உள்ளடக்கத்துக்குச் செல்

ஹார்ட்பீஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Alcelaphus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஹார்ட்பீஸ்ட்
தன்சானியாவின், செரெங்கெட்டி தேசியப் பூங்காவில் கோக்கின் ஹார்டிபீஸ்ட்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Alcelaphus
இனம்:
இருசொற் பெயரீடு
Alcelaphus buselaphus
(Pallas, 1766)
Subspecies
List
  • * † A. b. buselaphus (Pallas, 1766)
  • * A. b. cokii Günther, 1884
  • * A. b. lelwel (Heuglin, 1877)
  • * A. b. major (Blyth, 1869)
  • * A. b. swaynei (P. L. Sclater, 1892)
  • * A. b. tora Gray, 1873
  • * A. b. caama (Saint-Hilaire, 1803)
  • * A. b. lichtensteinii (Peters, 1849)
Distribution of the subspecies
வேறு பெயர்கள் [2]
  • Antilope bubalis Pallas, 1767
  • Antilope buselaphus Pallas, 1766
  • Bubalis buselaphus (Pallas, 1766)

ஹார்டிபீஸ்ட், கொங்கோனி அல்லது காமா என்று அறியப்படுவது ( hartebeest, also known as kongoni or kaama ) ஒரு ஆப்பிரிக்க மறிமான் ஆகும். இது அல்செலாபஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் ஆகும். இதில் எட்டு துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு சில நேரங்களில் தனி இனங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பெரிய விலங்கு ஆகும். ஹார்டெபீஸ்ட் மான்கள் தரையிலிருந்து தோள்வரை 1 மீ (3 அடி 3 அங்குலம்) உயரம் இருக்கும். உடல் நீளம் தலைமுதல் வால்வரை 200 முதல் 250 செமீ (79 முதல் 98 அங்குலம்) வரை இருக்கும். எடை 100 முதல் 200 கிலோ (220 முதல் 440 பவுண்டுகள்) வரை இருக்கும். இதன் முகம் குதிரை போல நீண்டதாகவும், விந்தையான வடிவத்திலான கொம்புகளும், குறுகிய கழுத்து மற்றும் கூர்மையான காதுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் கருப்பு திட்டுக்களைக் கொண்டிருக்கும் இதன் கால்கள் வழக்கத்திற்கு மாறாக நீளமாக இருக்கும். உடலின் உரோமம் பொதுவாக குறுகியதாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மேற்கத்திய ஹார்டெபீஸ்டின் நிறம் மணல் பழுப்பு முதல் ஸ்வேனின் ஹார்டெபீஸ்டின் நிறம் சாக்லேட் சாம்பல் வரை, துணை இனங்களின்படி உரோம நிறம் மாறுபடும். அனைத்து கிளையினங்களும் பால் ஈருருமை கொண்டவையாக அதன் ஒரு பகுதியாக இதன் கொம்புகள் உள்ளன. பெண் மான்களின் கொம்புகள் மிகவும் மெல்லியதாக இருக்கும். கொம்புகள் 45-70 செமீ (18-28 அங்குலம்) வரை நீளத்தை எட்டும். இதன் நீண்ட முகத்தைத் தவிர, பெரிய மார்பு மற்றும் பின்புறம் இறங்கிய முதுகு ஆகியவை ஹார்டிபீஸ்ட்டை மற்ற மறிமான்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது.

20 முதல் 300 உருப்படிகளைக் கொண்டதாக ஹார்டிபீஸ்ட் மந்தைகள் உள்ளன. இவை தனித்தனியே தங்களுக்கு எல்லை அமைத்து வாழ்கின்றன. இவை மிகவும் எச்சரிக்கை உணர்வு மிக்கவை. இவை முதன்மையாக மேய்ச்சல் விலங்குகள், இவற்றின் உணவுகளில் முக்கியமாக புற்கள் இடம்பெற்றிருக்கும். ஹார்ட்பீஸ்டில் இனச்சேர்க்கை ஆண்டு முழுவதும் நடக்கும். ஆண் மற்றும் பெண் மான்கள் என இரண்டும் ஒன்று முதல் இரண்டு வயதில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இவற்றின் கர்ப்ப காலம் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். அதன் பிறகு ஒரு குட்டி பிறக்கிறது. பொதுவாக வறண்ட பருவத்தில் பிறப்புகள் உச்ச நிலையில் இருக்கும். இவற்றின் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள்.

