ஹலோ ட்ரஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அப்காசியா சுரங்கங்க பிரதேசத்தில் சோதனையின் பிறகு ஹலோ அறக்கட்டளையால் நிறுவப்படும் கல்.

ஹலோ ட்ரஸ்ட் (HALO Trust) பிரித்தானியத் தொண்டு அமைப்பாகும். இது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கல்லாத போரினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். ஹலோ என்னும் சொல் ஆங்கிலத்தில் (HALO - Hazardous Area Life-Support Organisation) என்பதில் இருந்து வந்ததாகும்.

ஹலோ ட்ரஸ்ட் அமைப்பானது 9 நாடுகளில் 7, 000 -க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்கின்றனர். ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் மிகப்பெரும் பணியானது ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்றது.

இந்த அமைப்பானது மறைந்த கொலின் காம்பெல் மிச்சினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இவர் முன்னைநாள் பிரித்தானியப் படை கேணல் தர அதிகாரியும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_ட்ரஸ்ட்&oldid=1548933" இருந்து மீள்விக்கப்பட்டது