ஹற்றன் தேசிய வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹற்றன் தேசிய வங்கிங்கி
Hatton National Bank
வகைபொது
நிறுவுகை1888[1]
தலைமையகம்கொழும்பு, இலங்கை இலங்கையின் கொடி
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
தொழில்துறைநிதி
உற்பத்திகள்வங்கி மற்றும் நிதி தொடர்பான சேவைகள்.
இணையத்தளம்உத்தியோகபூர்வ வலைத்தளம்

ஹற்றன் தேசிய வங்கி (Hatton National Bank) இலங்கையில் உள்ள முன்னணி வங்கிகளுள் ஒன்று. இதற்கு சென்னையிலும் கராச்சியிலும் விரிவாக்கப்பட்ட கிளைகள் உள்ளன.[1]

வரலாறு[தொகு]

 • 1888 : R .D பேங்க் மற்றும் A.T அட்கின் என்பவரும் சேர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சிறிய தனியார் வங்கி ஒன்றை ஆரம்பித்தனர். அது ஹற்றன் வங்கி என அழைக்கப்பட்டது.
 • 1948 : இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்ட பின்பு பிரவுன் அண்ட் கம்பெனியின் பொறியியல் பிரிவு முதல் சொந்த முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தில் கவனமெடுத்துக்கொண்டது.
 • 1961: இலங்கை அரசாங்கம் சில இலங்கை பிரஜைகளிடமிருந்து வெளிநாட்டு வங்கிகள் முதலீடுகளை ஏற்றுகொள்கிறது.
 • 1970: கண்டியில் உள்ள ஹற்றன் வங்கி நுவரேலியாவில் க்ரிண்ட்லிஸ் கிளைகளை ஒன்றிணைத்து, பொறுப்பில் எடுத்து ஹற்றன் நேஷனல் வங்கி (HNB) உருவாக்கப்பட்டது.
 • 1974: கொழும்பிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள இந்திய வர்த்தக வங்கியின் கிளைகளின் உரிமையை பெற்றுக்கொண்டு வர்த்தகத்தில் முனைப்பு காட்டியது.
 • 1989: எமிரேட்ஸ் சர்வதேச வங்கியின் கொழும்பு கிளையின் வெளிநாட்டு வங்கிப்பிரிவை முயன்று பெற்றுக்கொண்டது.
 • 1996: Banque Indosuez இன் கிளையை பெற்றுக்கொண்டது.
 • 2000: பாகிஸ்தானின் கராச்சியிலும் இந்தியாவின் சென்னையிலும் தனது காரியாலயத்தை பிரதிநிதிப்படுத்தும் கிளையை ஆரம்பித்தது.
 • 2002 : ஹபீப் வங்கியின் (சூரிச்) இலங்கை கிளையை முயன்று பெற்றுக்கொண்டது. இது இஸ்லாமிய வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்காக அடித்தளமாக பாவிக்கப்படுகிறது.

விருதுகள்[தொகு]

 • 2008 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் உயர்வான சில்லறை நிதிய சேவைகளுக்கான விருது.
 • ஹற்றன் நேஷனல் வங்கி 2008 இன் சிறந்த உள்ளூர் வங்கிக்கான விருதை வென்றுள்ளது.

சான்று மூலம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹற்றன்_தேசிய_வங்கி&oldid=1580976" இருந்து மீள்விக்கப்பட்டது