வறண்ட சவன்னாக்கள் மற்றும் மரங்கள் நிறைந்த புல்வெளிகளில் வசிக்கும் ஹார்டெபீஸ்ட்கள் பெரும்பாலும் மழைக்குப் பிறகு மிகவும் வறண்ட இடங்களுக்குச் செல்கின்றன. கென்யா மலையில் 4,000 மீ (13,000 அடி) உயரத்தில் இவை உள்ளது பதிவுசெய்யபட்டுள்ளது. ஹார்டிபீஸ்ட்கள் முன்பு ஆப்பிரிக்காவில் பரவலாக இருந்தன. ஆனால் வாழ்விட அழிவு, வேட்டையாடுதல், மனித குடியேற்றம், உணவுக்காக கால்நடைகளுடனான போட்டி ஆகியவற்றின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஹார்டெபீஸ்டின் எட்டு கிளையினங்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாதுகாப்பு நிலையைக் கொண்டுள்ளன. புபல் ஹார்டிபீஸ்ட் 1994 இல் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அற்றுவிட்ட இனமாக அறிவிக்கப்பட்டது. சிவப்பு ஹார்டிபீஸ்ட்டின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், டோரா ஹார்டிபீஸ்ட்டின் எண்ணிக்கை, ஏற்கனவே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அல்ஜீரியா, எகிப்து, லெசோதோ, லிபியா, மொராக்கோ, சோமாலியா, துனிசியாவில் ஹார்டிபீஸ்ட்கள் அழிந்து விட்டன. ஆனால் எசுவாத்தினி மற்றும் சிம்பாப்வேயில் அறிமுகப்படுத்தப்பட்ட இனமாக உள்ளது. மிகவும் மதிப்புமிக்க இறைச்சி காரணமாக இது ஒரு பிரபலமான வேட்டை விளையாட்டு விலங்காக உள்ளது.

வகைபிரித்தல்

[தொகு]

ஹார்டிபீஸ்டின் அறிவியல் பெயர் அல்செலாபஸ் பஸ்செலாபஸ் ஆகும். 1766 ஆம் ஆண்டில் செர்மானிய விலங்கியல் நிபுணரான பீட்டர் சைமன் பல்லாசால் இந்த விலங்கு முதன்முதலில் விவரிக்கப்பட்டது. இது அல்செலாபஸ் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டு, மாட்டுக் குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. [2]

துணை இனங்கள்

[தொகு]
ஹார்ட்பீஸ்ட் கிளையினங்கள்: புபல் ஹார்ட்பீஸ்ட் (மையம்); (மேலே-இடது மூலையில் இருந்து கடிகார திசையில்) சிவப்பு ஹார்ட்பீஸ்ட், லெல்வெல் ஹார்டெபீஸ்ட், ஸ்வேனின் ஹார்ட்பீஸ்ட், வெஸ்டர்ன் ஹார்ட்பீஸ்ட், நியூமனின் ஹார்ட்பீஸ்ட், லிச்சென்ஸ்டீனின் ஹார்ட்பீஸ்ட், கோக்கின் ஹார்ட்பீஸ்ட், டோரா ஹார்டெபீஸ்ட், கிரேட் அண்ட் ஸ்மால் கேம் ஆஃப் ஆப்பிரிக்காவில் இருந்து

இவற்றில் எட்டு கிளையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் - ஏ. பி. காமா மற்றும் ஏ. பி. லிச்சென்ஸ்டீனி - ஆகிய இரண்டும் தனி இனங்களாகக் கருதப்படுகின்றன.

இரண்டு சர்ச்சைக்குரிய இனங்கள் உட்பட எட்டு துணை இனங்கள்:

