ஹாரிஸ் நாடார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



டி.ஹாரிஸ் நாடாா்
பிறப்பு நாகா்கோயில்,இந்தியா
ஹாரிஸ் நகைக்கடை
பிள்ளைகள் ஐந்து பேர்


டி ஆரிசு நாடார் தங்க வணிகத்தில் தென்னிந்தியத் தொழிலதிபராகவும் முன்னோடியாகவும் இருந்தார். அவர் 1910 ஆம் ஆண்டில் பிறந்தார்.

வரலாறு[தொகு]

1940 ஆம் ஆண்டு தனது சொந்த கிராமமான பள்ளியாடியில் (தமிழ்நாட்டிலுள்ள நாகர்கோவிலில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது) மிகச் சிறிய முதலீடாக ஆரிசு நாடார் ஒரு நகை வணிகத்தைத் தொடங்கினாா். அவருக்கு விருப்பமான தங்க ஆபரணங்களை உருவாக்குவதும் விற்பதும் வணிகத்தின் முக்கிய நோக்கம் என வரையறுத்தார். அவருடைய வணிகத் திறமை, அவரது ஆர்வம் அவரை தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மரியாதைக்குரிய ஆளுமையாக மாற்றியது. அவர் உருவாக்கிய நகைகள் அவற்றின் தரத்திற்காகப் புகழ் பெற்றன. அவரது நகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றது, பள்ளியாடியிலும் நாகர்கோவிலிலும் முதல் சில்லறைக் கடைகள் திறக்க வழிவகுத்தது.

நாகர்கோவில் கடை, வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய வாணிகச் சுற்றுச்சூழலை வழங்கியுள்ளது. நாகர்கோவில் கடை இந்திய சந்தையின் தேவைக்கு ஏற்ப, மிகவும் பரந்த வடிவமைப்புகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்டது. தனது சொந்த மண்ணில் வெற்றி பெற்ற பிறகு, அவர் சென்னை, மும்பை போன்ற இந்திய நகரங்களுக்கும், பிரித்தானியக் குடியேற்ற நாடான பர்மாவிற்கும் தங்க ஆபரணங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிஸ்_நாடார்&oldid=3728338" இலிருந்து மீள்விக்கப்பட்டது