உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாரியட் மார்டினோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாரியட் மார்டினோவ்
ஹாரியட் மார்டினோவ் (ஓவியர்-ரிச்சர்ட் ஓவான்) (1834 அல்லது அதற்குமுன்)
ஹாரியட் மார்டினோவ் (ஓவியர்-ரிச்சர்ட் ஓவான்)
(1834 அல்லது அதற்குமுன்)
பிறப்பு(1802-06-12)12 சூன் 1802
நார்விச், பிரித்தானிய இராச்சியம்
இறப்பு27 சூன் 1876(1876-06-27) (அகவை 74)
ஆம்பில்சைட், பிரித்தானிய இராச்சியம்
தேசியம்British
குறிப்பிடத்தக்க படைப்புகள்இல்லஸ்ட்ரேஷன் ஆஃப் பொலிட்டிகல் எகானமி (1834)
சொசைட்டி இன் அமெரிக்கா (1837)
டீர் புரூக் (1839)
தி ஹவர் அண்ட் தி மேன் (1839)

ஹாரியட் மார்டினோவ் (Harriet Martineau, /ˈmɑːrtənˌ/; 12 ஜூன் 1802 – 27 ஜூன் 1876) பிரித்தானிய சமூகத் தத்துவவாதியும் விக் கட்சியின் எழுத்தாளரும் முதல் பெண் சமூகவியலலாளரும் ஆவார்.[1] மார்ட்டினோவ் பெண்ணியகண்ணோட்டத்திலிருந்து சமூகம், மதம், உள்நாடு பற்றிய பல சர்ச்சைக்குரிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் ஆகஸ்ட் காம்ட் எம்பவருடைய எழுத்துகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.[2]

விக்டோரியா மகாராணி இளமையில் மார்டினோவின் படைப்புகளை விரும்பிப்படித்தார். 1838 இல் தனது முடிசூட்டு விழாவுக்கு மார்டினோவை அழைத்துள்ளார். இச்செய்திகளை மார்னிடோவ் தனது வாசகர்களுக்கு அவரே சுவைபட விவரித்து எழுதியுள்ளார்.[3][4] மார்டினோ தனது சொந்த எழுத்து அணுகுமுறை பற்றி "ஒரு சமுதாயத்தைப் படிக்கும்போது, முக்கிய அரசியல், மத மற்றும் சமூக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று எழுதினார். பெண்கள் நிலையை புரிந்து கொள்ள ஒரு முழுமையான சமூக பகுப்பாய்வு அவசியம் என்று அவர் நம்பினார்.

புதின எழுத்தாளரான மார்கரெட் ஓலிபாந்த் என்பவர், "பிறவி விரிவுரையாளராகவும் அரசியல்வாதியுமான மார்ட்டினோ, அநேகமாக தனது தலைமுறையில் ஆண் அல்லது பெண்ணாக ஏதோவொரு தனிப்பட்ட பாலியல் ரீதியாக, குறைந்த அளவு பாதிப்பைக் கொண்டிருந்தார்” எனக்கூறுகிறார்.[2]

இளமை

[தொகு]
ஹாரியட் மார்டினோவ் பிறந்த இல்லம்

மார்டினோ, இங்கிலாந்தின் நார்விச் என்ற இடத்தில் பிறந்தார். எட்டு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இவர் ஆறாவது குழந்தையாவார். இவரது தந்தை தாமஸ் ஒரு துணி உற்பத்தியாளரும், மிகவும் மதிக்கத்தக்க யுனித்தரிய கிறிஸ்துவரும் ஆவார்.மேலும் ஆக்டகன் தேவாலயத்தில் திருப்பணிகள் செய்யும் திருத்தொண்டராகவும் இருந்தார்.[5] இவரது தாயார் ஒரு கரும்பாலை மற்றும் பலசரக்கு வியாபாரியின் மகளாவார்.

மார்டினோவின் குடும்பம் பிரஞ்சு ஹூகனாட் வம்சாவளியைச் சேர்ந்தது. மேலும் யுனித்தரியப் பார்வைகளை ஒப்புகொண்டு பின்பற்றியது. இவருடைய உறவினர் அறுவை சிகிச்சை நிபுனரான பிலிப் மெடோவ் மார்டினோவ்(1752–1829) ஆவார். இவருடைய பண்ணை மார்டினோவின் வீட்டிற்கு அருகிலேயே இருந்ததால், மார்டினோவ் இங்கு அதிக நேரத்தைச் செலவழித்தார்.[6] மற்றொரு உறவினரான பீட்டர் பின்ச் மார்டினோவ் ஒரு வணிகரும் வள்ளலும் ஆவார்.[7] மார்டினோவின் சகோதரர் ஜேம்ஸ் மார்டினோவ் ஒரு தத்துவவாதியும் ஆங்கில ஞானப்பரம்பரையைச் சேர்ந்த மத போதகரும் ஆவார். டயானா போஸ்ட்லித்வைட் என்பவருடைய கூற்றுப்படி, மார்டினோவ் தனது தாயாரோடு மிகக் குறைந்த அளவே அன்பும் அதே நேரத்தில் அவநம்பிக்கையும் கொண்டிருந்தார். அவருடைய பிற்கால எழுத்துகளில் இது வெளிப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hill, Michael R. (2002) Harriet Martineau: Theoretical and Methodological Perspectives. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-94528-3
  2. 2.0 2.1 2.2 Postlethwaite, Diana (Spring 1989). "Mothering and Mesmerism in the Life of Harriet Martineau". Signs (University of Chicago Press) 14 (3): 583–609. doi:10.1086/494525. https://archive.org/details/sim_signs_spring-1989_14_3/page/583. 
  3. Martineau, Harriet (1877). Harriet Martineau's Autobiography. Vol. 3. Cambridge University Press. pp. 79–80. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2013. How delighted the Princess Victoria was with my 'Series' {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  4. Wilson, Christopher. "The Benefits of a feminist in the Family". The Benefits of a Feminist in the Family. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. http://spartacus-educational.com/Wmartineau.htm
  6. Martineau, Harriet (2007). Peterson, Linda H. (ed.). Autobiography. Broadview Press. p. 49. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.
  7. Ronalds, B.F. (February 2018). "Peter Finch Martineau and his Son". The Martineau Society Newsletter 41: 10–19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரியட்_மார்டினோவ்&oldid=3858065" இலிருந்து மீள்விக்கப்பட்டது