  • . பி. புசெலாஃபஸ் (பல்லாஸ், 1766) : புபல் ஹார்ட்பீஸ்ட் அல்லது வடக்கு ஹார்ட்பீஸ்ட் என அழைக்கப்படுகிறது. முன்பு இது மொரோக்கோவிலிருந்து எகிப்து வரை வடக்கு ஆப்பிரிக்கா முழுவதும் காணப்பட்டது. இது 1920 களில் அழிக்கப்பட்டது. [3] இது 1994 இல் இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் அற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. [4]
  • ஏ. பி. காமா ( செயிண்ட்- ஹிலேர், 1803) : சிவப்பு ஹார்டிபீஸ்ட் அல்லது கேப் ஹார்டிபீஸ்ட் என அழைக்கப்படுகிறது. முன்பு தெற்கு அங்கோலா; நமீபியாவின் வடக்கு மற்றும் கிழக்கு சவன்னாக்கள்; மத்திய, தெற்கு மற்றும் தென்மேற்கு போட்சுவானா ; வடக்கு கேப், கிழக்கு கேப், மேற்கு கேப், விடுதலை இராச்சியம், வடமேற்கு மற்றும் கடெங் மாகாணங்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் மேற்கு குவாசுலு-நதால் போன்ற இடங்களில் காணப்பட்டது. தற்போது வடக்கு கேப், மத்திய மற்றும் தென்மேற்கு போட்ஸ்வானா, நமீபியாவைத் தவிர மற்ற எல்லாப் பகுதிகளிலிருந்தும் அற்றுவிட்டது. இந்த நாடுகளில் மீண்டும் இது மறு அறிமுகம் செய்யபட்டுள்ளது. [3] இந்த ஹார்டிபீஸ்டின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • ஏ. பி. கோகி குந்தர், 1884 : கோக்கின் ஹார்டிபீஸ்ட் அல்லது கொங்கோனி என அறியப்படுகிறது. கென்யா மற்றும் வடக்கு தன்சானியாவை பூர்வீகமாக கொண்டது. [3]
  • ஏ. பி. லெல்வெல் (ஹியூக்லின், 1877) : லெல்வெல் ஹார்ட்பீஸ்ட் என அறியப்படுகிறது. முன்பு காங்கோவின் வடக்கு மற்றும் வடகிழக்கு ஜனநாயகக் குடியரசு தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு சூடான் ; மற்றும் தன்சானியாவின் வடமேற்குப் பகுதிகளில் காணப்பட்டது. [3] 1980 களில் இருந்து இதன் எண்ணிக்கை கடுமையாக குறைந்தது. தற்போதோ இதில் உள்ள பெரும்பாலான மான்கள் அதன் வாழிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைக்கபட்டுள்ளன.
  • ஏ. பி. லிச்சென்ஸ்டீனி ( பீட்டர்ஸ், 1849) : லிச்சென்ஸ்டீனின் ஹார்டிபீஸ்ட் என்று அறியப்படுகிறது. கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவின் மியோம்போ காடுகளில் வாழ்கிறது. [5] இது அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மலாவி, மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளை பூர்வாகமாக கொண்டது.
  • ஏ. பி. மேஜர் ( பிளைத், 1869) : மேற்கத்திய ஹார்டிபீஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. முன்பு மாலி, நைஜர், செனிகல், காம்பியா, கினி-பிசாவு, கினி, கோட் டிவார், கானா, நைஜீரியா, தென்மேற்கு சாட், கேமரூன், மேற்கு மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் பெனின் ஆகிய நாடுகளில் பரவலாக வாழ்ந்தது. இப்போது இது மிகக் குறைந்த எண்ணிக்கையில் முக்கியமாக இந்த நாடுகளின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது. இது காம்பியாவில் அழிந்திருக்கலாம். [3]
  • ஏ. பி. ஸ்வேனி ( ஸ்க்லேட்டர், 1892) : ஸ்வெய்னின் ஹார்ட்பீஸ்ட் என அறியப்படுகிறது. எத்தியோப்பியாவின் தெற்கு பிளவு பள்ளத்தாக்கில் பாதுகாப்பட்டுவருகிறது. இது முன்னர் பிளவு பள்ளத்தாக்கு முழுவதும் ஏற்பட்டது, மேலும் அதன் வாழிடம் கிழக்கு நோக்கி வடமேற்கு சோமாலியா வரை பரவி இருந்தது. இது 1930 இல் சோமாலியாவில் இருந்து அற்றுவிட்டது. [3] இதன் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அது மேலும் சரிந்து வருகிறது. [6]
  • ஏ. பி. டோரா கிரே, 1873 : டோரா ஹார்டிபீஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. முன்னர் வடமேற்கு எத்தியோப்பியா மற்றும் மேற்கு மற்றும் தென்மேற்கு எரித்திரியாவில் காணப்பட்டது. [7] அதன் தற்போதைய நிலை தெளிவாக இல்லை, இருப்பினும் இந்த பகுதிகளில் இருந்து சிறிய எண்ணிக்கையில் உள்ளன. [3]

விளக்கம்

[தொகு]
கருமையான முகம், கருப்பு வால், வெள்ளை பிட்டம் மற்றும் V- வடிவ கொம்புகளைக் காட்டும் ஒரு சிவப்பு ஹார்ட்பீஸ்ட்

