ஹவுரா அசிம்கஞ்ச் சந்திப்பு கவி குரு விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவுரா-அசிம்கஞ்ச் சந்திப்பு கவி குரு விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுத் தொடருந்து, கவி குரு விரைவுவண்டி
முதல் சேவை1 மே 2011 [1]
நடத்துனர்(கள்)கிழக்கத்திய இரயில்வே
வழி
தொடக்கம்ஹவுரா (HWH)
இடைநிறுத்தங்கள்9
முடிவுஅசிம்கஞ்ச் சந்திப்பு (AZ)
ஓடும் தூரம்278 km (173 mi)
சராசரி பயண நேரம்5 மணி 40 நிமிடங்கள் 13027,
6 மணி 05 நிமிடங்கள் 13028.
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்13027 / 13028
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)இநுக்கைப் பெட்டி, தூங்கும் வசதிகொண்ட பெட்டி, பொது முன்பதிவில்லா பெட்டி
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்E-catering
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஐ. சி. எப். பெட்டிகள்
பாதை1,676 mm (5 ft 6 in)
வேகம்110 km/h (68 mph) அதிகபட்சம்,
49 km/h (30 mph) நிறுத்தங்களுடன்

13027/13028 ஹவுரா-அசிம்கஞ்ச் சந்திப்பு கவி குரு விரைவுவண்டி என்பது இந்திய இரயில்வேயின் கிழக்கு இரயில்வே மண்டலத்திற்குட்பட்ட கவி குரு விரைவுவண்டி தொடரின் [2] ஒரு தொடருந்தாகும். இது இந்தியாவில் ஹவுரா சந்திப்பிலிருந்து அசிம்கஞ்ச் இடையே இயங்குகிறது.

இது ஹவுரா சந்திப்பிலிருந்து அசிம்கஞ்ச் சந்திப்பு வரை தொடருந்து எண் 13027 ஆகவும், எதிர்த் திசையில் தொடருந்து எண் 13028 ஆகவும் மேற்கு வங்காள மாநிலத்திற்குச் சேவை செய்கிறது.

இரயில் பெட்டிகள்[தொகு]

13027/13028 ஹவுரா-அசிம்கஞ்ச் சந்திப்பு கவி குரு விரைவு வண்டியில் 3 இரண்டாம் வகுப்பு இருக்கைப் பெட்டி, 7 தூங்கும் வசதிகொண்ட பெட்டிகள், 7 பொது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் & 2 (இருக்கையுடன் கூடிய சரக்குப் பெட்டி) பெட்டிகள் உள்ளன. இது ஒரு உணவு தயாரிக்கும் பெட்டியுடன் பயணிக்கிறது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரயில் சேவைகளின் வழக்கம் போல், தேவைக்கேற்ப இந்திய ரயில்வேவின் விருப்பப்படி ரயில் பெட்டி அமைப்பு திருத்தப்படலாம்.

சேவை[தொகு]

13027 ஹவுரா-அசிம்கஞ்ச் சந்திப்பு கவி குரு விரைவுவண்டி 278 km (173 mi) தூரம் பயணிக்கிறது. இத்தூரத்தினை 5 மணி 40 நிமிடங்களில் கடக்கின்றது. இதே வண்டி 6 மணி 05 நிமிடங்களில் 13028 அஜிம்கஞ்ச் சந்திப்பு-ஹவுரா தூரத்தினைக் கடக்கின்றது.

இந்த தொடருந்தின் சராசரி வேகம் 55 km/h (34 mph)க்கும் குறைவாகவே உள்ளது. இந்தியத் தொடருந்து விதிகளின்படி, இதன் கட்டணத்தில் அதிவிரைவு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

வழித்தடம்[தொகு]

13027/13028 ஹவுரா-அசிம்கஞ்ச் சந்திப்பு கவி குரு விரைவுவண்டி ஹவுராவிலிருந்து பாந்தேல் சந்திப்பு-வர்த்தமான சந்திப்பு, போல்பூர் சாந்திநிகேதன், சைனிதியா சந்திப்பு, ராம்புர்காத் சந்திப்பு, நல்ஹத்தி சந்திப்பு, மோர்கிராம், சாகர்டிகிலிருந்து அசிம்கஞ்ச் சந்திப்பு வரை செல்கிறது.

இழுவை[தொகு]

இந்த தொடருந்து வழித்தடத்தின் பகுதி மின் மயமாக்கப்பட்டதால், ஹவுராவை அடிப்படையாகக் கொண்ட டபுள்யூ ஏ பி-7 / டபுள்யூ ஏ பி-5 / டபுள்யூ ஏ பி-4 இயந்திரம் இதன் முழுப் பயணத்திற்கும் இழுத்துச் செல்கிறது.

இயக்கத்தில்[தொகு]

  • 13027 ஹவுரா-அசிம்கஞ்ச் சந்திப்பு கவி குரு விரைவுவண்டி, தினசரி அடிப்படையில் ஹவுரா சந்திப்பிலிருந்து அடுத்த நாள் அசிம்கஞ்ச் சந்திப்பைச் சென்றடைகிறது.
  • 13028 அசிம்கஞ்ச் சந்திப்பு-ஹவுரா கவி குரு விரைவுவண்டி தினசரி அடிப்படையில் அசிம்கஞ்ச் சந்திப்பிலிருந்து அதே நாளில் ஹவுரா சந்திப்பைச் சென்றடைகிறது.

சர்ச்சை[தொகு]

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், ஆய்வு செய்யப்பட்ட ரயில்களில் இந்த இரயிலும் ஒன்றாகும்.[3] .

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Welcome to Indian Railway Passenger reservation Enquiry". indianrail.gov.in. Archived from the original on 8 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-05.
  • "[IRFCA] Welcome to IRFCA.org, the home of IRFCA on the internet". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2014-04-05.