ஹாஃப்மன் எஸ்டேட்ஸ், இலினொய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹாஃப்மன் எஸ்டேட்ஸ்
புறநகர்
ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் புறநகர்
[[File:Hoffmanestatesil.png
|100px|அலுவல் சின்னம் ஹாஃப்மன் எஸ்டேட்ஸ்]]
சின்னம்
அடைபெயர்(கள்): ஹாஃப்மன்
குறிக்கோளுரை: மேன்மை நோக்கி வளர்ச்சி
இலினொயின் குக் மற்றும் கேன் மாவட்டங்களில் ஹாஃப்மன் எஸ்டேட்ஸின் இருப்பிடம்
இலினொயின் குக் மற்றும் கேன் மாவட்டங்களில் ஹாஃப்மன் எஸ்டேட்ஸின் இருப்பிடம்
ஐக்கிய அமெரிக்காவில் இலினொயின் இருப்பிடம்
ஐக்கிய அமெரிக்காவில் இலினொயின் இருப்பிடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Illinois
மாவட்டங்கள்குக், கேன்
இணைக்கப்பட்டது1959 (புறநகர்)
அரசு
 • நகரத்தலைவர்வில்லியம் டீ. மெக்லியோட்
 • மேலாளர்ஜேம்ஸ். எச். நாரிஸ்
பரப்பளவு[1]
 • மொத்தம்54.39 km2 (21.00 sq mi)
 • நிலம்53.92 km2 (20.82 sq mi)
 • நீர்0.47 km2 (0.18 sq mi)  0.86%
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்51,895
 • Estimate (2016)[2]51,738
 • அடர்த்தி959.51/km2 (2,485.13/sq mi)
Zip Codes60010, 60067, 60169, 60173, 60192, 60194, 60195
தொலைபேசி குறியீடு847 / 224
இணையதளம்www.hoffmanestates.org

ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் அல்லது ஹாஃப்மன்பாக்கம் அல்லது ஆப்மன்பாக்கம் என்பது அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் ஒரு புறநகர் ஆகும். இப்புறநகரின் பெரும்பாலான நிலம் குக் மாவட்டத்தில் உள்ளது, மற்றும் ஒரு சிறிய பகுதி கேன் மாவட்டத்தில் உள்ளது. இது சிகாகோவின் புறநகர் ஆகும். 2010 ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இப்புறநகரின் மக்கட்தொகை 51,895 நபர்கள் ஆகும். இப்புறநகர் 1959 ல் இணைக்கப்பட்டது.

தற்பொழுது, இப்புறநகர் சியர்ஸ் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் தலைமையகமாகவும், ஏடியென்டியின் மத்தியமேற்கு தலைமையகமாகவும், மோரி செய்க்கியின் அமெரிக்கத் தலைமையகமாகவும் செயல்படுகிறது. ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் சியர்ஸ் மையம், லெஜெண்ட்ஸ் அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கத்தின் சிகாகோ ப்ளிஸ் அணி, உள்புற காற்பந்தாட்டச் சங்கத்தின் சிகாகோ ஸ்லாட்டர் அணி, மற்றும் என். பீ. ஏ. ஜீ சங்கத்திற்கு மையமாக அமைகிறது.

2009 ல், இப்புறநகர் மத்தியமேற்கின் மிகப்பெரிய இசை மற்றும் நடன விழா ஆகிய ஹார்ட்லாண்ட் பன்னாட்டுப் பச்சைக்குத்தல் விழாவை நடத்தியது.

