ஹாடி ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாடி ராணி என்பவர் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஆவார். [1] ஹடா சௌஹான் ராஜ்புத்தின் மகளான அவர், மேவாரில் உள்ள சலும்பரைச் சேர்ந்த சுண்டாவத் தலைவரான ரத்தன் சிங்கை மணந்தார், அவர் தனது கணவரை போருக்குச் செல்லத் தூண்டுவதற்காக  தன்னையே  தியாகம் செய்தார். [2]

புராண கதைகளின் படி, மேவாரின் முதலாம் ராஜ் சிங் (1653-1680) அரசாட்சியின் போது அஜ்மீர் சுபாவின் முகலாய ஆளுநருக்கு எதிரான கிளர்ச்சியில் சேர ரத்தன் சிங்கை அவரது தளபதி அழைத்தபோது தான் சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும் மேலும்  தனது மனைவி ஹாடி ராணியிடம் போர்க்களத்திற்கு  செல்லும் முன் அவள் நினைவாக சில நினைவுப் பரிசுகளைக் கேட்டு பின்னர் வருமாறு சொல்லியுள்ளார். மேவாருக்கான தன் கடமையைச் செய்வதற்கு தனது கணவருக்கு தானே தடையாக இருக்கிறோம் என்று எண்ணிய ஹாடி ராணி தனது தலையை தானே வெட்டி ஒரு தட்டில் வைக்கச்சொல்லி  ஒரு வேலைக்காரனிடம் அதை ஒரு துணியால் மூடி தன் கணவரிடம் கொடுக்க சொன்னாள். நினைவு பரிசாக அவள் தலையே இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கும், இழப்பிற்கும் ஆளான போதிலும் அவள் மீது பெருமிதம் கொண்ட ரத்தன் சிங் தனது கழுத்தில் நினைவுச் சின்னமாக அவளது தலைமுடியால் கட்டிக்கொண்டார். அவர்களின் கிளர்ச்சி முடிவுக்கு வந்ததும், மனைவி இல்லாமல் வாழும் ஆசையை இழந்து மண்டியிட்டு தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்..

மரபு[தொகு]

இன்றும், ராஜஸ்தானில் உள்ள மக்கள் அவளை வணங்குகிறார்கள் மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் அவரது வீரம்,  தைரியம் பற்றி பல்வேறு பாடல்கள் மூலமாக மக்களுக்கு அவளது கதையைச் சொல்லி வருகிறார்கள். அவர் ராஜஸ்தானில் சொல்லப்படும் பல்வேறு போரைப்பற்றிய கதைகள், கவிதைகள் மற்றும் பாடல்களுக்கு மிகுந்த உத்வேகம் அளித்தவர் ஆவார். மேலும்  அவரது கதை ராஜஸ்தானின் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்டத்தில் உள்ள தோடரைசிங் நகரில் அமைந்துள்ள ஒரு படிக்கட்டுக் கிணறு அவரது பெயரிலேயே '''ஹாடி ராணியின் படிக்கிணறு''' என்று அழைக்கப்படுகிறது. இது கிபி 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. [3] ராஜஸ்தான் காவல்துறை 'ஹாடி ராணி மகிளா படையணி' என்ற பெயரில் ஒரு பெண்கள் படையணியையும் உருவாக்கியுள்ளது [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாடி_ராணி&oldid=3656275" இருந்து மீள்விக்கப்பட்டது