ஹரிஷ் ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹரிஷ் ஐயர்(Harish Iyer) "அஹம்", [1] ஹயர் என அறியப்படும் "ஹரிஷ் ஐயர்" (பிறப்பு 16 ஏப்ரல் 1979) ஓர் இந்திய சம உரிமை ஆர்வலர் ஆவார். [2] [3] அகனள், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலர் மற்றும் திருநங்கைகள் ( ந,ந,ஈ,தி ) சமூகம், குழந்தைகள், பெண்கள், விலங்குகள் மற்றும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்கள் ஆகியோரின் உரிமைகளை ஊக்குவிப்பது உட்பட பல சமூக காரணங்களுக்காகப் போராடி வருகிறார். [4]

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் இவர் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார். இவர் இந்த முடிவின் தாக்கம் குறித்து பல விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார், மேலும் ஊடகங்களின் மூலம் இந்தத் தீர்ப்பை கண்டித்தார். இது தொடர்பாக பல கட்டுரைகள் மற்றும் கடிதங்களை எழுதியுள்ளார் மற்றும் இந்த முடிவை அடுத்து இந்தியாவில் ந,ந,ஈ,தி சமூகத்தின் அவலத்தை முன்னிலைப்படுத்த தேசிய தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். [5] [6] ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்கும் நடவடிக்கையைத் தடுக்க இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். [7] ஆகஸ்ட் 2018 இல், தேசிய மனித உரிமைகள் ஆணையம் ந,ந,ஈ,தி பிரச்சினைகளைப் பற்றி ஆராயும் முதன்மை குழுல் இவரைச் சேர்த்தது. ந,ந,ஈ,தி சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவர்களுக்கன தேவைகள் குறித்தும் அறிவதற்காக அமைக்கப்பட்ட முதல் குழு இதுவாகும்.[8]

செயற்பாட்டாளராக[தொகு]

ஐயர், தனது வலைப்பக்கம் , முகநூல் , டுவிட்டர் கணக்குகளின் மூலம் தொடச்சியாக பல சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதலின் போது தனது வலைப்பக்கத்தினை உதவிமையமாக மாற்றியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[9]

விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்[தொகு]

இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமான,பாரத பெட்ரோலியம், ஹரீஷ் ஐயர் 2016 ஆம் ஆண்டில் மகளிர் அதிகாரமளித்தல் துறையில் பணியாற்றியதற்காக ஆற்றல்மிக்க பாரத் விருதை வழங்கியது. இந்த விருதை இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இவருக்கு வழங்கினார். [10]

பிரிட்டிஷ் தேசிய நாளிதழான தி கார்டியன், உலகின் 100 செல்வாக்குள்ள ந,ந,ஈ,தி நபர்களின் பட்டியலில் இவருக்கு 71ஆம் இடம் வழங்கியது.இந்தப் பட்டியலில் இதுவரை இடம்பெற்ற ஒரே இந்தியர் எனும் பெருமை பெற்றார். [11]

பிங்க் பேஜஸ் , இந்தியாவின் ஏழு செல்வாக்குள்ள ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் அகனள் மக்களில் ஒருவராக இவரை அறிவித்தது. [12]

குழந்தை பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் பணிக்காக ஜிந்தகி லைவ் விருது பெற்றார்.. [13]

ஹரிஷ் ஐயர், டெட் மாநாடுகளில் பல முறை பேசியுள்ளார். மேலும் பல முறை சுயாதீனமாக டெட் மாநாட்டினை நடத்தியுள்ளார்."செக்ஸ் பற்றி பேசும் கலாச்சாரம் நம்மிடம் இருந்தால் என்ன" என்ற தலைப்பு உட்பட பலமுறை பேசியுள்ளார்.[14]

அவரது பேச்சு திறமை மற்றும் உணர்ச்சிவசப்படும் திறனைக் கருத்தில் கொண்டு, ஐயர் இந்தியாவில் ஊக்கமூட்டும் பேச்சாளார்களில் ஒருவராக அறியப்படுகிறார். [15]

2013இல் கொல்கத்தாவில் நடைபெற்ற தெகல்கா மாநாட்டில் இவர் பேசினார். அந்த மாநாட்டில் ராபர்ட் டி நிரோ, அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், சேகர் கபூர், கிரிஷ் கர்னாட் மற்றும் மேதா பட்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.[16] இவர் 2015ஆம் ஆண்டில் கர்மவீரர் புரஸ்காரையும் பெற்றுள்ளார். [17]

சான்றுகள்[தொகு]

 1. "Coming Out Is A Process Not An Impulsive Decision". gaysifamily.
 2. "Harish Iyer's introduction on Pink Pages". Pink-Pages.co.in.
 3. "Gender is but a biological accident". Tehelka. மூல முகவரியிலிருந்து 29 October 2012 அன்று பரணிடப்பட்டது.
 4. Bhamgara, Kaizad. "Fighting For Gay Pride". Burrp. மூல முகவரியிலிருந்து 5 March 2014 அன்று பரணிடப்பட்டது.
 5. "Being Gay in India - India Real Time - WSJ" (2013-12-11).
 6. "What's illegal about love, your lordships?" (2013-12-11).
 7. "SC to start hearing petitions to read down Section 377". cjp.org.in.
 8. "NHRC sets up LGBTI Core Group Ropes in activist Harish Iyer". cjp.org.in.
 9. Whiteman, Hilary (28 November 2008). "Blogging in the wake of terror". CNN. http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/11/27/bloggers.mumbai/. 
 10. "Winners' Citations". OPEN Magazine (2016-02-12).
 11. "The 100 most influential LGBT people of 2013". 29 June 2013. Archived from the original on 2 ஜூலை 2013. https://web.archive.org/web/20130702190415/http://careers.guardian.co.uk/world-pride-power-list-2013-11-100. பார்த்த நாள்: 29 June 2013. 
 12. "The Solid Seven: India's most influential Gays & Lesbians". Pink Pages.
 13. "Zindagi Live Awards". CNN IBN. மூல முகவரியிலிருந்து 29 October 2011 அன்று பரணிடப்பட்டது.
 14. "What if we had a culture of speaking about sex?: Harish Iyer at TEDxMasala". YouTube (2013-02-12).
 15. "8 Fiery Motivational Speakers In India". மூல முகவரியிலிருந்து 2016-09-21 அன்று பரணிடப்பட்டது.
 16. Davidson, Kumam. "Activist Harish Iyer To Speak at Tehelka's Think Conference". Gaylaxy.com.
 17. Joshi, Pranav. "Equal Rights Activist Harish Iyer wins Rex Karamveer Global Fellowship Award".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஷ்_ஐயர்&oldid=3372722" இருந்து மீள்விக்கப்பட்டது