உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரேன் பாண்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரேன் பாண்டியா
குஜராத் மாநில அரசின் உள்துறைஅமைச்சர்
பதவியில்
4 மார்ச்சு 1998 – 6 அக்டோபர் 2001
குஜராத் மாநில அரசின் வருவாய்த் துறை இணையமைச்சர்
பதவியில்
7 அக்டோபர் 2001 – 13 ஆகஸ்ட் 2002
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1961-08-27)27 ஆகத்து 1961
குஜராத், இந்தியா
இறப்பு26 மார்ச்சு 2003(2003-03-26) (அகவை 41)
அகமதாபாத், குஜராத், இந்தியா
அரசியல் கட்சிபாஜக
துணைவர்ஜாக்ருதி பாண்டியா

ஹரேன் பாண்டியா (27 ஆகஸ்ட் 1961-26 மார்ச் 2003) குஜராத் மாநில அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர். 2003 ஆம் ஆண்டில் அகமதாபாத் நகரில் உள்ள சட்டப் பூங்காவில் காலைநடைப் பயிற்சியை முடித்துவிட்டு அவரது சீருந்தில் அமர்ந்திருந்தபோது கொல்லப்பட்டார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஹரேன் பாண்டியா அகமதாபாத் நகரத்தின் எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக குஜராத் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாண்டியா கேசுபாய் படேலின் தீவிர ஆதரவாளராக இருந்தார். 1998 ஆம் ஆண்டில், கேசுபாய் குஜராத்தின் முதலமைச்சரான பிறகு, பாண்டியா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] நரேந்திர மோடி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இவர் வருவாய்த் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஆகஸ்ட் 2002 இல் தன் பதவியைத் துறந்தார். தனக்கு 2002 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், தேர்தல் களத்தில் இருந்து விலகினார்.

2002 குஜராத் கலவரம்

[தொகு]

நவம்பர் 2007 இல், அவுட்லுக் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது. அச்செய்தியில், 2002 மே 27 அன்று நரேந்திர மோடி அவரது இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியதாகவும், அதில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் "மக்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும், இந்துக்களின் எதிர்ப்புக்கு இடையூறாக இருக்கக்கூடாது" என்றும் அறிவுறுத்தினார் என்று கூறியதாகவும் பாண்டியா அவுட்லுக் இதழிடம் தெரிவித்திருந்தார்.[3] ஆகஸ்ட் 19,2002 அன்று, பாண்டியா மீண்டும் அவுட்லுக்கிடம் பேசிய போது முன்பு கூறியதை மீண்டும் வலியுறுத்தியதோடு, இத்தகவலைத் தான் கசியவிட்டதாக வெளியே தெரிந்தால், தான் கொல்லப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.[3]

2002 குஜராத் கலவரம் குறித்த குடிமக்கள் தீர்ப்பாயத்தின் முன்னிலையிலும் பாண்டியா இதே தகவலை சாட்சியமளித்ததாகவும் தெரிகிறது.[4][5]

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஹரேன் பாண்டியா அத்தகைய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்றும், அத்தகைய கூற்று ஒரு "கற்பனையான கருத்து" என்றும் முடிவு செய்தது. ஹரேன் பாண்டியாவின் தொலைப்பேசி அழைப்புப் பதிவு, காந்திநகரில் உள்ள முதல்வரின் இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் இவர் அகமதாபாத் நகரில் இருந்ததைக் காட்டியது. இதன் அடிப்படையில் மோடி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாண்டியா கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க முடியாது என்று கருதப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களும், எந்த அமைச்சரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினர். ஹரேன் பாண்டியா உள்நோக்கத்துடன் திசைதிருப்பும் சாட்சியங்களை அளித்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு குற்றம் சாட்டியது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Subrahmaniam, Vidya (5 January 2012). "Haren Pandya's wife says he could not have been shot in his car". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/news/states/other-states/article2775107.ece. 
  2. "The Emperor Uncrowned | the Caravan - A Journal of Politics and Culture". Archived from the original on 1 October 2013. Retrieved 4 June 2013.
  3. 3.0 3.1 "A Midnight Meeting On Feb 27 And A Murdered Minister". Outlook. 12 November 2007. http://www.outlookindia.com/magazine/story/a-midnight-meeting-on-feb-27-and-a-murdered-minister/235982. பார்த்த நாள்: 19 September 2016. 
  4. "Did SIT ignore Haren Pandya testimony?". Hindustan Times. 21 February 2012. http://www.hindustantimes.com/india/did-sit-ignore-haren-pandya-testimony/story-CK8j8gg4AH6uRrwqjcx5EN.html. பார்த்த நாள்: 19 September 2016. 
  5. "The Emperor Uncrowned : The rise of Narendra Modi". Caravan magazine. March 2012. http://caravanmagazine.in/reportage/emperor-uncrowned#. பார்த்த நாள்: 20 September 2016. 
  6. "SIT report (Page 195,206,217)" (PDF). Supreme Court of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரேன்_பாண்டியா&oldid=4281513" இலிருந்து மீள்விக்கப்பட்டது