ஹர்ஷதீப் கவுர்
ஹர்ஷதீப் கவுர் | |
---|---|
பிறப்பு | 16 திசம்பர் 1986 (அகவை 36) தில்லி |
பணி | பின்னணிப் பாடகர் |
ஹர்ஷதீப் கவுர் (Harshdeep Kaur) (பிறப்பு: டிசம்பர் 16, 1986), என்பவர், பாலிவுட் இந்தி, பஞ்சாபி மற்றும் சூஃபி பாடல்களுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய பாடகி ஆவார். இவரது ஆத்மார்த்தமான சூஃபி விளக்கக்காட்சிகளால் இவர் "சூஃபி கி சுல்தானா" என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[1] இரண்டு நேரலை நிகழ்ச்சிகளில் பட்டங்களை வென்ற பிறகு, கவுர் பாலிவுட் ஒலிப்பதிவுகளில் ஒரு முன்னணி பாடகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தனது முதல் பாலிவுட் பாடலான "சஜ்னா மை ஹாரி" வெளியிட்டபோது கவுருக்கு வயது பதினாறு ஆகும்.
கவுர் இந்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் திரைப்பட இசைக்கான பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் இந்திய சினிமாவின் முன்னணி பின்னணிப் பாடகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர், ஏ.ஆர்.ரஹ்மான், பிரிதம் சக்ரவர்த்தி, விஷால்-சேகர், சலீம் சுலைமான், சங்கர் எஹ்சன் லோய், அமித் திரிவேதி, சாந்தனு மொய்த்ரா, தனிஷ்க் பச்சி, ஹிமேஷ் ரேஷம்மியா, சஞ்சய் லீலா பன்சாலி, சோஹைல் சென் உட்பட பல முன்னணி இசை இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.
ஒரு ஹாலிவுட் படத்திற்காக பாடிய மிகச் சில இந்திய பாடகர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் பாடிய ஆர்.ஐ.பி. எனப்படும் ஒலிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் டேனி பாயலின் 127 ஹவர்ஸ் திரைப்படத்தின் ஒரு பகுதியாகும்.[2] இவர் பாகிஸ்தான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறைக்காக, சில பாடல்களையும் பாடியுள்ளார்.
இவரது பிரபலமான சில பாடல்களில் ராக்ஸ்டாரைச் சேர்ந்த கட்டியா கருண் ; ராசியிலிருந்து தில்பரோ; ஜப் தக் ஹை ஜானிலிருந்து ஹீர் ; ரங் தே பசாந்தியைச் சேர்ந்த இக் ஓங்கர் ; ரெய்ஸைச் சேர்ந்த ஜாலிமா ; பார் பார் தேகோவைச் சேர்ந்த நாச்ச்டே நே சாரே ; பேண்ட் பாஜா பராத்தைச் சேர்ந்த பாரி பார்சி; யே ஜவானி ஹை தீவானியைச் சேர்ந்த கபிரா; காக்டெயிலிலிருந்து ஜுக்னி ஜி ; மற்றும் பரேலி கி பார்பியிலிருந்து ட்விஸ்ட் கமரியா போன்ற பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். .[3]
2019 ஆம் ஆண்டில், ராசி திரைப்படத்தின் தில்பரோ பாடலுக்கான 20 வது ஐஃபா விருதுகளில் கவுர் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான ஐஃபா விருதைப் பெற்றார்.[4]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
கவுர் டிசம்பர் 16, 1986 அன்று டெல்லியில் சவீந்தர் சிங்குக்கு பிறந்தார்.[5][6] அவர் ஒரு இசை பின்னணியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சவீந்தர் சிங், இசைக்கருவிகள் கொண்ட ஒரு தொழிற்சாலை வைத்திருக்கிறார். இவர் புதுதில்லியில் உள்ள நியூ எரா பப்ளிக் பள்ளியில் பயின்றார். படிப்பதைத் தவிர, தனது ஆறாவது வயதில் இசை கற்கத் தொடங்கினார். சிங் பிரதர்ஸ் என்று பிரபலமாக அறியப்பட்ட திரு. தேஜ்பால் சிங்கிடமிருந்து இந்திய பாரம்பரிய இசையையும், தில்லி இசை அரங்கின் ஜார்ஜ் புல்லின்கலாவிடமிருந்து மேற்கத்திய இசையையும் கற்றுக்கொண்டார். பின்னர், தனது பன்னிரெண்டாவது வயதில், இசை உலகத்தை ஆராய, பியானோ கற்க டெல்லி ஸ்கூல் ஆஃப் மியூசிக் நிறுவனத்தில் சேர்ந்தார்.