வரலாறு[தொகு]

சண்டர்லாஜ் பண்ணை மாமிசம்[3](தேசிய பண்டைய இடங்கள் காப்பகம்) ஹாஃப்மன் எஸ்டேட்ஸில்

1958 ல் வடகிழக்கு ஆயப்பாதை திறந்து, இப்புறநகரை சிகாகோ பயணிகளுக்கு அழகுப்படுத்திவிட்டது. 1961 ல் தொடங்கி, ஆயப்பாதையின் வடக்கு பக்கம் அமையும் முதல் நிலம் ஹாஃப்மன் எஸ்டேட்ஸின் இன்னொரு பகுதியாக பின்னிணைக்கப்பட்டது. தற்பொழுது வின்ஸ்டன் நால்ஸ், மேற்குபரி, மற்றும் பால் டக்லஸ் வனப் பாதுகாப்பிடம் எனப்படும் பகுதிகளை சேர்ந்த சுமார் 2000 ஏக்கர் (8.1 சதுர கிலோமீட்டர்) அளவுக்கு நிலம் 1962 ல் பின்னிணைக்கப்பட்டது. இப்பின்னிணைப்புகள் முன்பு இணைக்கப்பட்ட புறநகர நிலப்பகுதியை இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்தன.

1971 ல் கிழக்கு பக்கம் திறந்த வுட்ஃபீல்ட் பேரங்காடியினால் இப்பகுதி ஒரு பெரிய வணிக மையமாக அமைந்தது. புறநகரின் பெயரை கிழக்கு பேரிங்டன் ஆக மாற்ற 1980 களில் ஒரு முயற்சி பிரபலமானது, ஆனால் ஒரு குடியிருப்புக்குரிய வாக்கெடுப்பினால் முன்னேறவில்லை.

1990 களில், ப்ரேரி ஸ்டோன் வணிகப்பூங்காவின் கட்டுமானம் தொடங்கியது. இப்பூங்காவின் பிரம்மாண்ட 780 ஏக்கர் (3.2 சதுர கிலோமீட்டர்) அளவான பெருந்திட்டமிட்ட பல்நோக்கு வணிகப்பூங்கா கிழக்கில் இலினொய் வழி எண் 59 ஆலும், தெற்கில் சர்வமாநில நெடுஞ்சாலை 90 ஆலும், வடக்கில் இலினொய் வழி எண் 72 ஆலும், மேற்கில் பெவர்லி சாலையாலும் சூழ்ந்துக்கொண்டு இருக்கிறது. 1993, ரோபக் அன்ட் கம்பெனி சிகாகோவில் உள்ள சியர்ஸ் கோபுரத்தில் இருந்து ப்ரேரி ஸ்டோனின் வடமேற்கு பகுதியில் உள்ள ஓரிடத்திற்கு தலைமையத்தை இடமாற்றும் போது, இவ்வணிகப்பூங்க பூர்த்தி செய்யப்பட்டது. இதன் பிறகு, இன்ட்ரமாட் நிறுவனமும் க்வேஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவனமும் இப்பூங்காவில் சேவைகள் தொடங்கின.[4] 1990 கள் முழுவதும், ஒரு உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையமும் குழந்தை பராமரிப்பு மையமும் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும், சிறிய அலுவலகங்களும் வடக்கு இலினொய் பல்கலைக்கழகத்தின் ஓர் கிளையும் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இவ்வணிகப்பூங்கா இன்று வரை வளர்ச்சி நிலையிலே உள்ளது. 2000 களின் அண்மை சேர்க்கைகளில், 11000 இருக்கைகள் கொண்ட சியர்ஸ் மையம், செர்டாவிற்கான அலுவலக கட்டிடங்கள், டபில்யூட்டீ பொறியியல், ஐ-கார், மேரி கே, கபேலாவின் வெளிபுற ஆடையகம், 295 படுக்கறைகள் கொண்ட மேரியாட் தங்கும்விடுதி, மற்றும் 400,000 சதுர அடி (37,000 சதுர மீட்டர்) நிலப்பரப்பான, டார்கெட் மற்றும் பல பிரபல கடைகளால் சூழ்ந்திருக்கும் போப்லார் க்ரீக் க்ராஸிங் அங்காடி, சிலது ஆகும். வருங்காலத்தில், இன்னும் அலுவலக கட்டிடங்கள், வியாபர கட்டிடங்கள், சன் ஐலென்ட் தங்கும்விடுதி மற்றும் நீர்ப்பூங்கா, உணவகங்கள், மற்றும் ஒரு மெட்ரா விண்மீன் சேவை தொடரி மையமும் வருவதாக உள்ளன.