இந்த மான்கள் நீளமான நெற்றி மற்றும் விந்தையான வடிவமுள்ள கொம்புகளைக் கொண்ட ஒரு பெரிய மறிமான் ஆகும். நிற்கும்போது தோள் வரை 1 மீ (3 அடி 3 அங்குலம்) உயரம் கொண்டதாகவும், தலைமுதல் வால்வரை 200 முதல் 250 செமீ (79 முதல் 98 அங்குலம் வரை) நீளம் கொண்டதாகவும் உள்ளது. இவற்றின் எடை 100 முதல் 200 கிலோ (220 முதல் 440 பவுண்டுகள்) வரை இருக்கும். இவற்றின் வால், 40 முதல் 60 செமீ (16 முதல் 24 அங்குலம்) நீளம் கொண்டதாகவும், முனையில் கருப்பு குஞ்சம் கொண்டதாகவும் இருக்கும். ஹார்டெபீஸ்டின் மற்ற தனித்துவமான அம்சங்களாக அதன் நீண்ட கால்கள் (பெரும்பாலும் கருப்பு திட்டுக்களுடன்), குறுகிய கழுத்து மற்றும் கூர்மையான காதுகள் உள்ளன. ஒரு ஆய்வின்படி ஹார்டெபீஸ்ட் இனங்களின் அளவானது முதன்மை உற்பத்தி மற்றும் மழைப்பொழிவுடன் தொடர்புடையாத தெரியவருகிறது. [8] மேற்கத்திய ஹார்டிபீஸ்ட் இதில் மிகப்பெரிய கிளையினமாகும். இதன் கண்களுக்கு இடையில் ஒரு வெள்ளைக் கோடு உள்ளது. [9] அளவில் பெரியதான சிவப்பு ஹார்டிபீஸ்ட்டானது கருப்பு நெற்றியும் கண்களுக்கு இடையில் ஒரு மாறுபட்ட மங்கிய பட்டையும் கொண்டுள்ளது. [10] பெரிய லெல்வெல் ஹார்டிபீஸ்ட் அதன் கால்களின் முன்புறத்தில் கருமையான கோடுகளைக் கொண்டுள்ளது. [11] கோக்கின் ஹார்டிபீஸ்ட் அதன் மற்ற கிளையினங்களுடன் ஒப்பிடுகையில் குறுகிய நெற்றி மற்றும் நீண்ட வால் கொண்டு மிதமான பெரிய உடலைக் கொண்டது. [12] லிக்டென்ஸ்டைனின் ஹார்டிபீஸ்ட் அளவில் சற்று சிறியது. இதற்கு லெல்வெல் ஹார்டிபீஸ்டைப் போலவே கால்களின் முன்பகுதியில் கருமையான கோடுகளுடன் இருக்கும். [13] ஸ்வேனின் ஹார்டிபீஸ்ட் டோரா ஹார்டிபீஸ்ட்டை விட சிறியது, ஆனால் இரண்டுக்கும் குறுகிய நெற்றி மற்றும் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டுள்ளன. [14]

பொதுவாக இவற்றிற்கு குறுகிய, பளபளப்பான, உரோமம் உண்டு. அவற்றின் நிறம் கிளையினங்களுக்கு ஏற்ப மாறுபடும். மேற்கத்திய ஹார்டிபீஸ்ட் வெளிர் மணல்-பழுப்பு நிறமத்தில் இருக்கும், ஆனால் அதன் கால்களின் முன்புறம் கருமையாக இருக்கும். [9] சிவப்பு ஹார்டிபீஸ்ட் செம்பழுப்பு நிற உடலையும், கருமையான முகத்தையும் கொண்டது. கன்னம், கழுத்தின் பின்புறம், தோள்கள், இடுப்பு மற்றும் கால்களில் கருப்பு நிறத் திட்டுக்களைக் காணலாம். இதன் பக்கவாட்டு மற்றும் கீழ் பிட்டத்தில் பரந்த வெள்ளைத் திட்டுகள் இருக்கும். [10] லெல்வெல் ஹார்டிபீஸ்ட் செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். [11] கோக்கின் ஹார்டெபீஸ்ட் மேல் பகுதிகளில் சிவப்பு நிறத்தில் இருந்து பழுப்பு நிறம்வரை இருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் கால்கள், பிட்டம் ஆகியவை மங்கலான நிறத்தைக் கொண்டவை. [12] லிச்சென்ஸ்டீனின் ஹார்டிபீஸ்ட் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் இருப்பினும் பக்கவாட்டு பகுதிகள் இளம் பழுப்பு நிறத்திலும், பிட்டம் வெண்மையாகவும் இருக்கும். [13] டோரா ஹார்டிபீஸ்ட் உடலின் மேற்பகுதி, முகம், முன் கால்கள், பிட்டம் ஆகியவற்றில் அடர் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் பின்னங்கால் மற்றும் அடிவயிறு மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஸ்வேனியின் ஹார்டிபீஸ்ட் அடர் சாக்லேட் பழுப்பு நிறத்தில் இருக்கும். அது அதன் முடியின் வெள்ளை நுனிகளாக இருக்கும். சாக்லேட் பேண்டிற்கு கண்களுக்குக் கீழே உள்ள அதன் முகம், தோள்பட்டை மற்றும் கால்களின் மேல் பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும். [14] நேர்த்தியான அமைப்புடனான, ஹார்ட்பீஸ்டின் உடல் முடி சுமார் 25 மிமீ (1 அங்குலம்) நீளமாக இருக்கும்.