தொழில்[தொகு]
ஸ்டார் பிளஸில் "தி வாய்ஸில்" "பயிற்சியாளராக" ஹர்ஷ்தீப் கவுர்[தொகு]
ஹர்ஷதீப் கவுர் ஸ்டார்ப்ளஸின் பாடும் நேரலை நிகழ்ச்சியான, "தி வாய்ஸில்" ஒரு "பயிற்சியாளர்" ஆனார். அவருடன் அட்னான் சாமி, கனிகா கபூர் மற்றும் அர்மான் மாலிக் ஆகியோர் மற்ற பயிற்சியாளர்களாகவும், "சூப்பர் குரு" ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளனர்.[7]
சூஃபி கி சுல்தானா[தொகு]
செப்டம்பர் 2008 இல் என்.டி.டி.வி இமேஜினில் ஜூனூன் - குச் கார் திகானே கா பாடும் போட்டியில் கவுர் வென்றார். அவர் சூஃபி கி சுல்தான் வகையிலிருந்து உஸ்தாத் ரஹத் ஃபதே அலி கானுடன் தனது வழிகாட்டியாகப் போட்டியிட்டார்.[8] இறுதிச் சுற்றில், முதன்மை விருந்தினராக இருந்த அமிதாப் பச்சன் இவரை சூஃபி கி சுல்தானாவாக அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சி சூஃபி, நாட்டுப்புற மற்றும் பாலிவுட் பாடல்கள் ஆகிய மூன்று வகைகளிடையே ஒரு போட்டியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர்கள் பங்கேற்றனர். கவுர் ஒரு தனித்துவமான சூஃபி உடையை அணிந்திருந்தார், குறிப்பாக சூஃபி பாடல்களை நிகழ்த்தும்போது, அது இவரது அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
கவுர் தனது குழந்தை பருவ நண்பர் மங்கீத் சிங்கை மும்பையில், மார்ச் 20, 2015 அன்று ஒரு பாரம்பரிய சீக்கிய திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார்.[9]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Harshdeep Kaur on timesofindia". http://m.timesofindia.com/topic/Harshdeep-Kaur. பார்த்த நாள்: 15 March 2017.
- ↑ "My musical journey has been really beautiful: Harshdeep Kaur". 26 April 2018. https://www.governancenow.com/views/interview/my-musical-journey-has-been-really-beautiful-harshdeep-kaur.
- ↑ Roy, Dhaval (20 November 2017). "Harshdeep Kaur to sing at Farhan Akhtar's concert". https://www.dnaindia.com/bollywood/report-harshdeep-kaur-to-sing-at-farhan-akhtar-s-concert-2561110.
- ↑ =ANI (19 September 2019). "IIFA 2019: Alia Bhatt-starrer 'Raazi' wins big; Ranveer Singh named Best Actor for 'Padmaavat'" இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191012133106/https://economictimes.indiatimes.com/magazines/panache/iifa-2019-alia-bhatt-starrer-raazi-wins-big-ranveer-singh-named-best-actor-for-padmaavat/videoshow/71197369.cms.
- ↑ "Happy birthday Harshdeep Kaur: The young singer who adds a Sufi twist to Bollywood songs". 16 December 2017. https://indianexpress.com/article/entertainment/bollywood/harshdeep-kaur-bollywood-songs-4985068/.
- ↑ World, Republic. "Harshdeep Kaur: Everything you need to know about the Sufi singer". https://www.republicworld.com/entertainment-news/television-news/harshdeep-kaur-everything-you-need-to-know-about-the-sufi-singer.
- ↑ Team, Tellychakkar. "A R Rahman and Harshdeep Kaur reunite for The Voice". http://www.tellychakkar.com/tv/tv-news/r-rahman-and-harshdeep-kaur-reunite-the-voice-190121.
- ↑ "Junoon made me a face". Rediff.com. https://www.rediff.com/movies/2008/sep/29winner.htm.
- ↑ "Harshdeep Kaur marries her best friend". 22 March 2015. https://indianexpress.com/article/entertainment/music/harshdeep-kaur-marries-her-best-friend/.