உள்ளடக்கத்துக்குச் செல்

ஹான் கா-இன் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹான் கா-இன்
பிறப்புகிம் ஹுயூன்-ஜூ
2 பெப்ரவரி 1982 (1982-02-02) (அகவை 42)
சியோல், தென் கொரியா
கல்விகுயுங் ஹீ பல்கலைக்கழகம் - சுற்றுலா மேலாண்மை[1]
வாழ்க்கைத்
துணை
இயோன் ஜங்-ஹூன் (தி. 2005)
கையொப்பம்

ஆன்-கா-இன் (Han Ga-in) தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒரு வடிவழகியாகவும் அறியப்படும் இவர் 2002 ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். பின்னர் விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டில் இவர் நடித்த நாடகமும் திரைப்படமும் வெற்றி பெற்றன.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஆன்-கா-இன் சியோல் நகரிலுள்ள குசன் தொடக்கப் பள்ளி சுன்யங் நடுநிலைப் பள்ளி மற்றும் பேக்வா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கினார். தென் கொரிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் 400 புள்ளிகளில் 384 புள்ளிகளைப் பெற்றார்.[2][3] 22 டிசம்பர் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, ஆன்-கா-இன் கேபிஎசு1 என்ற வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்று 34 ஆவது இடத்தைப் பிடித்தார். கியுங் கீ பல்கலைக்கழகத்தில் விருந்தோம்பல் மேலாண்மை பாடத்தைப் பயின்றார். பொழுதுபோக்கு துறையில் நுழைந்த பிறகு, இர் தனது படிப்பை பகுதி நேரமாகத் தொடர்ந்தார் மற்றும் 2007 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "한가인". Nate (in Korean). Retrieved 2012-10-08.
  2. "한가인 골든벨 출연모습 "범접할 수 없는 우등생포스"". Zum News. 19 Nov 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
  3. "수능 384점 한가인, 연예계 '대표 브레인' 또 누구?" (in ko). JoongAng Ilbo. 19 November 2012. https://news.joins.com/article/9922126. 
  4. "경희대 시절 지각하는 한가인, "그때도 예뻤네!"" (in ko). The Chosun Ilbo. 14 May 2012. https://www.chosun.com/site/data/html_dir/2012/05/14/2012051402405.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்_கா-இன்_(நடிகை)&oldid=3920913" இலிருந்து மீள்விக்கப்பட்டது