ஒரு சிவப்பு ஹார்டிபீஸ்டின் தலையின் நெருக்கமான படப்பிடிப்பு

இவற்றின் அனைத்து கிளையினங்களைச் சேர்ந்த மான்களின் இரு பாலினத்தவைக்கும் கொம்புகள் உள்ளன. பெண் மான்களின் கொம்புகள் மிகவும் மெல்லியதாக இருக்கும். கொம்புகள் 45–70 cm (18–28 அங்) நீளத்தை எட்டும் ; அதிகபட்ச கொம்பு நீளம்74.9 cm (29+12 அங்) , இது நமீபிய சிவப்பு ஹார்டெபீஸ்டிலிருந்து பதிவு செய்யப்பட்டது. [15] மேற்கத்திய ஹார்டிபீஸ்டின் கொம்புகள் தடிமனாகவும், முன்பக்கத்தில் இருந்து பார்க்கும்போது U- வடிவமாகவும், பக்கங்களில் இருந்து பார்க்கும்போது Z வடிவமாகவும் தோன்றும், முதலில் பின்னோக்கியும் பின்னர் முன்னோக்கியும் வளர்ந்து, கூர்மையான பின்னோக்கித் திருப்பத்துடன் முடிவடையும். [9] சிவப்பு மற்றும் லெல்வெல் ஹார்டெபீஸ்ட்டின் கொம்புகள் மேற்கத்திய ஹார்டெபீஸ்டின் கொம்புகளைப் போலவே இருக்கும், ஆனால் முன்பக்கத்தில் இருந்து பார்க்கும் போது V- வடிவில் தோன்றும். [11] [10] லிச்சென்ஸ்டீனின் ஹார்டிபீஸ்ட் கொம்பானது தடிமனாகவும் மற்ற கிளையினங்களைக் காட்டிலும் சிறியதாகவும் இருக்கும். இது மேல்நோக்கி வளைந்து பின்னர் கூர்மையாக முன்னோக்கிச் செல்கின்றது. அதைத் தொடர்ந்து சுமார் 45° கோணத்தில் உள்நோக்கித் திரும்பி மற்றும் இறுதியில் பின்னோக்கித் திரும்புகிறது. [13] ஸ்வேனின் ஹார்டெபீஸ்டின் கொம்புகள் மெல்லியதாகவும், அடைப்புக்குறி வடிவமாகவும், மேல்நோக்கியும் பின் பின்னோக்கியும் வளைந்திருக்கும். [14] டோரா ஹார்டெபீஸ்டின் கொம்புகள் குறிப்பாக மெல்லியதாகவும், பக்கவாட்டாக பரவி, மற்ற கிளையினங்களைக் காட்டிலும் அதிகமாக வேறுபடுகின்றது.

இதன் நீண்ட முகமும், பெரிய மார்பும், சற்று குவிந்த நிலையில் பின்புறம் இறங்கிய முதுகு ஆகியவை ஹார்டிபீஸ்ட்டை மற்ற மறிமான்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது. ஹார்டிபீஸ்ட்கள் பால் ஈருருமையைக் கொண்டுள்ளது. ஆனால் இரு பாலினங்களும் கொம்புகளை தாங்கி ஒரே மாதிரியான உடல் நிறைகளைக் கொண்டிருப்பதால் சிறிது மட்டுமே வேறுபாடுகள் காணப்படுகின்றன. பால் ஊருருமையின் அளவு கிளையினங்களில் மாறுபடும். ஸ்வேன் மற்றும் லிச்சென்ஸ்டீனின் ஹார்டெபீஸ்ட்டில் பெண் மான்களை விட ஆண் மான்களின் எடை 8% அதிகமாகவும், சிவப்பு ஹார்டிபீஸ்டில் 23% கனமாகவும் இருக்கும். ஒரு ஆய்வில், மண்டை ஓட்டின் எடையில் அதிக இருருமை கண்டறியப்பட்டது.

சூழலியல் மற்றும் நடத்தை

[தொகு]

ஹார்டெபீஸ்ட்கள் முதன்மையாக பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகாலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மேய்ந்து, நண்பகலில் நிழலில் தங்கி இருக்கும். இந்த இனங்கள் 300 உருப்படி வரையிலான மந்தைகளாக உருவாகின்றது. ஏராளமான புற்கள் உள்ள இடங்களில் மிகுந்த எண்ணிக்கையில் கூடுகிற்றன. 1963 ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவில் செகோமா பான் அருகே சமவெளியில் 10,000 விலங்குகள் கூட்டம் பதிவு செய்யப்பட்டது. [16] இருப்பினும், மந்தைகள் அவ்வளவு ஒத்திசைவாக நகருவது இல்லை. மேலும் அவை அடிக்கடி சிதறுகின்றன. ஒரு மந்தையில் உள்ள உறுப்பினர்களை நான்கு குழுக்களாகப் பிரிக்கலாம்: பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்தும் வயது வந்த ஆண் மான்கள், பிராந்தியத்தை ஆதிக்ககம் செலுத்தாக வயது வந்த ஆண் மான்கள், இளம் ஆண் மான்கள், தங்கள் குட்டிகளுடன் உள்ள பெண் மான்கள். பெண் மான்கள் ஐந்து முதல் 12 விலங்குகள் கொண்ட குழுக்களைக் கொண்டுள்ளன. குழுவில் நான்கு தலைமுறை இளம் மான்கள் இருக்கும். [15] மூன்று அல்லது நான்கு வயதில், ஆண் மான்கள் ஒரு பிரதேசத்தையும் அதில் உள்ள பெண் உறுப்பினர்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யலாம். ஒரு ஓர் ஆண் மான் தனது பிரதேசத்தை பாதுகாக்கிறது. தன் கூட்டத்தை வழிநடத்துகிறது. அடுத்த கூட்டத்து தலைமை மான் தன் கூட்டத்துக்குள் நுழைந்தால் அதனுடன் சண்டையிடும். [17] ஆண் மான் தனது பிரதேசத்தின் எல்லையைக் குறிப்பிட மலம் கழித்தல் மூலம் குறிக்கிறது. [15]

