ஹாங்காங் போராட்டம் 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்காங் போராட்டக்கார்களின் ஊர்வலம், 9 சூன் 2019

ஹாங்காங் போராட்டம் 2019 (2019 Hong Kong protests), ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க வசதியாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இச்சட்டத் திருத்தத்திற்கு ஹாங்காங் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்[1] பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் இச்சட்ட மசோதாவிற்கு எதிராக 9 சூன் 2019 முதல் ஹாங்காங் அரசிற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.[2]இப்போராட்டத்தில் 800 அதிகமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [3] ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்களை, சீனாவிற்கு அனுப்பி விசாரணை செய்வதற்கான சட்ட திருத்த மசோதாவை ஹாங்காங் அரச நிர்வாகி கேரி லாம் திரும்பப் பெற்றார்.

இதற்கிடையில் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் அக்டோபர் மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.[4] ஆனால் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் முகமூடி அணிந்து கொண்டு சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கைதுகளும், காயம்பட்டோரும்[தொகு]

16 அக்டோபர் 2019 முடிய நடைபெற்ற 400 போராட்டங்களில் 2200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினரின் அடக்குமுறையால் 1100 பேர் காயமடைந்துள்ளனர்.[5]

சீன அதிபரின் எச்சரிக்கை[தொகு]

சீனாவைப் பிரிக்க நினைத்தால் "நசுங்கிய உடல்கள், நொறுங்கிய எலும்புகள்" மிஞ்சும் என்று என ஹாங்காங் போராட்டக் காரர்களுக்குச் சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாள விஜயத்தின் போது 14 அக்டோபர் 2019 அன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்..[6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hong Kong protests explained in 100 and 500 words". BBC News (27 August 2019). பார்த்த நாள் 30 August 2019.
  2. "Using emergency law to ban masks 'may doom HK'". RTHK. 3 October 2019. https://news.rthk.hk/rthk/en/component/k2/1484040-20191003.htm. 
  3. ஹாங்காங் போராட்டம்: கைதானவர்கள் எண்ணிக்கை வெளியீடு
  4. Communist China celebrates 70th birthday as Hong Kong simmers
  5. Over 2200 Pepole detained since start of protests:Carrie Lam
  6. "நாட்டை யாராவது துண்டாக்க நினைத்தால்” - நேபாளத்தில் இருந்து எச்சரிக்கை விடும் சீன அதிபர்!
  7. சீன அதிபர் ஷி ஜின்பிங்: எலும்பு நொறுங்கும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை - நாள் 14 அக்டோபர் 2019

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாங்காங்_போராட்டம்_2019&oldid=2822040" இருந்து மீள்விக்கப்பட்டது