ஹால்பே பத்தினிக் கோயில்

ஆள்கூறுகள்: 06°53′24.1″N 81°02′29.3″E / 6.890028°N 81.041472°E / 6.890028; 81.041472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹால்பே பத்தினிக் கோயில்
Halpe Pattini Devalaya
හල්පේ පත්තිනි දේවාලය
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலங்கை, ஹால்பே
புவியியல் ஆள்கூறுகள்06°53′24.1″N 81°02′29.3″E / 6.890028°N 81.041472°E / 6.890028; 81.041472
சமயம்பௌத்தம்
மாகாணம்ஊவா மாகாணம்
மாவட்டம்பதுளை
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது22 நவம்பர் 2002[1]

ஹால்பே பத்தினிக் கோயில் என்பது ஒரு பழங்கால கோயில் ஆகும். இது இலங்கையின் எல்லை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இது எல்லை நகரத்திலிருந்து பதுளை - பண்டாரவளை சாலையில் ஏறக்குறைய 3 கிமீ (1.86 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது சிங்களவர் தெய்வமான பத்தினிக்காக (கண்ணகி) கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் புத்த சமயத்தினர் மற்றும் இந்து சமயத்தினர் என இரு சமயத்து பக்தர்களும் வழிபடுகின்றனர். இக்கோயில் தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணை 22 நவம்பர் 2002 அன்று அரசாங்க வர்த்தமானி எண் 1264 இல் வெளியிடப்பட்டது.[2]

நாட்டுப்புறவியல்[தொகு]

கோயிலுடன் தொடர்புடைய ஒரு வாய்மொழிக் கதையின்படி, கோயில் முதலில் அருகிலுள்ள கிராமமான ஹெட்டிபோலாவில் கட்டப்பட்டது, பின்னர் அது தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.[3][4]

கோயில்[தொகு]

கட்டிடமானது நெடுவரிசை கல் தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் மாலிகாவா (கருவறை), சிங்காசன மண்டிராயா (அரியாசன அறை), போதிகாரா, சமையலறை, ஒரு பழங்கால புத்த கோவிலின் இடிபாடுகள் போன்றவை உள்ளன. இந்த கட்டமைப்புகளைச் சுற்றி ஒரு கைப்பிடி சுவர் கட்டப்பட்டுளது. கோயிலின் கருவறையான மாலிகாவா அறையானது மரத்தூண்கள், களிமண் சுவர்களைக் கொண்டு இரண்டு மாடிக் கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. மேல் தளத்தின் சுவர்கள் மரப் பலகைகளால் ஆனது. அங்கு மர ஏணிவழியாகத்தான் செல்ல இயலும். தரைத்தளத்தில் ஒரு உள் அறை உள்ளது, அங்கு பத்தினி தேவியின் சந்தன சிலை வைக்கப்பட்டுள்ளது.[4] உட்புற அறையின் நுழைவாயில் மகர தோரணம் ( டிராகனின் வளைவு) சிற்பமாக உள்ளது. இரண்டு வாயில் காவலர்களின் உருவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மாலிகாவாவின் முன்புறமானது நடைபாதையைக் கொண்டுள்ளது. நடைபாதைக்கு மேற்கூரை உள்ளது மேற்கூரையை செதுக்குவேலை செய்யப்பட்ட மரத் தூண்கள் தாங்குகின்றன.[5] கோயிலை அழகூட்டும் சிற்பங்களும் சுவரோவியங்களும் காண்டியின் பாரம்பரியத்தை சித்தரிப்பதாக உள்ளன. இந்தக் கோயில் கண்டி இராச்சிய காலத்தில் கட்டப்பட்டது என்பதற்கு சான்றாக இவை உள்ளன.

திருவிழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் கிராமத்தில் வழிபாடுக்காக பத்தினி தேவியின் நினைவாக ஒரு பெரகரா (உற்சவம்) நடத்தப்படுகிறது. பாரம்பரியமாக பத்தினியின் நகைகள் அருகிலுள்ள பௌத்த ஆலயமான யஹலமதித்தா ராஜ மகா விகாரையில் இருந்து பெரஹேரா விழாவுக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த விழா காலத்தில் மட்டுமே இந்தக் கோயில் திறக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]