உள்ளடக்கத்துக்குச் செல்

ஹர்னாய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்னாய் மாவட்டம்
ضلع ہرنائی
هرناۍ ولسوالۍ
மாவட்டம்
ஹர்னாய் மாவட்டத்தின் மலைகள்
ஹர்னாய் மாவட்டத்தின் மலைகள்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் மாவட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°06′20″N 67°56′23″E / 30.105447°N 67.939861°E / 30.105447; 67.939861
நாடு பாக்கித்தான்
மாகாணம் பலூசிஸ்தான்
கோட்டம்சிபி
தலைமையிடம்ஹர்னாய்
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி - துணை ஆணையாளர்)
பரப்பளவு
 • மாவட்டம்2,492 km2 (962 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • மாவட்டம்1,27,571
 • அடர்த்தி51/km2 (130/sq mi)
 • நகர்ப்புறம்
33,433 (26.21%)
 • நாட்டுப்புறம்
94,138 (73.79%)
எழுத்தறிவு
 • சராசரி எழுத்தறிவு
  • மொத்தம்:
    (39.83%)
  • ஆண்:
    (48.91%)
  • பெண்:
    (29.71%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)

ஹர்னாய் மாவட்டம் (Harnai District), பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ஹர்னாய் நகரம் ஆகும். ஹர்னாய் நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு 138 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 862கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ஹர்னாய் நகரத்தைச் சுற்றி மலைகள் சூழ்ந்துள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

ஹர்னாய் மாவட்டத்தின் வடக்கில் சியாரத் மாவட்டம், கிழக்கே & தெற்கே சிபி மாவட்டம், மேற்கே குவெட்டா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

வரலாறு

[தொகு]

சிபி மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு ஆகஸ்டு 2007ஆம் ஆண்டில் ஹர்னாய் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]

புவியியல் & தட்ப வெப்பம்

[தொகு]

ஹர்னாய் மாவட்டத்தைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளது. குளிர்காலத்தில் இதன் வெப்பநிலை −2˚C முதல் 20˚C வரையாகும்.கோடைக்காலத்தில் இதன் வெப்பநிலை 20˚C முதல் 48˚C வரை இருக்கும்.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]
வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[3]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[4]

ஒன்றியக் குழு
ஹர்னாய் வட்டம் 259 82,001 316.61 36.28% ...
ஷாரிக் வட்டம் 614 29,005 47.24 50.12% ...
கோஸ்ட் வட்டம் 1,619 16,565 10.23 40.35% ...

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 127,571 குடியிருப்புகள் கொண்ட ஹர்னாய் மாவட்ட மக்கள் தொகை 1,27,571 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 111.89 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 39.83% ஆகும்.[5][6]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 54,999 (43.11%) உள்ளனர்.[7]நகர்புறங்களில் 33,433 (26.21%) மக்கள் வாழ்கின்றனர்.[5]

சமயம்

[தொகு]

இதன் மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 99.37%, இந்து & கிறித்துவ சமயச் சிறுபான்மையோர் 0.65% உள்ளனர்.[8]

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழி]யை 89.24%, பலூச்சி மொழியை 8.20%, சிந்தி மொழியை 07% பேரும் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  2. Harnai is new district of Balochistan Dawn newspaper, Published 31 August 2007, Retrieved 7 February 2024
  3. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  4. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  5. 5.0 5.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்னாய்_மாவட்டம்&oldid=4310107" இலிருந்து மீள்விக்கப்பட்டது