உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிஷ் குமார் (பெண்ணுடையாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி ஹரிஷ்
நடன நிகழ்ச்சியின் போது ராணி ஹரிஷ்
பிறப்புஹரிஷ் குமார்
1979 (1979)
ஜெய்சல்மேர், இராசத்தான், இந்தியா
இறப்பு2 சூன் 2019(2019-06-02) (அகவை 39–40)
சோத்பூர், இராசத்தான்
பணிநாட்டுப்புற நடனக்கலைஞர்
அறியப்படுவதுராஜஸ்தானிய நாட்டுப்புற நடனங்களுக்காக
பிள்ளைகள்2

ஹரிஷ் குமார் (1979 - 2 ஜூன் 2019) ராணி ஹரிஷ் என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனக் கலைஞராவார். ராஜஸ்தானியின் கூமர், கல்பெலியா, சாங், பவாய் மற்றும் சாரி போன்ற பல்வேறு நாட்டுப்புற நடனங்களின் மறுமலர்ச்சிக்காக கடுமையாக உழைத்த [1] இவரது நிகழ்ச்சிகளில் ராஜஸ்தானின் பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவங்கள் அனைத்தையுமே நிகழ்த்தியுள்ளார்.

சுயசரிதை

[தொகு]
பெண்ணுடையில் ராணி ஹரிஷ்

ஹரிஷ் குமார், 1979 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் உள்ள சுதர் சமூகத்தில் ஒரு தச்சர் குடும்பத்தில் பிறந்தவர். [2] [3] .சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த ஹரிஷ், தனது பதிமூன்றாம் வயதிலிருந்தே நடனத்தில் ஈடுபாடு கொண்டும், குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டும் தங்கைகளை பராமரிப்பதற்காகவும் பெண்ணுடை அணிந்து நடனம் ஆடி வந்துள்ளார். ஜெய்சால்மர் பிராந்தியத்தில் முதல் பெண்ணுடை கலைஞரான 'அன்னு மாஸ்டரின்' ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு, அவரிடமே  பெண்ணுடை நடனம் கற்கத் தொடங்கியுள்ளார். ஹரிஷ், அமெரிக்க பழங்குடி பாணி இடுப்பு நடனத்தை ராஜஸ்தானிய பாணியோடு இணைத்து அனைத்து பெண் அசைவுகளுக்கும் ஏற்ப தனது உடலை  அதிக திறன் கொண்டதாக மாற்ற கடுமையாக பயிற்சி செய்துள்ளார். [4]

ஹரிஷ், உலகின் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று, ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய நடன வகைகளான கூமர், கல்பெலியா, சாங், பாவாய், சாரி போன்றவைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்தியுள்ளார். ஆண்டுதோறும் ராஜஸ்தானில் நடைபெறும் பிரபலமான ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் சிறப்பம்சங்களில் இவரது நடன நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகும். [5] அவர் பிரஸ்ஸல்ஸில் ராக்ஸ் காங்கிரீ, சியோலில் பெல்லி டான்சிங் சாம்பியன்ஷிப் மற்றும் நியூயார்க் நகரில் டெசிலிசியஸ் ஆகிய நடனப்போட்டிகளிலும் பங்கெடுத்து ஆடியுள்ளார். [6] அவர் 'இந்தியாஸ் காட் டேலண்ட்' என்ற யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், அப்புடப்புடு (2003), ஜெய் கங்காஜல் (2016) மற்றும் தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். [7] [8] 2007 ஆம் ஆண்டில், அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஸ்மின் டெல்லாலின் வென் தி ரோட் பெண்ட்ஸ்: டேல்ஸ் ஆஃப் எ ஜிப்சி கேரவன் என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார். [9] [10] ராஜஸ்தான் அரசாங்கத்துடன் இணைந்து, ஜெய்சால்மரில் தி குயின் ஹரிஷ் ஷோ என்ற பெயரில் தினசரி மாலை நாட்டுப்புற நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். [11] ஜப்பானில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, நடனமிட வைத்து நடன மைப்பாளராக சாதனை நிகழ்த்தியுள்ளார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இறப்பு

[தொகு]

ஹரிஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். [12] தனது 39 வயதில், 2019 ஜூன் 2 அன்று, ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு அருகிலுள்ள கபர்தா கிராமத்தின் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் மரணித்துள்ளார். [13] ஒரு நடன நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த அவரோடு பயணித்த இன்னும் மூவரும் அந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Farewell, Queen Harish – India's most famous drag queen". Times of India Blog. 21 June 2019. https://timesofindia.indiatimes.com/blogs/rest-in-pieces/farewell-queen-harish-indias-most-famous-drag-queen/. 
  2. 2.0 2.1 "Jaipur diary: Rajasthan mourns folk dancer Queen Harish". https://www.newindianexpress.com/nation/2019/jun/06/jaipur-diary-rajasthan-mourns-folk-dancer-queen-harish-1986630.html. 
  3. "Obituary | Queen Harish, India's 'Dancing Desert Drag Queen'". https://thewire.in/lgbtqia/obituary-queen-harish-dancing-desert-drag-queen. 
  4. "Blush.me". Blush (in ஆங்கிலம்). Archived from the original on 7 February 2022. பார்க்கப்பட்ட நாள் 7 February 2022.
  5. "Dance like Queen Harish". 6 June 2019. https://www.thehindu.com/entertainment/dance/dance-like-queen-harish/article27546806.ece. 
  6. "Queen Harish of Jaisalmer, Traditional Dancers from Jaisalmer". www.jaisalmeronline.in (in ஆங்கிலம்).
  7. "Who was Queen Harish Kumar?". https://www.dnaindia.com/india/report-who-was-queen-harish-kumar-2756490. 
  8. "Harish". IMDb.
  9. Roy, Sandip (22 July 2008). "Queen Harish dances in drag". SFGATE.
  10. "Rajasthani folk dancer Queen Harish dies in road accident". 3 June 2019. https://indianexpress.com/article/india/rajasthani-folk-dancer-queen-harish-kumardies-in-road-accident-5761665/. 
  11. "Queen Harish: The Man, The Woman, The Performer". 4 March 2018. https://enewsroom.in/queen-harish-man-woman-performer/. 
  12. Soparrkar, Sandip (10 June 2019). "Queen Harish: The man, the woman & the mystery will stay the same forever". The Asian Age. https://www.asianage.com/life/more-features/100619/queen-harish-the-man-the-woman-the-mystery-will-stay-the-same-forever.html. 
  13. ഡെസ്ക്, വെബ് (2 June 2019). "നാടോടി നർത്തകൻ ക്വീൻ ഹാരിഷ് വാഹനാപകടത്തിൽ മരിച്ചു". www.madhyamam.com. https://www.madhyamam.com/india/queen-harish-rajasthans-top-folk-dancer-killed-suv-accident/613934.