2016 ம் ஆண்டு இலையுதிர்காலத்தின் போது, முன்னாள் குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா பதவியில் இருந்த போது சேகரித்த காகிதங்களும் பொருட்களும் ஊருக்கு வந்து, கால்ஃப் சாலையில் ஒரு கட்டிடத்தில் வைத்திருக்கின்றன. சிகாகோவின் ஜாக்ஸன் பூங்காவில் உள்ள ஒபாமா ஜனாதிபதி நூலகத்தின் கட்டுமானம் தீரும் வரை, அவை இங்கு தற்காலிகமாக வைத்திருக்கின்றன.[5]

நிலம்[தொகு]

ஹாஃப்மன்பாக்கம் 42°3′47″N 88°7′9″W / 42.06306°N 88.11917°W / 42.06306; -88.11917 (42.063173, -88.119256) என்ற ஆள்கூறுகளில் அமைகின்றது.[6]

2010 ன் கணக்கெடுப்பின்படி, ஹாஃப்மன்பாக்கத்தின் 20.981 சதுர மைல் (54.34 சதுர கிலோமீட்டர்) முழு அளவில், 20.8 சதுர மைல் (53.87 சதுர கிலோமீட்டர்) (அல்லது 99.14 விழுக்காடு) நிலமாகவும், 0.181 சதுர மைல் (0.47 சதுர கிலோமீட்டர்) (அல்லது 0.86 விழுக்காடு) நீராகவும் அமைகின்றன.[7]

மக்கட்தொகை[தொகு]

2000 ன் கணக்கெடுப்பின்படி, 

இல்லங்கள்[தொகு]

17,034 இல்லங்களில், ஒரு சராசரி இல்லத்தில் 2.89 நபர்கள் உள்ளனர், மற்றும் சராசரி குடும்ப அளவு 3.39 ஆக உள்ளது. இதில்:

 • 61.9 விழுக்காடு இல்லங்களில் சேர்ந்து வாழ்கின்ற திருமணஞ்செய்த தம்பதிகள் உள்ளனர் (12,724 மொத்த குடும்பங்கள்)
 • 25.3 விழுக்காடு இல்லங்கள் குடும்பங்கள் இல்லாதவை
 • 19.9 விழுக்காடு இல்லங்களில் வெறும் ஒருத்தர் குடியுள்ளார்
 • 9.6 விழுக்காடு இல்லங்களில் பெண் வீட்டுத்தலைவி இருந்து, கனவன் இல்லாதவை
 • 41.3 விழுக்காடு இல்லங்களில் 18 வயதிற்கு இளைய சிறுவர்கள் குடியுள்ளனர்
 • 4.0 விழுக்காடு இல்லங்களில் குறைந்தபட்சம் 65 வயதானவர்கள் தனியாக வாழ்ந்துக்கொண்டுள்ளனர்.

வயது[தொகு]

சராசரி வயது 34 ஆனது. இதில்

 • 33.9 விழுக்காடு 25 வயது முதல் 44 வரை ஆனவர்கள்
 • 28.1 விழுக்காடு 18 வயதிற்கு இளையவர்கள்
 • 22.6 விழுக்காடு 45 முதல் 64 வயது வரை ஆனவர்கள்
 • 8.7 விழுக்காடு 18 முதல் 24 வயது வரை ஆனவர்கள்
 • 6.7% விழுக்காடு 65 வயதிற்கு மூத்தவர்கள்

ஒவ்வொரு 100 பெண்களுக்கு 99.2 ஆண்கள் இருந்தனர். 18 வயதிற்கு மூத்த ஒவ்வொரு 100 பெண்களுக்கு 96.7 ஆண்கள் இருந்தனர். 

