ஹாத்தார்ன் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு நபர் தன்னை இன்னொருவர் அவதானிக்கிறார் என்பதை உணர்ந்தவுடன், தனது நடத்தையின் ஒரு கூற்றினை மாற்றிக் கொண்டால் அது ஹாத்தார்ன் விளைவு (Hawthorne effect) அல்லது அவதானிப்பாளர் விளைவு (Observer effect) என்று அழைக்கப்படுகிறது.[1][2]

1924-32 காலகட்டத்தில், ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகர் அருகே அமைந்திருந்த ஹாத்தார்ன் வொர்க்ஸ் என்ற தொழிற்சாலையில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பணியிடத்தில் வெளிச்சத்தைக் கூட்டினால் தொழிலாளிகளின் வேலைத்திறன் அதிகரிக்கின்றதா என்பதை ஆராய இவ்வாய்வுகள் நடத்தப்பட்டன. வெளிச்சத்தின் அளவை மாற்றினால் தொழிலாளிகளின் வேலைத்திறன் கூடியது. ஆனால் ஆய்வுகள் முடிந்தபின்னால், மீண்டும் முன்பிருந்த அளவுக்கே குறைந்து விட்டது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை 1950 இல் மீளாய்வு செய்த ஹென்ரி ஏ. லான்ஸ்பெர்கர் “ஹாத்தார் விளைவு” என்ற காரணியை முன்வைத்தார். இதன்படி வெளிச்சத்தின் அளவு மாறியதால் தொழிலாளிகளின் வேலைத்திறனில் எந்த ஒரு தாக்கமும் இல்லை. மாறாக தம்மை ஆய்வாளர்கள் அவதானிக்கின்றனர் என்ற உணர்வே அவர்களின் வேலைத்திறனைக் கூட்டியது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. McCarney R, Warner J, Iliffe S, van Haselen R, Griffin M, Fisher P (2007). "The Hawthorne Effect: a randomised, controlled trial". BMC Med Res Methodol 7: 30. doi:10.1186/1471-2288-7-30. பப்மெட்:17608932. 
  2. Fox NS, Brennan JS, Chasen ST (2008). "Clinical estimation of fetal weight and the Hawthorne effect". Eur. J. Obstet. Gynecol. Reprod. Biol. 141 (2): 111–4. doi:10.1016/j.ejogrb.2008.07.023. பப்மெட்:18771841. 
  3. Henry A. Landsberger, Hawthorne Revisited, Ithaca, 1958.
  4. Elton Mayo, Hawthorne and the Western Electric Company, The Social Problems of an Industrial Civilisation, Routledge, 1949.
  5. Bowey, Dr. Angela M.. "MOTIVATION AT WORK: a key issue in remuneration". பார்த்த நாள் 22 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாத்தார்ன்_விளைவு&oldid=2746602" இருந்து மீள்விக்கப்பட்டது