ஹர்த்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹர்த்தால் (குஜராத்தி હડતાળ) என்ற சொல் தெற்காசிய மொழிகள் பலவற்றில் காணப்படுகிறது. தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, வேலை நிறுத்தம் அல்லது கடையடைப்பு செய்வர். இதை இச்சொல் கொண்டு குறிக்கின்றனர். முதன்முதலில், இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அரசின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்லது தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட, பெருமளவில் தங்கள் நிறுவனங்கள், அமைப்புகள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடுவர். இச்சொல்லின் மூலம் குசராத்தி மொழியின் ஹட்தால் என்பதாகும். கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, தங்கள் அலுவலகங்களை மூடுதல் என்பது இதன் பொருள். குசராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட காந்தி, பிரித்தானிய அரசிற்கு எதிராக இச்சொல்லை அதிகம் பயன்படுத்தினார். இது பின்னர்,மற்ற தெற்காசிய மொழிகளிலும் பரவியது.

இவ்வகையான வேலைநிறுத்தம் வங்காளதேசம், பாக்கிசுத்தான், இந்தியா, இலங்கை [1] [2] [3]ஆகிய நாடுகளில் பரவலாக கடைபிடிக்கப்படும் போராட்ட உத்திகளில் ஒன்று.

சான்றுகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

கடையடைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்த்தால்&oldid=3229924" இருந்து மீள்விக்கப்பட்டது