இனம்[தொகு]

புறநகரின் இனப்பெருக்கத் தொகையின்படி:[8]

 • 56.6 விழுக்காடு ஹிஸ்பானிக் அல்லது லாட்டீனோ இல்லாத காக்கேசிய இனத்தினர்
 • 22.7 விழுக்காடு ஆசிய அமெரிக்கர்கள்
 • 14.10 விழுக்காடு அனைத்தினங்களைச் சேர்ந்த ஹிஸ்பானிக் அல்லது லாட்டீனோக்கள்
 • 4.8 விழுக்காடு ஆபிரிக்க அமெரிக்கர்கள்
 • 3.75 விழுக்காடு இதர இனத்தினர்
 • 2.6 விழுக்காடு 2 அல்லது 2 க்கும் மேல் இனத்தினர்
 • 0.17 விழுக்காடு [[அமெரிக்க முதற்குடிமக்கள்]]
 • 0.02 விழுக்காடு பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்கள்

பொருளாதாரம்[தொகு]

சராசரி வருமானம்[தொகு]

2009 முதல் 2013 வரை, புறநகரின் சாதாரண இல்லத்தின் சராசரி வருமானம் 150,793 டாலர்கள் மதிப்பாக இருந்தது.

 • ஆண்களின் சராசரி வருமானம் 80,696 டாலர்களாகவும், பெண்களின் சராசரி வருமானம் 63,542 டாலர்களாகவும் இருந்தன.
 • புறநகரின் தனிநபர் வருமானம் 54,538 டாலர்கள் மதிப்பாக இருந்தது.
 • கிட்டத்தட்ட 5.5 விழுக்காடு நபர்கள் வறுமைக் கோடிற்கு கீழ் இருந்தனர்.

நிறுவனங்கள்[தொகு]

2011 ன் கணக்கெடுப்பின்படி, ஆம்கோலின் மற்றும் பல சப்பானிய நிறுவனங்களின் தலைமையங்கள் ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் அல்லது ஷாம்பர்கில் உள்ளன[9] ஆனால் ஹாஃப்மன் எஸ்டேட்ஸின் மிகப்பெரிய நிறுவனங்கள்:[சான்று தேவை]

 • சியர்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமையம் ஹாஃப்மன் எஸ்டேட்ஸில் உள்ளது.[10] (5,700 ஊழியர்கள்)
 • ஏடீஎன்டீ (4,700)
 • புனித அலெக்ஸியஸ் மருத்துவமனை, 339 படுக்கைகள் கொண்ட மண்டல மருத்துவமனை[11] (2,121)
 • ஜீஈ காப்பிட்டல் (800)
 • கரியர் எட்யூக்கேஷன் நிறுவனத்தின் தலைமையம் ஹாஃப்மன் எஸ்டேட்ஸில் உள்ளது (650)
 • ஏடீபீ (600)
 • சீமென்ஸ் மெடிக்கல் சொல்யூஷன்ஸ் (500)
 • லெபர்டோ (400)
 • லிபர்ட்டி மியூச்சுவல் (400)
 • க்லேர்ஸின் பெறுதல், வினியோகம், மற்றும் விளம்பரப்படுத்தல் அலுவலகங்கள் ஹாஃப்மன் எஸ்டேட்ஸில் உள்ளன.[12] (350)
 • போஷ் ரெக்ஸ்ராத் (160)
 • மோரீ செய்க்கியின் அமெரிக்க தலைமையம், ஹாஃப்மன் எஸ்டேட்ஸில் உள்ள சிகாகோ தொழில்நுட்ப மையத்தில் உள்ளது.[13] நவம்பர் 2009 ல், தற்பொழுதைய அமெரிக்க தலைமையம் ஒரு நான்கு நாட்கள் நீட்டி, 2200 வருகையாளர்கள் கொண்ட மாநாட்டின் போது திறந்துவிட்டது.[14] (100)
 • ஃபானூக் (100).[15]

கல்வி[தொகு]

