உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாரிஸ் பாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாரிஸ் பாறு
Harris's hawk
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. unicinctus
இருசொற் பெயரீடு
Parabuteo unicinctus
(Temminck, 1824)
Subspecies

P. u. harrisi
P. u. superior
P. u. unicinctus

ஹாரிஸ் பாறுகள் வாழும் பரப்பு
வேறு பெயர்கள்

Falco harrisii Audubon 1839
Buteo harrisii Audubon 1840

ஹாரிஸ் பாறு ( Harris's hawk (Parabuteo unicinctus) முன்னர் bay-winged hawk அல்லது dusky hawk, என்று அறியப்பட்டது) என்பது ஒரு நடுத்த அளவு கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது தென்மேற்கு ஐக்கிய மாகாணங்களில் இருந்து தெற்கில் சிலி, மத்திய அர்ஜென்டீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் காணப்படக்கூடிய பறவை ஆகும். சில நேரங்களில் மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரித்தானியாவில், இப்பறவைகள் தென்பட்டுள்ளன. ஆனால் இவை காப்பிட இனப்பெருக்க வளர்ப்பிடத்தில் இருந்து தப்பி வந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஹாரிஸ் பாறுகள் கூட்டு முயற்சியில் வேட்டையாடும் தன்மைக்காக சிறப்பாக அறியப்படுகின்றன. இதனால் இவை வேட்டைக் காரர்களால் வேட்டைப் பயன்பாட்டுக்காக வளர்க்கப்படுகின்றன. ஹாரிஸ் பருந்துகள் அறிவுக்கூர்மை கொண்டவையாக உள்ளதால், அவற்றை எளிதாக பயிற்றுவிக்க இயலுகிறது. இதனால் இவை வளர்ப்பு வல்லூறுவுக்காக பகழ்பெற்றவையாக உள்ளன.

விளக்கம்

[தொகு]
ஹாரிஸ் ஹாக் பறவையைத் தெளிவாக தனித்துக் காட்டும் சிறகு மற்றும் வால் இறகுகள் தோற்றம்

இந்தப் பறவையின் அளவானது பொரி வல்லூறு மற்றும் சிவப்பு வால் வல்லூறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நடுத்தர அளவில் இருக்கும். இப்பறவையானது 46 செமீ முதல் 59 செமீ (18 முதல் 23 அங்குலம்) நீளமுடையதாகவும், பொதுவாக சிறகுகளின் நீளமானது 103 செமீ முதல் 120 செமீ (41 முதல் 47 அங்குலம்) வரை இருக்கும்.[2][3] இந்தப் பாறுக்கள் பழுப்பு நிற சிறகுகளும், செங்கல் நிறமத் தோள்களையும், கறுப்பு நிற வாலும் அந்த வால் இறகு முனை வெள்ளை நிறம் கொண்டு இருக்கும்.[4] மேலும் இவை மிகக்கூர்மையான அலகும், அதேபோலக் கூரான கால் நகங்கள் கொண்டிருக்கும். இவை பால் ஈருருமை கொண்டவையாக உள்ளன. ஆண் பறவைகளைவிட பெண் பறவைகள் 35% பெரியவையாக உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parabuteo unicinctus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Udvardy, Miklos D. F. (2001). National Audubon Society Field Guide to North American Birds 'Western Region'. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-42851-8.
  3. Clark, W. S. and B. K. Wheeler. (1987). A Field Guide to Hawks of North America. Houghton Mifflin Co. Boston.
  4. "Harris's Hawk - Appearance". 2015. பார்க்கப்பட்ட நாள் October 22, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிஸ்_பாறு&oldid=2611135" இலிருந்து மீள்விக்கப்பட்டது