ஹார்டிபீஸ்ட்டின் ஒரு கூட்டம்

ஹார்டெபீஸ்ட்கள் மிகவும் வளர்ந்த மூளை கொண்டவை. மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்ட விலங்குகளாகும். [18] இயற்கையில் பொதுவாக அமைதியாக இருக்கும் இவை, தூண்டப்படும்போது மூர்க்கமாக மாறும். பெண் மான்கள் மேயும் பொழுது கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் ஆண் மான் கறையான் புற்றின் மேல் ஏறி நின்று ஏதாவது ஆபத்து உள்ளதா என பார்த்தபடி இருக்கும். ஆபத்து நேரங்களில், ஒரு மான் அதை அறிந்தாலும், முழு மந்தையும் ஒரே நேரத்தில் ஓடிவிடும். வளர்ந்த ஹார்டெபீஸ்ட்கள் சிங்கங்கள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், காட்டு நாய்கள் போன்றவற்றால் வேட்டையாடப்படுகிறது. குட்டிகளை சிவிங்கிப்புலிகள், குள்ள நரிகள் குறிவைக்கின்றன. [15] முதலைகளும் ஹார்டெபீஸ்ட்டை வேட்டையாடும்.

ஹார்டெபீஸ்டின் மெல்லிய நீண்ட கால்கள், திறந்த வெளியில் விரைவாக தப்பித்து ஓட பயன்படுகின்றன. தான் தாக்கப்பட்டால், தன் பயங்கரமான கொம்புகளால் வேட்டையாடிகளிடமிருந்து காத்துகொள்ள போராடும். இவறின் கண்கள் உயரமான நிலையில் உள்ளது என்பது மேய்ந்து கொண்டிருக்கும் போதும் அதன் சுற்றுப்புறத்தை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது. சிக்கனமான உணவில் இருந்தும் கூட அதிகபட்ச ஊட்டச்சத்தை பெறும் வகையில் இவற்றின் முகவாய் அமைப்பு உள்ளது. இவற்றின் கொம்புகள் இனப்பெருக்க காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் மான்களுக்கிடையேயான சண்டைகளின் போதும் பயன்படுத்தப்படுகின்றன. [19] இவை கொம்புகளை மோதி சண்டையிடும்போது ஏற்படும் சத்தம் நூற்றுக்கணக்கான மீட்டர் தொலைவுக்கும் அளவுக்கு கேட்கும். ஆண் மான்களுக்கு இடையில் நடக்கும் சண்டைகள் அரிதாகவே கடுமையானதாக இருக்கும். ஆனால் அவை உயிருக்கு ஆபத்தை உண்டாக்குபவை.

ஹார்டிபீஸ்ட் முதன்மையாக புற்களை உணவாக கொள்கிறது.

உணவுமுறை

[தொகு]

ஹார்டெபீஸ்ட் முதன்மையாக மேய்ச்சல் விலங்கு ஆகும். மேலும் இவற்றின் உணவுகளில் பெரும்பாலும் புற்கள் இடம்பெற்றுள்ளன. [20] புர்க்கினா பாசோவில் உள்ள நாசிங்கா கேம் பண்ணையில் நடத்தப்பட்ட ஆய்வில், ஹார்டிபீஸ்டின் மண்டை ஓட்டின் அமைப்பு அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட் கொள்வதையும், மெல்லுவதையும் எளிதாக்குகிறது. [21] அல்செலாபினியின் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் ஹார்டிபீஸ்ட் மிகக் குறைவான உணவை உட்கொள்கிறது. ஹார்டெபீஸ்டின் நீண்ட மெல்லிய முகவாய்ஆனது, குட்டையான புற்களின் இலைகளை உண்பதற்கும், புல் தண்டுகளிலிருந்து இலை உறைகளை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. இது தவிர, உயரமான முற்றியப் புற்களிலிருந்தும் சத்தான உணவைப் பெறத்தக்கதாக உள்ளது. ஹார்டிபீஸ்டின் உடல் அமைப்பானது மேய்ச்சலுக்கு கடினமான காலமான வறண்ட காலத்திலும் தனக்கு தேவைபட்ட உணவைப் பெற உதவுகின்றது. உதாரணமாக, செம்பழுப்பு மறிமான்களுடன் ஒப்பிடுகையில், ஹார்டிபீஸ்ட்கள், தீவனம் குறைவாகக் கிடைக்கும் நேரங்களில், பல்லாண்டுத் தாவரங்களின் அரிதான மீள்வளர்ச்சியைப் பகுதியை உட்கொண்டு மென்று சாப்பிடுவதில் சிறந்ததாக உள்ளது. [21] இந்த தனித்துவமான திறன்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஹார்டெபீஸ்ட்டை மற்ற விலங்குகளை விட மேலோங்க அனுமதித்திருக்கலாம், இது ஆப்பிரிக்கா முழுவதும் அதன் வெற்றிகரமான பரவலுக்கு வழிவகுத்தது.