இப்புறநகரில் பல பொதுப்பள்ளி அமைப்புகள் உள்ளன. ஷாம்பர்க் டவுன்ஷிப்பில் குடியிருக்கும் பெரும்பாலானவர்கள் இப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்:

 • டவுன்ஷிப் உயர்நிலைப்பள்ளி மாவட்டம் 211
  [16]
 • பள்ளி மாவட்டம் 54 (மழலைப்பள்ளி முதல் 8 ம் வகுப்பு வரை)[17]

வட ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் வாசிகள் (ஐ-90 நெடுஞ்சாலைக்கு வடக்கிலுள்ளவர்கள்) இப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்:

 • டவுன்ஷிப் உயர்நிலைப்பள்ளி மாவட்டம் 211
 • சமூக ஒருங்கிணைப்பு பள்ளி மாவட்டம் (மழலைப்பள்ளி முதல் 8 ம் வகுப்பு வரை)[18] (ஹண்டிங்டன் புலவார்டுக்கு மேற்கில் உள்ளவர்கள்)
 • பாரிங்டன் பள்ளி மாவட்டம் (மழலைப்பள்ளி முதல் 8 ம் வகுப்பு வரை) (யூனிட் மாவட்டம்) (ஹண்டிங்டன் புலவார்டுக்கு மேற்கில் உள்ளவர்கள்).[19]

பாரிங்டன் சாலைக்கு மேற்கில் குடியிருக்கும் பெரும்பாலானவர்கள் யூனித் பள்ளி மாவட்டம், எல்ஜின் யூ46 பகுதியைச் சேர்ந்தவர்கள்.

உயர்நிலைப்பள்ளிகள்[தொகு]

ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் எல்லைக்குள் இருக்கும் பள்ளிகள்:

 • ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் உயர்நிலைப்பள்ளி
 • ஜேம்ஸ் பீ. கோனண்ட் உயர்நிலைப்பள்ளி

அதே டவுன்ஷிப் உயர்நிலைப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இதர உயர்நிலைப்பள்ளிகள்:

 • பாரிங்டன் உயர்நிலைப்பள்ளி
 • ஷாம்பர்க் உயர்நிலைப்பள்ளி
 • எல்ஜின் உயர்நிலைப்பள்ளி
 • வில்லியம் ஃப்ரெம்ட் உயர்நிலைப்பள்ளி

உள்ளூர் கல்லூரிகள்[தொகு]

பெரும்பாலான ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் வாசிகள் ஹார்பர் சமூக கல்லூரி மாவட்டம் 512 க்குட்பட்டவர்கள்.

இதர கல்வி[தொகு]

ஷீலின் வடமேற்கு சீனமொழிப் பள்ளி (எளியவழி: 希林西北中文学校, பாரம்பரியவழி: 希林西北中文學校, பீன்யீன்: Xīlín Xīběi Zhōngwén Xuéxiào) தங்களது வகுப்புகளை ஹாஃப்மன் எஸ்டேட்ஸின் கோனண்ட் உயர்நிலைப்பள்ளியில் நடத்துகின்றது.[20] மழலைப்பள்ளி முதல் 12 ம் வகுப்பு வரையான மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.[21] இப்பள்ளி பெரும்பாலாக தலைநில சீன குடிமக்களுக்கானது. 2003 ல், இப்பள்ளி தங்களது வகுப்புகளை பாலட்டைனின் பாலட்டைன் உயர்நிலைப்பள்ளியில் நடத்தினது. 2000 ல், இப்பள்ளி சுமார் 300 மாணவர்களுக்கு பாடம் நடத்தினது. இது, கிட்டத்தட்ட 100 விழுக்காடு மடங்கால் அதிகரித்து, 600 மாணவர்கள் ஆனது. ஆகவே, இது சிகாகோலாந்தின் மிக பெரிய சீனமொழி பள்ளிகளில் ஒன்றாகும்.[22]

நூலகம்[தொகு]

சகோதரி நகரம்[தொகு]

