உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாய் நானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாய் நானா
இயக்கம்சௌர்யூவ்
தயாரிப்புமோகன் சேருகுரி (CVM)
டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகாலா
மூர்த்தி கே. எஸ்.
திரைக்கதைசௌர்யூவ்
பானு தீராஜ் ராயுடு
வசந்த் சமீர் பின்னமராஜு
இசைஹேஷாம் அப்துல் வாஹாப்
நடிப்பு
ஒளிப்பதிவுசானு வர்கீஸ்
படத்தொகுப்புபிரவீன் ஆண்டனி
கலையகம்வைரா எண்டர்டெயின்மென்ட்ஸ்
வெளியீடு7 டிசம்பர் 2023 (2023-12-07)
ஓட்டம்155 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவுமதிப்பீடு ₹20 கோடி
மொத்த வருவாய்மதிப்பீடு ₹250 கோடி[2]

ஹாய் நானா (Hi Nanna) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழிக் காதல் நாடகத் திரைப்படமாகும், இது சௌரியுவ் இயக்குநராக அறிமுகமாகி, வைரா என்டர்டெயின்மென்ட்சு தயாரிப்பில் வெளிவந்தது. இந்தப் படத்தில் நானி, மிருணாள் தாக்கூர் ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

ஹாய் நன்னா 7 டிசம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3] இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

கதைச் சுருக்கம்

[தொகு]

ஆறு வயது மகி தனது தந்தை, தாத்தா மற்றும் தனது செல்ல நாய் புளூட்டோவுடன் மும்பையில் வசிக்கிறார். மகி சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் நோயினால் அவதிப்படுகிறார். தந்தை விராஜ், ஒரு வெற்றிகரமான புதுப்பாங்குப் புகைப்படக் கலைஞராக உள்ளார். யாசுனா எனும் பெண்ணைத் தற்செயலாக மகி சந்திக்கிறார். மகியின் தாய் யார் அவருக்கும் யாசுனாவிற்கும் என்ன தொடர்பு என்பதாக கதை உள்ளது.

நடிகர்கள்

[தொகு]
  • நானி- விராஜ்
  • மிருணாள் தாக்கூர் - யாசுனா
  • கியாரா கண்ணா- மகி
  • ஜெயராம் - யாசுனாவின் தந்தையாக
  • நாசர் - மருத்துவர் ரஞ்சனாக

வெளியீடு

[தொகு]

திரையரங்கம்

[தொகு]

ஹாய் நானா டிசம்பர் 7, 2023 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளும் வெளியிடப்பட்டன.[4] இந்தப் படம் ஆரம்பத்தில் டிசம்பர் 21, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் பின்னர் சாலார் மற்றும் டன்கியுடன் வெளியாவதைத் தவிர்ப்பதற்காக திசம்பர் 7, 2023 இல் வெளியானது. [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hi Nanna (12A)". British Board of Film Classification. 30 நவம்பர் 2023. Archived from the original on 3 டிசம்பர் 2023. Retrieved 3 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "5 நானியின் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்கள்: தசரா முதலிடம்". Pinkvilla. 2024-08-09.
  3. Srikar, Ram Venkat (2023-12-07). "Hi Nanna Review: Heartfelt Treatment Overpowers Predictable Narrative". www.filmcompanion.in (in ஆங்கிலம்). Retrieved 2024-01-20.
  4. Bureau, The Hindu (2023-10-15). "'Hi Nanna' teaser: Nani, Mrunal Thakur star in a feel-good film on love and fatherhood" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 2023-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231023015355/https://www.thehindu.com/entertainment/movies/hi-nanna-teaser-nani-mrunal-thakur-star-in-a-feel-good-film-on-love-and-fatherhood/article67423607.ece. 
  5. "Nani and Mrunal Thakur's 'Hi Nanna' teaser release date revealed". The Times of India. 2023-10-13 இம் மூலத்தில் இருந்து 2023-10-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231012171635/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/nani-and-mrunal-thakurs-hi-nanna-teaser-release-date-revealed/articleshow/104377634.cms?from=mdr. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாய்_நானா&oldid=4233205" இலிருந்து மீள்விக்கப்பட்டது