ஹாலிடே இன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹாலிடே இன் (Holiday Inn) ஒரு பன்னாட்டு விடுதிக் குழுமம் ஆகும். இக் குழுமம் இலண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. [1] முதலில் இது ஒரு அமெரிக்க தொடர் உந்துணவகமாகத் தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய தொடர் ஹோட்டல்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த ஹோட்டல் தொடரில் உலகம் முழுவதும், 3463 ஹோட்டல்களும், அவற்றில் 435,299 அறைகளும் உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் சுமார் 100 மில்லியன் விருந்தினர்களுக்கு வசதிகள் செய்துதர முடியும்.[2][3] இந்தத் தொடர் ஹோட்டல் அட்லாண்டா, லண்டன் மற்றும் ரியோ டே ஜனெய்ரோ ஆகிய மூன்று முக்கிய நகரங்களைத் அடித்தளமாகக் கொண்டு இயங்குகிறது.

பிற மையங்கள்[தொகு]

New style Holiday Inn near the Chicago Midway International Airport

ஹாலிடே இன் – இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சேவை. இதில் இரு தர வித்தியாசங்கள் உள்ளன. உயர்தரம் – முழுச் சேவைகளுடன் கூடிய வணிக ஹோட்டல், குறைந்த தரம் – முழுச்சேவைகளுடன் கூடிய ஹோட்டல். இதற்கு முன்பு இருந்த ஹோட்டல்களிலும் இது போன்றதொரு உயர்தரம் 1970 முதலே அங்கீகரிக்கப்பட்டு, அமைந்திருந்தது. இரு தரங்களிலும் உணவகம், பெரும்பாலான இடங்களில் நீச்சல்குளம், அறைச் சேவைகள், உடற்பயிற்சி அறை மற்றும் செயல்பாட்டு மற்றும் வசதிக்கான அறைகள் இருக்கும்.

1. ஹாலிடே இன் ஹோட்டல் & சூட்ஸ்

வழக்கமான ஹாலிடே இன் ஹோட்டலின் பண்புகள் மற்றும் வசதிகளைக் கொண்டிருந்தாலும் இங்கு பிற வசதிகள் கலப்பு கொண்ட அறைகளும் வழங்கப்படுகிறது.

2. ஹாலிடே இன் ரிசோர்ட்

ஹாலிடே இன் ஹோட்டலின் முழுச்சேவைகளையும் கொண்டுள்ள இந்த வகை ஹோட்டல்கள், விளம்பரப்படுத்துதல் நோக்கத்திற்காகவே சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கேற்றாற்போல் இவை உயர்தர சுற்றுலா மற்றும் ஓய்விடங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளன.

ஹாலிடே இன் செலக்ட்

உயர்ந்த ரகத்தினை விரும்பும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் வணிக ரீதியாக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை புரிகிறது. 2006 ஆம் ஆண்டில் இந்த ஹோட்டல்கள் நிறுத்தப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தற்போது அமைந்துள்ள ஹோட்டல்கள் தங்களது உரிமத்தின் காலம் முடியும் வரை மட்டுமே இயங்கும். இதிலும் பல ஹோட்டல்கள் வழக்கமான ஹோட்டல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் இத்தகு ஹோட்டல்களுக்கான விளம்பரங்களும் குறைந்து வருகின்றன.

ஹாலிடே இன் சன்ஸ்ப்ரீ ரிசோர்ட்ஸ்

அலுவலக முறைப்படி சன்ஸ்ப்ரீ என்று அழைக்கப்படுகிறது. உல்லாசப் போக்கிடத்திற்கான அனைத்து சேவைகளையும் வழங்கும் இந்த ஹோட்டல்கள், டீலக்ஸ் ரக சேவைகளையும் வழங்குகின்றன. ஜமைக்காவின், மோன்டேகோவில் உள்ள ஹாலிடே இன் சன்ஸ்ப்ரீ ரிசோர்ட்ஸ் மட்டுமே இந்த புனைப்பெயருடன் அங்கு இயங்கிவரும் ஒரே ஹோட்டல் ஆகும். பிற ஹோட்டல்களில் பெயர்கள் ஹாலிடே இன் ரிசோர்ட்ஸ் என்று மாற்றப்பட்டுவிட்டன.

ஹாலிடே இன் கிளப் வேகஷன்ஸ்

அமெரிக்க மக்களின் குடும்பங்கள், விடுமுறை காலங்களில் ரசிப்பதற்கான வீடுகள் மற்றும் வசதிகள் கொண்ட அறைகளை இந்த ஹோட்டல்கள் வழங்கவல்லது. அமெரிக்க மக்களுக்கு மட்டும் இந்த வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கம்.

ஹாலிடே இன் கார்டன் கோர்ட்

இந்த ஹோட்டல் இருக்கும் நாட்டின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இவை தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அமைந்துள்ளன.

ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்

இது நடுத்தர மக்களின் வசதிக்காக குறைந்த கட்டணம் மற்றும் குறைந்த வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஹோட்டலாகும். இது, இந்த ஹோட்டல்கள் குழுமத்தின் போட்டியாளர்களான ‘லா குவிண்டா இன்’ மற்றும் ‘ஹம்ப்டன் இன்’ போன்றோர்களின் ஹோட்டல் போன்றிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாலிடே_இன்&oldid=1888716" இருந்து மீள்விக்கப்பட்டது