ஹல்டியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
தோற்றம்
ஹல்டியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Haldia Refinery), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹல்டியா எனும் ஊரில் அமைந்த பாறை எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலை ஆகும். இவ்வாலை பாறை எண்ணெய்யிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியன் டன் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, கற்கரி, நெய்தை, வானூர்தி எரிபொருள், செயற்கை உரங்கள் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது[1] இவ்வாலை 1975 ஆண்டில் நிறுவப்பட்டது.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Refining | IndianOil Refining". iocl.com. Retrieved 2023-01-08.
- ↑ "Haldia Refinery | Petroleum Refinery | IndianOil". iocl.com. Retrieved 2023-10-19.