ஹாஃப்மன் எஸ்டேட்ஸ் ஓர் சகோதரி நகரம் கொண்டது:[23]

 • Flag of France.svg - ஆங்கோலேம், ஷாரேண்ட், னோவெல்-அக்விட்டேன், பிரான்சு

குறிப்புகள்[தொகு]

 1. "2016 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்த்த நாள் Jun 29, 2017.
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; USCensusEst2016 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. "The Sunderlage Smokehouse: Hoffman Eestates’ National Register Landmark" (February 21, 2010).
 4. "Village of Hoffman Estates: History of Hoffman Estates". Hoffmanestates.com. மூல முகவரியிலிருந்து 2012-05-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-30.
 5. Skiba, Katherine (October 21, 2016). "Military Soon to Start Moving Obama's Papers to Hoffman Estates". Chicago Tribune (Washington DC). http://www.chicagotribune.com/news/obamalibrary/ct-obama-papers-to-hoffman-estates-met-20161020-story.html. பார்த்த நாள்: March 3, 2017. 
 6. "US Gazetteer files: 2010, 2000, and 1990". United States Census Bureau (2011-02-12). பார்த்த நாள் 2011-04-23.
 7. "G001 - Geographic Identifiers - 2010 Census Summary File 1". United States Census Bureau. பார்த்த நாள் 2015-08-03.
 8. "Hoffman Estates (village) QuickFacts". U.S. Census Bureau (December 2, 2015). மூல முகவரியிலிருந்து December 8, 2015 அன்று பரணிடப்பட்டது.
 9. Selvam, Ashok. "Asian population booming in suburbs." Daily Herald (Arlington Heights, Illinois). March 6, 2011. Retrieved on June 19, 2013.
 10. "Contact Us." Sears Holdings Corporation. Retrieved on June 19, 2013. "3333 Beverly Road Hoffman Estates, IL 60179 "
 11. http://www.alexianbrothershealth.org/stalexius
 12. "FAQ பரணிடப்பட்டது 2014-07-13 at the வந்தவழி இயந்திரம்." Claire's. Retrieved on December 25, 2011. "Claire’s Stores, Inc. has its investor relations and customer service located in Pembroke Pines , Florida . The buying, marketing and distribution offices are located in Hoffman Estates, a suburb of Chicago . Please visit Contact Us if you would like to send correspondence to our corporate headquarters."
 13. "Headquarters பரணிடப்பட்டது 2012-09-16 at the வந்தவழி இயந்திரம்." DG Mori Seiki USA. Retrieved on June 19, 2013. "2400 Huntington Boulevard Hoffman Estates, IL 60192"
 14. AM Staff. "Mori Seiki Unveils New U.S. Headquarters." American Machinist. November 15, 2009. Retrieved on June 19, 2013.
 15. "Village of Hoffman Estates Top Employers". Hoffmanestates.org (2012-03-21). மூல முகவரியிலிருந்து 2012-04-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-30.
 16. "d211.org". d211.org. பார்த்த நாள் 2012-04-30.
 17. "sd54.k12.il.us". sd54.k12.il.us (2012-04-19). மூல முகவரியிலிருந்து 1998-02-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-30.
 18. "ccsd15.net". ccsd15.net. பார்த்த நாள் 2012-04-30.
 19. "cusd220.lake.k12.il.us". cusd220.lake.k12.il.us. மூல முகவரியிலிருந்து 2006-07-03 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-30.
 20. "School Location." Northwest Xilin Chinese School. Retrieved on February 24, 2014. "School Address 700 East Cougar Trail,Hoffman Estates,IL 60194 Located at Conant High School campus."
 21. "About Us." Northwest Xilin Chinese School. Retrieved on February 24, 2014.
 22. Ray, Tiffany. "Schools connect students to China." Chicago Tribune. March 2, 2003. Retrieved on February 24, 2014.
 23. http://www.sister-cities.org/interactive-map/Hoffman%20Estates,%20Illinois

இதர இணைப்புகள்[தொகு]