பொதுவாக ஹார்ட்பீஸ்டின் உணவில் குறைந்தது 80 சதவிகிதம் புற்கள் உள்ளன. ஆனால் இதுவே அக்டோபர் முதல் மே வரையிலான ஈரமான பருவத்தில் இவற்றின் உணவில் 95 விழுகாட்டுக்கும் மிகுதியாக இருக்கும். [21] டோப்பி மற்றும் காட்டுபீஸ்டுகளை விட ஹார்டிபீஸ்ட் அதிக அளவிலான உணவை செரிக்க வல்லது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. [22] தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், இது முலாம்பழம், வேர்கள் மற்றும் கிழங்குகளில் உள்ள நீர்சத்தைக் கொண்டு வாழக் கூடியன.

இனப்பெருக்கம்

[தொகு]
ஒரு புல்வெளியில் இரண்டு சிவப்பு ஹார்டிபீஸ்ட் சிறார்

ஹார்டெபீஸ்டுகள் ஆண்டு முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. [20] ஆண் மற்றும் பெண் இருபாலினத்தவையும் ஒன்று முதல் இரண்டு வயதில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இனப்பெருக்கம் இனங்கள் மற்றும் உள்ளூர் காரணிகளால் மாறுபடும். இனச்சேர்க்கை ஆண் மானின் ஆதிக்கத்தக்கு உட்பட்ட பிரதேதில், பெரும்பாலும் திறந்த வெளியில் நடக்கிறது. [20] ஆதிக்கத்திற்காக ஆண் மான்கள் கடுமையாகப் போராடவேண்டி வரலாம். அதைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஆண் தான் பெண்ணின் பிறப்புறுப்பை முகர்ந்து, அது சினைப்பருவச் சுழற்சியில் இருந்தால் அதைப் பின்தொடர்கிறது. சில சமயங்களில் சினைப்பருவ சுழற்சியில் உள்ள பெண் மான் தன் வாலை சிறிது நீட்டி தன் ஏற்புத்திறனைக் குறிக்கும். மேலும் ஆண் மான் பெண் மானை வழி மறிக்க முயல்கிறது. அது இறுதியில் அசையாமல் நின்று ஆண் மான் தன்னை புணர அனுமதிக்கலாம். புணர்தல் விரைவில் முடியக்கூடியது. மேலும் அடிக்கடி மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. சில நேரங்களில் ஒரு நிமிடத்தில் இரண்டு முறை அல்லது அதற்கு மேல் நடக்கும். [16] இந்த நேரத்தில் ஊடுருவி வரும் எதுவம் துரத்தப்படும். பெரிய மந்தைகளில், பெண் மான்கள் பெரும்பாலும் பல ஆண் மான்களுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. [16]

இவற்றின் கர்ப்ப காலம் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு சுமார் 9 கிலோ (20 பவுண்டு) எடையுள்ள ஒரு கன்று பிறக்கும். பிறப்புகள் பொதுவாக வறண்ட காலத்தில் உச்சம் அடைகின்றன. [16] குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே தானாக நடக்கத் துவங்கும் என்றாலும், அவை பொதுவாகத் தங்கள் தாய்மார்களுக்கு அருகிலேயே திறந்த வெளியில் கிடக்கின்றன. [23] குட்டி நான்கு மாதங்கள் பால் குடிக்கிறது. [23] ஆனால் இளம் ஆண் குட்டிகள் இரண்டரை வருடங்கள் தங்கள் தாயுடன் தங்கும். [16] பெரும்பாலும் ஆண் சிறார்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஏனெனில் அவை பிராந்திய வயது வந்த ஆண் மான்களின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் அவைகளால் நல்ல தீவனம் கிடைக்காமல் கோகலாம். [15] இந்த மறிமான்களின் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை.[20]

