. பார்த்த நாள்: 4 May 2013. 
 11. "10 policemen among 20 hurt in Ctg clash". புது யுக இயக்கம். 1 April 2011. http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2011-04-01&nid=13870. பார்த்த நாள்: 4 May 2013. 
 12. 12.0 12.1 "Hifazat madrasa raided, bombs, explosives seized". bdnews24.com. 8 October 2013. http://bdnews24.com/bangladesh/2013/10/08/hifazat-madrasa-raided-bombs-explosives-seized. பார்த்த நாள்: 20 October 2013. 
 13. 13.0 13.1 "Explosion at Ctg madrasa". The Daily Star (Bangladesh). 7 October 2013. http://www.thedailystar.net/beta2/news/5-students-hurt-in-ctg-madrasa-explosion/. பார்த்த நாள்: 20 October 2013. 
 14. 14.0 14.1 "Explosion rocks Hefazat madrasa". Dhaka Tribune. 8 October 2013. http://www.dhakatribune.com/bangladesh/2013/oct/07/%E2%80%98ctg-madrasa-blast-caused-grenade%E2%80%99. பார்த்த நாள்: 20 October 2013. 
 15. 15.0 15.1 "Target Taliban rule". The Daily Star (Bangladesh). 7 April 2013. http://www.thedailystar.net/beta2/news/target-taliban-rule/. பார்த்த நாள்: 4 May 2013.