ஹர்னாஷ் சந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்னாஷ் சந்து
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புஹர்னாஷ் கவுர் சந்து
3 மார்ச்சு 2000 (2000-03-03) (அகவை 24)
சண்டிகர், இந்தியா
தொழில்
 • நடிகை
 • வடிவழகி
உயரம்1.76 m (5 அடி 9+12 அங்)
தலைமுடி வண்ணம்கருப்பு
விழிமணி வண்ணம்பழுப்பு
பட்ட(ம்)ங்கள்பெமினா இந்தியா பஞ்சாப் அழகி 2019
திவா பிரபஞ்ச அழகி 2021
பிரபஞ்ச அழகி 2021
Major
competition(s)
பெமினா இந்திய அழகி 2019
(முதல் 12 இடங்களுக்குள்)
திவா பிரபஞ்ச அழகி 2021
(வாகையாளர்)
பிரபஞ்ச அழகி 2021
(வாகையாளர்)

ஹர்னாஸ் சந்து (Harnaaz Sandhu) (பிறப்பு 3 மார்ச் 2000) ஒரு இந்திய விளம்பரத்தாரகை மற்றும் அழகுப் போட்டியின் வாகையாளர் ஆவார். இவர் பிரபஞ்ச அழகி 2021 பட்டம் வென்றார். இவர் முன்னதாக திவா அழகி 2021 பட்டம் வென்றார். மேலும், பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்ற மூன்றாவது இந்தியப் பெண்மணி ஆகிறார். சந்து முன்னதாக ஃபெமினா இந்திய அழகி பஞ்சாப் போட்டியில் வென்றுள்ளார். மேலும், பெமினா இந்திய அழகி 2019 போட்டியில் அரையிறுதிப் போட்டி வரை சென்றார்.

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சந்து குருஹர்சஹையில் பஞ்சாபி சீக்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். [1] இவர் கலியா பப்ளிக் பள்ளி மற்றும் பெண்களுக்கான முதுகலைப் படிப்புகளுக்கான அரசு கல்லூரியிலும் பயின்றார். பிரபஞ்ச அழகிப் பட்டத்திற்கான போட்டிகளில் கலந்து கொள்வதைத் தவிர, ஹர்னாஸ் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். [2] பஞ்சாபி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் . 

அழகுப்போட்டி அணிவகுப்பு[தொகு]

சந்து பதின்ம வயதிலேயே அழகிப்போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஃபெரோஸ்பூர் அழகிப்போட்டி 2017 மற்றும் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்திய அழகிப்போட்டி 2018 போன்ற பட்டங்களை வென்றார் [3] ஃபெமினா இந்தியா அழகி பஞ்சாப் 2019 பட்டத்தை வென்ற பிறகு, சந்து ஃபெமினா இந்திய அழகிப்போட்டியில் போட்டியிட்டார், அங்கு அவர் இறுதியில் முதல் 12 இடங்களுக்குள்ளான ஒரு இடத்தைப் பிடித்தார் [4] [5]

திவா அழகிப்போட்டி 2021[தொகு]

16 ஆகஸ்ட் 2021 அன்று, திவா அழகிப்போட்டி 2021 இன் முதல் 50 அரையிறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக சந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 23 அன்று, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திவா அழகிப் போட்டியில் போட்டியிடும் சிறந்த 20 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இவர் உறுதிப்படுத்தப்பட்டார். செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற முதற்கட்டப் போட்டியில், சந்து அழகிய தோலினை உடையவர் என்ற பட்டத்தை வென்றார். மேலும், நீச்சலுடை அழகி, அழகிய புன்னகை அழகி, ஒளிப்பட அழகி, பொதுப்பேச்சுத்திறனழகி ஆகியவற்றுக்கான இறுதிப் போட்டியாளரானார்.[6] [7]

பிரபஞ்ச அழகி 2021[தொகு]

திவா அழகிப்போட்டி 2021 வெற்றியாளராக, பிரபஞ்ச அழகி 2021 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை சந்து பெற்றார். [8] இப்போட்டியானது இஸ்ரேலின் ஏலாத்தில் 12 டிசம்பர் 2021 அன்று நடைபெற்றது. [9] சந்து 80 போட்டியாளர்களைக் கொண்ட ஆரம்பக் குழுவிலிருந்து முதல் பதினாறுக்கு முன்னேறினார், பின்னர் வெற்றியாளராக முடிசூட்டப்படுவதற்கு முன்பு முதல் பத்து, முதல் ஐந்து மற்றும் முதல் மூன்று இடங்களுக்கு முன்னேறினார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டில் சுஷ்மிதா சென் மற்றும் 2000 ஆம் ஆண்டில் லாரா தத்தாவிற்குப் பிறகு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற மூன்றாவது இந்தியப் பெண்மணி ஆனார்.[10] [11] [12]

மேற்கோள்கள்[தொகு]

 

 1. "मिस यूनिवर्स के लिए ऐसे तैयारी कर रही हैं हरनाज संधू, तीनों ही स्टार्स ने खोले जिंदगी के राज". Times Now (in Hindi). 11 October 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. https://www.hindustantimes.com/lifestyle/fashion/who-is-harnaaz-sandhu-the-miss-universe-2021-from-india-101639366116269.html
 3. "Harnaaz Sandhu: Everything About the Winner of LIVA Miss Diva Universe 2021". thetealmango.com.
 4. "Crowning the winners of Miss India North 2019". timesofindia.indiatimes.com.
 5. "Miss India 2019 Contestants". beautypageants.indiatimes.com.
 6. "Unveiling of LIVA Miss Diva 2021 Top 50 Contestants!". beautypageants.indiatimes.com.
 7. "Presenting the winners of LIVA Miss Diva 2021 sub-contest". beautypageants.indiatimes.com.
 8. "Harnaaz Sandhu Is Miss Universe India 2021, Ritika Khatnani Wins Miss Diva Supranational 2022 Title". latestly.com.
 9. "Miss Universe 2021 to be held in Israel, Steve Harvey to return as host". USA Today. 20 July 2021. பார்க்கப்பட்ட நாள் 20 July 2021.
 10. "India's Harnaaz Sandhu wins Miss Universe 2021". Philippine Star. 13 December 2021.
 11. "Harnaaz Sandhu of India named 70th Miss Universe". San Francisco Chronicle. 12 December 2021. Archived from the original on 13 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 12. "India's Harnaaz Sandhu Brings Home Miss Universe Crown After 21 Years". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்னாஷ்_சந்து&oldid=3573681" இலிருந்து மீள்விக்கப்பட்டது