குறிப்புகள்

[தொகு]
  1. IUCN SSC Antelope Specialist Group (2019). "Alcelaphus buselaphus". IUCN Red List of Threatened Species 2019: e.T811A143160967. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T811A143160967.en. https://www.iucnredlist.org/species/811/143160967. பார்த்த நாள்: 18 February 2022. 
  2. 2.0 2.1 Wilson, D. E.; Reeder, D. M., eds. (2005). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore, USA: Johns Hopkins University Press. p. 674. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 East, R.; IUCN/SSC Antelope Specialist Group (1999). African Antelope Database 1998. Gland, Switzerland: The IUCN Species Survival Commission. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-8317-0477-7.
  4. Mallon, D. P.; Kingswood, S. C. (2001). Antelopes: North Africa, the Middle East, and Asia. Gland, Switzerland: IUCN. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-8317-0594-1.
  5. Rafferty, J. P. (2010). Grazers. New York, USA: Britannica Educational Publications. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61530-465-3.
  6. Lewis, J. G.; Wilson, R. T. (1977). "The plight of Swayne's hartebeest". Oryx 13 (5): 491–4. doi:10.1017/S0030605300014551. 
  7. Hildyard, A. (2001). Endangered Wildlife and Plants of the World. New York, USA: Marshall Cavendish. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7199-8.
  8. Capellini, I.; Gosling, L. M. (2007). "Habitat primary production and the evolution of body size within the hartebeest clade". Biological Journal of the Linnean Society 92 (3): 431–40. doi:10.1111/j.1095-8312.2007.00883.x. 
  9. 9.0 9.1 9.2 "Western Hartebeest". Big Game Hunting Records – Safari Club International Online Record Book. Safari Club International. Archived from the original on 30 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  10. 10.0 10.1 10.2 "Cape or Red Hartebeest". Big Game Hunting Records – Safari Club International Online Record Book. Safari Club International. Archived from the original on 31 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  11. 11.0 11.1 11.2 "Lelwel Hartebeest". Big Game Hunting Records – Safari Club International Online Record Book. Safari Club International. Archived from the original on 30 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  12. 12.0 12.1 "Coke Hartebeest". Big Game Hunting Records – Safari Club International Online Record Book. Safari Club International. Archived from the original on 31 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  13. 13.0 13.1 13.2 "Lichtenstein Hartebeest". Big Game Hunting Records – Safari Club International Online Record Book. Safari Club International. Archived from the original on 31 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  14. 14.0 14.1 14.2 "Swayne Hartebeest". Big Game Hunting Records – Safari Club International Online Record Book. Safari Club International. Archived from the original on 30 January 2016. பார்க்கப்பட்ட நாள் 26 January 2016.
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 Kingdon, J. (1989). East African Mammals: An Atlas of Evolution in Africa. Chicago: University of Chicago Press.Kingdon, J. (1989).
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 Estes, R. D. (2004). The Behavior Guide to African Mammals: Including Hoofed Mammals, Carnivores, Primates. Berkeley, USA: University of California Press. pp. 133–42.Estes, R. D. (2004).
  17. {{cite book}}: Empty citation (help)
  18. Oboussier, H. (1970). "Information on Alcelaphini (Bovidae-Mammalia) with special reference to the brain and hypophysis. Results of research trips through Africa (1959–1967)". Gegenbaurs Morphologisches Jahrbuch 114 (3): 393–435. பப்மெட்:5523305. 
  19. Capellini, I.; Gosling, L. M. (2006). "The evolution of fighting structures in hartebeest". Evolutionary Ecology Research 8: 997–1011. http://eprint.ncl.ac.uk/file_store/production/73964/47C43E06-59DC-401D-8EB5-A347757746D2.pdf. பார்த்த நாள்: 2016-04-07. 
  20. 20.0 20.1 20.2 20.3 "Hartebeest". African Wildlife Foundation. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 20 January 2013.
  21. 21.0 21.1 21.2 Schuette, J. R.; Leslie, D. M.; Lochmiller, R. L.; Jenks, J. A. (1998). "Diets of hartebeest and Roan antelope in Burkina Faso: Support of the long-faced hypothesis". Journal of Mammalogy 79 (2): 426–36. doi:10.2307/1382973. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1998-05_79_2/page/426. 
  22. Murray, M. G. (1993). "Comparative nutrition of wildebeest, hartebeest and topi in the Serengeti". African Journal of Ecology 31 (2): 172–7. doi:10.1111/j.1365-2028.1993.tb00530.x. https://archive.org/details/sim_african-journal-of-ecology_1993-06_31_2/page/172. 
  23. 23.0 23.1 Castelló, J. R. Bovids of the World: Antelopes, Gazelles, Cattle, Goats, Sheep, and Relatives. Princeton, USA: Princeton University Press. pp. 537–9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ட்பீஸ்ட்&oldid=3848738" இலிருந்து மீள்விக்கப்பட்டது