ஹரேகலா ஹஜப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹரேகலா ஹஜப்பா என்பவர் இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு தட்சிணா கன்னடா எனும் கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு ஆரஞ்சுப்பழ வியாபாரி ஆவார். தினமும் ஆரஞ்சு பழ வியாபாரம் செய்யும் இவருக்கு சமூக சேவைக்காக 2020ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.[1]

ஹரேகலா ஹஜப்பா
Hajabba Harekala.jpg
பிறப்புஹரேகலா ஹஜப்பா (வயது 55)
இருப்பிடம்தட்சிணா கன்னடா கிராமம்,மங்களூரு, கர்நாடகா, இந்தியா
தேசியம் இந்தியர்
பணிபழ வியாபாரம்
அறியப்படுவதுசமூக சேவை

சமூக சேவை[தொகு]

கர்நாடகாவில், தட்சிணா கன்னடா எனும் இடத்தில் வசித்து வரும் இவர் பள்ளிக்கூடமே இல்லாத தனது கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக பழ வியாபாரம் செய்து சம்பாதித்த தனது பணத்தை சேமித்து வைத்து ஒரு நிலம் வாங்கியுள்ளார். இதில் ஒரு பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டது.

தனது வருமானத்தைக் கொண்டு ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவுகிறார்.

மேலும், பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யும் பணிகளையும், பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

கல்வியின் தாக்கம்[தொகு]

"ஒரு வெளிநாட்டவர் என்னிடம் பழங்களின் விலையை ஆங்கிலத்தில் கேட்டபோது. அவர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது தான் எனது கல்வி அறிவு இல்லாததை உணர்ந்தேன். நான் வாழும் கிராமத்தில் கல்வி இல்லாதவர் இருக்க கூடாது எனும் உந்துதல் என்னுள் தோன்றியது. " என்று கூறியிருக்கிறார் ஹரேகலா ஹஜப்பா.[2]

பத்மஸ்ரீ விருது[தொகு]

இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்மஸ்ரீ விருதுக்கு ஹரேகலா ஹஜப்பா தேர்வாகி இருப்பதாக மத்திய அரசு கடந்த 25 மார்ச் 2020 அன்று அறிவித்தது.[3][4]

குறிப்புகள்[தொகு]

  1. அமைச்சகம் மற்றும் குடும்ப நலன் இந்திய அரசு[தொடர்பிழந்த இணைப்பு]
  2. என்.டி.டி.வி[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Sachin, Aswathy. "School Built by an Orange Seller : Story of Harekala Hajabba". Fantoosy.com. 2016-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Padma Awards 2020 Announced". pib.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரேகலா_ஹஜப்பா&oldid=3372724" இருந்து மீள்விக்கப்பட்டது