உள்ளடக்கத்துக்குச் செல்

ஹர்பஜன் சிங் ரிஸ்ஸாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்பஜன் சிங் ரிஸ்ஸாம்
பிறப்பு10 ஆகஸ்ட் 1951
ஜம்மு, ஜம்மு காஷ்மீர், இந்தியா
இறப்பு10 ஆகஸ்ட் 1951 ,வயது 62
ஜம்மு, இந்தியா
கல்லறைசாஸ்திரி நகர் தகன மேடை, ஜம்மு, ஜம்மு காஷ்மீர்
32°41′22″N 74°51′11″E / 32.68944°N 74.85306°E / 32.68944; 74.85306
பணிஇதய சிகிச்சை நிபுணர்
எழுத்தாளர்
அறியப்படுவதுஇதயவியல்
மருத்துவப் புனைகதை
பெற்றோர்ரஞ்சித் கவுர்
வாழ்க்கைத்
துணை
பால்பிர் கவுர் ரிஸ்ஸாம்
விருதுகள்பத்மஸ்ரீ

ஹர்பஜன் சிங் ரிஸ்ஸாம் (10 ஆகஸ்ட் 1951 – 17 அக்டோபர் 2013) ஒர் இந்திய தலையீட்டு இருதயநோய் நிபுணர், கொடையாளர் [1] ,எழுத்தாளர் ஆவார். இவர் தனது மருத்துவ சேவைக்காகவும், மருத்துவத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட நாவலுக்காகவும் அறியப்படுகிறார்.[2] இவர் டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேரில் இருதய மருத்துவ சேவைகளின் இயக்குநராக இருந்தார். இவரது முதல் நாவலான 'தி ஸ்கால்பெல் - கேம் பினீத்',[3] 2010-ல் வெளியிடப்பட்ட முன்மொழியப்பட்ட முத்தொகுப்பின் முதல் புத்தகம் ஆகும். இது மருந்து மாஃபியாவைப் பற்றிய ஒர் மருத்துவத் திரில்லர் ஆகும்.[4] மருத்துவ அறிவியலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு இவருக்கு 2006-ல் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.[5]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1951-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ஒர் காஷ்மீரி சீக்கியக் குடும்பத்தில் பிறந்த ஹர்பஜன் சிங் ரிஸ்ஸாம்,[6] தனது ஆரம்பக் கல்வியை ஜம்முவில் உள்ள சென்ட்ரல் பேசிக் பள்ளியில் பயின்றார்; பின்னர் அரசு காந்தி நினைவு அறிவியல் கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார்.[7] பூஞ்ச் பகுதியிலிருந்து இவரது குடும்பத்தினர் வெளியேறியபோது, ​​அவரும் அவர்களுடன் பஞ்சாபிற்குச் சென்றார். அங்குள்ள அமிர்தசரஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கத்துடன் மருத்துவப் பட்டத்தைப் பெற்ற இவர், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி , ஆராய்ச்சி நிறுவனத்தில் இதயவியல் துறையில் எம்.டி. பட்டத்தையும் நிறைவு செய்தார்.[8] அரசு காந்தி நினைவு அறிவியல் கல்லூரியில் தனது பணியைத் தொடங்கிய இவர், சவுதி அரேபியாவில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பினார்.[9] பின்னர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 'இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்'ஆகப் பணியில் சேர்ந்தார்; அதன்பிறகு டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இதய மருத்துவச் சேவைகளின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். இடைப்பட்ட காலத்தில், ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் , ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் , புது தில்லியில் உள்ள பத்ரா மருத்துவமனை ஆகியவற்றிலும் இவர் பணியாற்றினார். பல்வேறு தேசிய , சர்வதேச இதழ்களில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவக் கட்டுரைகளை வெளியிட்ட இவர், மருத்துவ மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்; இதில் நவம்பர் 2010-இல் நேபாள இதயவியல் சங்கம் நடத்திய 'இமயமலைப் பகுதியில் இதய நோயை வெல்வது'[10] குறித்த மாநாடும் அடங்கும். இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான உயரிய அமைப்பான 'இந்திய மருத்துவக் கவுன்சிலின்' ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார்.[11][12] மத்திய சுகாதார அமைச்சகத்தால் இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆளுநர்கள் குழு மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, [13]2011-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி இவர் அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[14]மேலும், இவர் ஆசிய பசிபிக் வாஸ்குலர் சொசைட்டி கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆகியவற்றிலும் உறுப்பினராக இருந்தார்.[15]

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • மருத்துவச் சுற்றுலா
  • ராபின் குக் (அமெரிக்க நாவலாசிரியர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Two great doctors". Greater Kashmir. 27 August 2015. Retrieved 23 August 2016.
  2. "Bigger the hospital, the more the corruption". Indian Express. 6 January 2012. Archived from the original on 26 August 2016. Retrieved 23 August 2016.
  3. H. S. Rissam (2010). The Scalpel: Game Beneath. Rupa & Company. ISBN 978-81-291-1602-4.
  4. "Written by heart". Hindustan Times. 23 May 2010. Retrieved 23 August 2016.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2013. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 20 August 2016.
  6. Vaishali Tanwar (2016). "A Doctor with Scalpel and Pen". Uday India. Archived from the original on 18 February 2017. Retrieved 23 August 2016.
  7. "Dr HS Rissam passes away". Kashmir Times. 17 October 2013. Archived from the original on 2 June 2021. Retrieved 23 August 2016.
  8. Kushwant Singh (8 May 2010). "Zafar and the Mutiny". Sunday Extra feature. The Tribune. Retrieved 23 August 2016.
  9. Aparna Banerji (10 March 2013). "Medical field and the art of veiled whistle blowing". JallandharTribune. Retrieved 24 August 2016.
  10. Abhilasha Subba (16 November 2010). "Harbhajan Singh Rissam Dr. Scalpel Wields His Pen". The Himalayan. Retrieved 23 August 2016.
  11. Express News Service (9 July 2011). "Take heart from Mediterranean diet, wine". Indian Express. Retrieved 23 August 2016.
  12. "Special meeting of ethics committee" (PDF). Medical Council of India. 18 October 2013. Archived from the original (PDF) on 20 May 2016. Retrieved 23 August 2016.
  13. "Dr K K Talwar appointed new chairman of MCI Board of Governors | India Medical Times". Archived from the original on 23 March 2019. Retrieved 19 November 2016.
  14. "APVIC Feedback". Asia Pacific Vascular Society. 2016. Retrieved 23 August 2016.
  15. K. Sarat Chandra (December 2013). "Obituary". Indian Heart Journal 65 (6): 702. doi:10.1016/j.ihj.2013.12.001.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்பஜன்_சிங்_ரிஸ்ஸாம்&oldid=4625444" இலிருந்து மீள்விக்கப்பட்டது